(3811)

தொழுதுமாமலர் நீர்சுடர்தூபம் கொண்டு

எழுதுமென்னாமிது மிகையாதலில்

பழுதில்தோல்புகழ்ப் பாம்பணைப்பள்ளியாய்

தழுவுமாற்றியேன் உனதாள்களே.

 

பதவுரை

மாமலர்

சிறந்த புஷ்பங்களையும்

நீர் சுடர் தூபம்

தீர்த்தம் தீபம் தூபூம் இளைகளையும்

கொண்டு

எந்திக் கொண்டு

சொழுது எழுதும் என்னுமிது

அடிமனை செய்து மென்றால் இது

பழுது இல்தொல் புகழ்

(ஆரா திக்கைக்கு அரியன்) என்கிற அலத்யமின்றிக்கே இயற்கையான புகழையுடைய

உன தாள்கள்

உனது திருவடிகளை

தழுவும் ஆறு அறியேன்

கிட்டும் விரகு அறிகின்றறேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– கீழ்ப்பாட்டில் வேக்கடம் சென்று தேவர்கள் கைதொழுவார்களே என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ஆழ்வீர்! மதிருவேங்கடன் சென்று கை தொழுவது அத்தனை யருமையன்று காணம் மதுஷயர்களெல்லாருஞ் சென்று கை தொழுமிடமேயது நீரும் வந்து கை தொழுது க்ருதாருத்யகலமே என்று கூற, அதற்கு விடையளிக்கிற தீப்பாசுரம். தெழிகுலளித் திருவேங்கடத் தெழில் கொள்சோதி யெந்தைதந்தை தந்தைக்கு ஒழிவில் காலமெல்லா முடனாய் பள்ளி வழுவிலாவடிமை செய்ய வேண்டு நாம் என்று அவ்விடத்தே வந்து கைங்கள் செய்து வாழ வேணுமென்று ஏற்கனவே நான் பாரித்திருத்துமுண்டு, ஆலோசித்தும் பார்க்குமிடத்தில், தூபதீப புஷ்பாதிகளைக் கொண்டு அடிமை செய்வோமென்றால் அதுவும் பீகை என்னும்படியன்றோ உன் ஸ்வபாவமிருப்பது நான் என்ன அடிமை செய்து என்று தடுமாறுகிறார். ••• பூயிஷ்டாம் தே நமஉக்திம் விதெம என்கிற கருதி வாக்யத்திற்கு–அதிகமான நம உக்தியை உனக்கு செய்வோம் என்று சிலர் பொருள் கூறுவர்;  பூயிஷ்டாம் நமஉக்திம் தே விதேம் என்று அந்வயங்கொண்டு அங்ஙனே பொருள் கூறுகின்றார்கள்.   நம் ஆசாரியர்கள் அருளிச் செய்யும் பொருள் அதுவன்று;  'தே பூயிஷ்டாம் நமஉக்திம் விதேம' என்று அந்வயித்து தேவரீருடைய திருவுள்ளத்தாலே மிகையான நமஉக்தியைப் பண்ணக் கடவோம் என்று இங்ஙனே பொருளுரைப்பார்.நம:  என்று சொல்வதையும் எம் பெருமான் மிகையாக நினைப்பவனாம். தே என்பதற்கு 'உன்னுடைய கருத்தாலே' என்கிற பொருள் ஸம்பவிக்குமோ லென்னில்; "நையாயிகஸ்ய வாயு அப்ரத்யக்ஷ" என்றால் “நையாயிகஸ்ய மதே“ என்று பொருளாகவில்லையோ. "லோபச் சாகல்யஸ்ய" என்பது ஒரு வியாகரண ஸீத்ரம்.  சாகல்ய முனிவர்க்கு லோபம் என்பதாக இதற்குப் பொருளன்றே; 'சாசல்ய முனிவருடைய கருத்தாலே லோபம்' என்றுதானே பொருள். அப்படியே 'தே பூயிஷ்டாம்' என்றது உன் கருத்தாலே பூயிஷ்டமான என்று பொருள் படக் குறையில்லை.  ஆக பூயிஷ்டாம் தே நமக்திம் விதேம என்கிற ச்ருதிவாக்யத்திற்கு நம் ஆசாரியர்கள் இங்ஙனே பொருள் திருவுள்ளம் பற்றுவதற்கு நிதாநம் இப்பாசுரமேயாகும். அந்த ச்ருவாக்யத்திற்கு ஆழ்வார் இங்ஙனே பொருள் கொண்டாரென்பது இப்பாசுரத்தினால் நன்கு விளங்கும்.

மாமலர் நீர்சுடர் தூபங்கொண்டு தொழுதேழுது மென்னுமிது மிக=செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி முதலிய நன் மலர்களைக் கொண்டும், அர்க்ய பாத்ய ஆசமநீயாதிகளுக்குரிய தீர்த்ததைக் கொண்டும், மற்றும் தீபம் தூபம் முதலிய உபகரங்களை கொண்டும் தொழுது [அடிமை செய்து] உஜ்ஜீவிப் போமென்றால் இதையும் மிகையாக நினைப்பவனன்றோ நீ என்றபடி.  ஆதலில் உனதாள்கள் தழுவுமாறு அறியேன் = ஆகவே உன்னுடைய திருவடிகளைக் கிட்டும் விரகு அறிகின்றிலேன்.  நாம் செய்யும் ஸ்வல்பகிஞ்சிக் காரத்தையும் பஹீவாக நினைக்கு முன்னுடைய சீலத்தை நினைத்தவாறே என்று கூட்டிக் கொள்வது.

பழுதில் தொல்புகழ் என்றது–ஆராதனைக் கெளியன் என்கிற புகழ் மிக்கவனென்றபடி.  பாம்பணைப்பள்ளியாய் என்றது–சென்றால் குடையாமிருந்தால் சிங்காசனமாம்.  திருமாற்கு அரவு என்கிறபடியே ஸநலவித கைங்கரியங்களும் செய்ய பாக்கியம் படைத்த திருவனந்தாழ்வான் போல் வாரனறோ உனக்கு அடிமை செய்து வாழ்வார் அந்த பாக்கியம் என்போல்வார்க்கு உண்டோ? என்ற குறையைக் காட்டுகிறபடி

 

English Translation

O Lord of glory on serpent couch!  Worshipping you with flowers, water, lamp and incense is superfluous.  Alas, I know not how to serve you feet

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain