(3809)

ஆகம்சேர் நரசிங்கமதாகி ஓர்

ஆகம்வள்ளுகிரால் பிளந்தானுறை

மாகவைகுந்தம் காண்பதற்கு என்மனம்

ஏகமெண்ணு மிராப்பகவின்றியே.

 

பதவுரை

ஆகம்சேர்

ஒரு வடிவிலே பொருந்தின

நரசிங்கம் அது ஆகி

மதுஷ்யமூர்த்தியும், ஸிம்ஹ மூர்த்தி யுமுடையனாகி

ஓர் ஆகம்

(இரணியனது) ஓரு உவகை

பிளந்தான் உறை

பிளந்தவனான எம்பெருமான்

மாகம் வைகுந்தம்

பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்தை

காண்பதற்கு

காண்கைக்கு

இரா பகல் இன்றியே

இரவென்றும் பகலென்றும் வாசியின்றிக்கே

என் மனம் ஏகம் எண்ணும்

என்மனம் ஒரே விதமாக எண்ணுகின்றது

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– எம்பெருமான் இவ்விடத்தே செய்த சேஷ்டிதங்களை யநுஸந்தித்து உருகின நெஞ்சு அன்னவனுறையும் திருநாட்டைச் சென்று காணவிழைகின்ற தென்கிறாரிப்பாட்டில் (ஆகஞ்சேர் நரசிங்கமதாகி) மநுஷ்யசரீரத்தில் ஸிம்ஹசரீரம்கலகாது ஸிம்ஹ சரீரத்தில் மநுஷ்யசரீரம் கலகாது இங்ஙனே உலகவியல் பாயிருக்க, ஓராகத்திலே நாமும் சிங்கமும் சேர்ந்தாயிற்று அவனுடைய விலக்ஷணஸங்கல்பத்தாலே ••• விருத்தே வையக்ரீஸுகடிதஸமாநாதிகாணே ந்ருஸிம்ஹத்வே பிப்ரத் (ஸ்ரீரங்கராஜஸ்தவம்) என்று பட்டரருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம் "ஆகம்சேர்" என்பதற்கு–ஒரு வடிவிலே பொருந்திச் சேர்ந்த என்று இங்ஙசே பொருள் கொள்வதிற்காட்டிலும் மற்றொரு வகையான பொருள் மிகச் சிறக்கும் ஆகம் என்று நம்முடைய திருவுள்ளத்தைச் சொன்னபடியார், தமது நெஞ்சிலே மறக்க வொண்ணாதபடி சேர்ந்த நரசிங்கம்–என்று சிறுத்தனைக்காகவும் செருக்கனை முடிக்கவும் ஒருகால் தோன்றி மறைந்த திருவுருவமாயிலும் அது ஆழ்வார்போன்ற பரமபக்தர்களின் உள்ளத்திலே ஸ்தாவரப்ரதிஷ்டையாயிருக்குமே.

ஓராகம் வள்ளுகிரால் பிளந்தான்–இரணியனுடைய முரட்டுடம்பைத் தநது வாயால் சொல்லக்கூசி 'ஓராகம்' என்கிறார். அதனைக் கூரியவுகிரால் ஆயாஸமின்றிப் பிளந்த பெருமான் நித்யாவாஸம்பண்ணுகிற மாகவைகுந்தம் (மஹகம்) என்கிற வடசொல் மாகமெனத் திரிந்தது. "பரமே வ்யோமந்" என்று வேதத்தில் சொல்லுகிறபடி வைகுந்தம் பரமாகாச சப்தவாச்யமாதலால் மாகம் என்றது.  மாகம் என்று ஒரு தமிழ்ச் கொல் உண்டென்றும், அது பெருமைக்கு வாசகமென்றும் சொல்லுவர் சிலல் அப்போது பெருமை தங்கிய வைகுற்தமென்றதாகும்.  அதனைக் காண்பதற்கு, எம்மனம் இராப்பகலின்றியே ஏகமெண்ணும் – என்னுடைய ஹருதயமானது எப்போதும் மநோரதியாநின்றது.  இராப்பலவின்றியேன்றது–இரவென்றும் பகலென்றும் வாசியல்லாதபடி யென்றவாறு.  ஸம்ஸாரிகளுக்கு இரவொருகாரியமும் பகலொரு காரியமுமாயிருக்கும் ஆழ்வார்க்கு எப்போதும் ஒரே காரியமேயுள்ளது.  ஏகம்–வடசொல்.

 

English Translation

My heart hankers night and day for one Vision of Vaikunta where the Lord dwells.  He tore the wide chest of the Asura with his nails

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain