nalaeram_logo.jpg
(3815)

கண்ணேயுன்னைக் காணக்கருதி என்னெஞ்சம்

எண்ணேகொண்ட சிந்தையநாய்நின்றியம்பும்

விண்ணோர் முனிவர்க்கென்றும் காண்பரியாயை

நண்ணாதொழியேனென்று நானழைப்பனே.

பதவுரை

கண்ணே

எனக்குக் கண்ணாளவனே

என் நெஞ்சம்

எனது நெஞ்சானது

உன்னைகாண கருதி

உன்னையே காண வாசைப்பட்டு

எண்ணே கொண்ட சிந்தையது ஆய் என்று

பல பல மநோரதங்களைப் பண்ணி நின்று

இயம்பும்

அலற்றா நிற்கும்

நான்

நானோ வென்னில்

விண்ணோர்

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் முனிவர்க்கு

என்றும் காண்பு

என்றும் காணவரியளன உன்னை அரியாயை

கண்ணா தொழியேன் என்று அழைப்பன்

கிட்டாமல் விடுவதில்லை யென்று உறுதி கொண்டு கூப்பிடா நின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– கீழ்ப்பாட்டில் தம்முடைய கண்களுக்குண்டான நசையைப் பேசினார். இப்பாட்டில் தமக்கும் தம்முடைய நெஞ்சுக்குமுண்டான சாபலத்தைச் சொல்லுகிறார்.  எம்பெருமானைக் கண்ணே!   யென்று விளக்கிறார்.  •••• தேவாநாமுத மர்த்யாநாம் என்று கருதியும் எம்பெருமானைக் கண்ணாகச் சொல்லிற்று.  எல்லாவற்றையுங் காண்பதற்குக் கண் ஸரதனமாயிருப்பதுபோல அவனைக் காண்பதற்கும் அவனே ஸாதனமாயிருத்தலால், அவனைக் கண்ணெனத் தனும். கண்ணிழந்தவர்கள் எதையும் காண மாட்டாததுபோல எம்பெருமானை யிழந்தவர்களும் எதையும் காணமாட்டாமையு முணர்க. "என்னெஞ்சம் என்னைக் காணக் கருதி"  என்று, தம்முடைய நெஞ்சு அவனைக் காணக் கருவதாகக் கூறுகிறார். மநஸ் ஸஹகாரமுடைய கண்காண்பதையே இங்ஙனம் கூறினாரென்க.  தாம் மனத்தை ஓரிடத்தே வைத்துவிட்டுக் கண்ணை மற்றோரிடத்தே செலுத்தினால் அக் கண்ணுக்கு ஒன்றும் புலப்படாதென்பது அநுபவஸித்தம்.  காண்கைக்குக் கண் கருவியானாலும் நெஞ்சுதான் முக்கியமான கருவியென்பது இதனால் பெறப்பட்டது.  ஸம்ஸாரிகளுடைய நெஞ்சும் கண்ணும் விஷயாந்தரங்களிலே பரகுபாகென்று பரந்திருக்கும். ஆழ்வாருடைய நெஞ்சும் கண்ணும் •••• –யஸ்யாம் ஸாசரதி பூதாநி ஸா நிசர பச்யதோ முநே என்று கீதையிலே சொன்ன கணக்கிலே வகுத்த விஷயமோன்றிலேயே ஏகாக்ரமாயிருக்கும்.  •••• சசணீச்ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண, ச்ரோத்ரஞ்ச ச்ரோதவ்யஞ்ச நாராயண:  என்ற உபநிஷத்து ஆழ்வார் பக்கலிலேயே ஸமந்வயம் பெறுமென்க.

எண்ணேகோண்ட சிந்தையதாய் நின்று– 'எண்கொண்ட' என்றது–பல எண்ணிக்கைகளைக் கொண்ட என்றபடி, 'ருணவாந்' என்றால் பல குணங்களையுடையவனென்றும், 'தநவாந்' என்றால் பல தனங்களையுடையவனென்றும் பொருள்படுவதொக்கும். பலபல மனோரதங்களைப் பண்ணாநின்றதென்றபடி.  ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் ••••"சுதாஅஹம்" என்று தொடங்கி" – •••ஆசாம் வர்த்தயித்வ" என்னுமளவும் அருளிச் செய்யப்பட்டுள்ள மநோரத ப்ரகாரங்களை நினைப்பது.

நின்று இயம்பும்–நிரந்தமாகக் கதறாநின்ற தென்றபடி ஆக நெஞ்சு ஒன்றே கண்ணின் செயலையும் வாக்கின் செயலையும் ஏறிட்டுக் கொண்டமை சொல்லிற்றாயிற்று.  இனி தம்முடைய செயலைச் சொல்லுகிறார் விண்ணோர் என்று தொடங்கி. பிரமன் முதலிய தேவர்கட்கும் ஸநக ஸநந்தநாதி மஹர்ஷிகளுக்குங்கூட நீ துர்லபனென்பதை நானறிவேன்.  அவர்களுக்கு துர்லபனானால் எனக்கும் துர்லபனாக வேணுமென்று நிர்ப்பந்தமில்லையே.  மயர்வற மதிநலமருளப்பெற்ற ஏற்றம் எனக்குண்டே ஆகவே நான் உன்னைக் கிட்டா தொழியேன், கிட்டியே தீருவேன் என்று திடமான அத்யவஸாயங் கொண்டு கூப்பிடா நின்றேன் என்றாராயிற்று.

English Translation

Lord, desirous of seeing you, my heart speaks countless thoughts, I call, "I shall not let you go" Alas, he evades even the gods and sages!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain