(3807)

மனமேயன்னை வல்வினையேனிரந்து

கனமேசொல்லினேன் இதுசோரேல்கண்டாய்

புனமேலிய பூந்தண்டுழாயலங்கல்

இனமேதுமிலானை அடைவதுமே.

 

பதவுரை

மனமே

நெஞ்சே !

வல் வீனையேன்

வல்லினையேனான நான்

உன்னை இரந்து

உன்னை வேண்டிக் கொண்டு

கனமே சொல்லினேன்

திடமாகவொன்று சொல்லுகிறேன்.

இது சோரேல்கண்டாய்

இதனை நழுவவிடாதே கொள்

(அதாவதென்னென்னில்)

புனம் மேலிய பூ பூதண் அழாய் அலங்கல்

தன்னிலத்தில் வளர்ந்த செல்லித் திருத்துழாய் மாலையையுடையனாய்

எதும் இனம் இலானை

(அவ்வழக்கு) ஒரு விதத்திலும் ஒப்பில்லாதவனான பெருமானை

அடைவதும்

கிட்டவேணு மென்கிறலிதான்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கீழ்ப்பாட்டில் சொன்னதையே வற்புறுத்திச் சொல்லுகிறாரிதில், உலகில் ஒருவர் ஒரு விஷயஞ்சொன்னால் அதனை ஸாமான்யமென்று கருதி உபேக்ஷித்திருப்பாருமுண்டே. அப்படி உபேக்ஷிக்கத்தக்க வார்த்தையன்றிது. அவசியம் கைக்கொள்ளத் தக்கது என்று ருசிப்பிக்கிறபடி.  மனமே! வல்லனையேன் உன்னையிரந்து இது கனமே சொல்லினேன்–பால் குடிக்கக் கால்பிடிப்பாரில்லையுலகில். நானோ உன்னைப் பால் குடிக்கக் கால்பிடிக்கிறேன்காண் நெஞ்சே! * முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே!* என்று நான் முன்பேசொல்லி வைக்கும்படி நல்லதிலே முற்பட்டு ஈடுபட்டிருக்கிறவுனக்கு எம்பெருமானிடத்தில் ப்ராவண்யம் இயற்கையாயிருக்க உனக்கு நான் சொல்லவேண்டுவதொன்றில்லை என் செல்லாமையாலே சொல்லுகிறேனித்தனை காண்.  என்கிற வடசொல் கனமெனத்திரிந்தது திடமாக வென்றபடி.  கனகம் என்ற வடசொல் கனமெனச் சிதைந்ததென்றுங் கொள்ளலாம். பொன் போன்ற பரமாத்தத்தை யென்றபடி.  இது சோரேல்–இந்த வார்த்தையை உபேக்ஷியாதேகொள்.  எந்தவார்த்தையை யென்ன, பின்னடிகளால் அதனை விவரிக்கிறார்.

[புனமேவிய பூந்தண்டுழாயலங்கலினமேது மிலானை யடைவதுமே] பரமபோக்யனான அவனை ஆச்ரயித்திருக்கை யென்னுமிவ்வர்த்தமே.  தன்னிலத்திலே வளர்ந்து அழகிதான திருத்துழாய் மாலையை பணிந்து "தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் நாளிணைமேலும் புளைந்த தண்ணந்துழாயுடையம்மான்" என்று வாய்நிறையப் பேசும் படியான போக்யதை வாய்ந்த ஸர்வாதிகளை விட்டு பிரியாமையாக்கிற இவ்வர்த்தத்தையே திடமாகச் சொன்னாராயிற்று.

 

English Translation

The Lord of fragrant Tulasi garland is one without a second, experience him, I beg of you, O Heart, pray take heed; Never let him leave you

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain