(3812)

தாளாதாமரையான் உனதுந்மதியான்

வால் கொள்நீள்மழுவாளி உன்னாகத்தான்

ஆளராய்த் தொழுவாகும் அமரர்கள்

நாளுமேன்புகழ்கோ உனசீலமே.

 

பதவுரை

தாள தாமரையான்

காளையுடைய தாமரையிற் பிறந்த பிரான்

உனது உந்தியான்

உன்னுடைய உந்தையைப் பற்றினவன்

வாள் கொள் நின் மழு ஆளி

ஒளி பொருந்திய நீண்ட மழுப்படையை யுடைய ருத்தன்

உன் ஆகத்தான்

உனது திருமேனியில் ஒரு பந்தத்தைப் பற்றினவன்

ஆளர் ஆய் தொழுவாரும் அமரர்கள்

அடியார்களாய்ப் பணிகின்றவர்களும் தேவர்கள்

உன் சீலம்

உன்னுடைய சீல குணத்தை

நாளும் என் புகழ்கோ

காலமெல்லாம் புகழ்ந்தாலும் என்னவென்று புகழ்வேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– ப்ரயோஜநாந்தர பார்களாய் அடிமைச் சுவடு அறியாதவர்களான பிரமன் முதலிய தேவர்களுக்கும் முகங்கொடுக்குமவனான உன்னுடைய சீலகுணம் என் வாக்குக்கு நிலமன்றோ யென்கிறார்.  தாளதாமரையான் உனதுந்தியான்– தாமரைப் பூவைப் பிறப்பிடமான வுடையனான பிரமன் உனது திருநாபியைப் பற்றியிராநின்றான்.  தாமரையிற் பிறந்தோ மென்று துர்மான முடையவனான அவனுக்கு உடம்பு கொடுத்தது என்னே என்று வியக்கிற படி.  வாள்கொள்நீள்மழுவாளி உன்னாகத்தான்– தொடையொத்த துளபமுங் குடையும் பொலிந்து தோன்றியதோள் தொண்டரப்பொடி என்னுமாபோலே சேஷத்வலக்ஷணம் பொலிந்திருக்கையன்றிக்கே கொலைக் கருவியான மழுவையுடைய வொருவன் உன்திருமேனியிலேக தேசத்தைப் பற்றி யிரா நின்றான்.  அந்த துர்மானிக்கு முட்பட உடம்பு கொடுத்த நீலம் என்னே!  என்று வியக்கிறபடி.

ஆளராய்த் தொழுவாரு மமரர்கள்–அமரர் என்கிற பெயர் நித்யஸுரிகளுக்கே உரித்தாயிருக்க, ப்ரயோஜநாந்தரபார்களான தேவர்களும் அப்பெயரைப் பூண்டு கொண்டு உனக்கு ஆட்பட்டவர்களாகத் தம்மைச் சொல்லிக் கொண்டு திரிவதும் அவர்களுக்குங்கூட முகங்கொடுப்பதும் என்னே! என்று வியக்கிறபடி.  உலாசீலம் நாளும் என் புகழ்கோ= காலதத்வமெல்லாங்கூடினாலும் உன்னுடைய சிலத்தை எத்தைச் சொல்லிப் புகழ்வேன்!

 

English Translation

Brahma sits on your lotus-navel.  Siva occupies your right side, Celestials stand around you and worship.  Can I ever praise you fully?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain