(3806)

மருந்தே நங்கள்போகமகிழ்ச்சிக் கென்று

பெருந்தேவர்குழாங்கள் பிதற்றும்பிரான்

கருந்தேவனெம்மான் கண்ணன் விண்ணுலகம்

தருந்தேவனைச் சோரேல்கண்டாய்மனமே.

 

பதவுரை

நங்கள் போகம் மகிழ்ச்சிக்கு மருந்தே என்று

உன்னுடைய அநுபவத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்தை ஸாத்மிப்பிக்கும் மருந்தானவனே என்று

பெருந்தேவர் குழாங்கள்

நித்பஸுரிகணங்கள்

பிதற்றும்பிரான்

வாய்வெருவும்படியான ஸ்வாமியாய்

கருதேவன்

கரிய திருமேனியை யுடையனாய்

எல்லாம் கண்ணன்

எமக்கு ஸ்வாமியான க்ருஷ்ணனாய்

விண் உலகம் தருமதேவனை

பரமபத போகத்தைத் தரவானான பெருமானை

மனனே சோரேல் கண்டாய்

நெஞ்சே நழுவவிடாதே கொள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– நித்ய ஸுரிகளுக்குப் பேரம போக்யனாயிருந்து வைத்து அங்கு நின்றும் போந்து க்ருஷ்ணனாயவதரித்து நம்மையும் நித்யஸுரிகள் நடுவே கொண்டு வைக்குமவனாயிருக்கிற எம்பெருமானை ஒருவாறு கிட்டப்பெற்றோம், நெஞ்சே அவனை விடாதேகொள் என்று தம்திருவுள்ளத்தை நோக்கி யருளிச்செய்கிற பாசுரமிது.

நாங்கள் போகமகிழ்ச்சிக்கு மருந்தேயென்று பெருந்தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் என்கிறவிதற்கு–பகவத்விஷய ப்ரஸ்தாநத்தில் ஒருவகையான அர்த்தமும் ரஹஸ்ய ப்ரஸ்நத்தில் மற்றொரு வகையான அர்த்தமும் ஸம்ப்ரதாயஸித்தம் “உன்னழகாலே எங்கள் போகத்துக்கு வத்த கனானவனேயென்று பெருந்தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்” என்பது ஆறாயிரப்படியருளிச்செயல்.  உன்னுடைய அநுபத்தால் எங்களுக்கு வருமானந்தத்துக்கு வத்த கனானவனே என்பது ஈடு முதலிய வியாக்கியானங்களிலருளிச் செயல்.  இனி, முமுக்ஷப்படியில் பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்யுமது கேண்மின்;  அதில் த்வயார்த்ததை விவரித்தருளுமிடத்து (த்வயப்ரகரணத்தின் முடிவில்) நமஸ்ஸீக்குப் பொருளருளிச் செய்கையில் (180) “நம: –கைகங்கர்யத்தில் களையறுக்கிறது;  களையாவது தனக்கென்னப்பண்ணுமது” என்றருளிச் செய்தார்.  அதாவது, பகவந்முகவிகாஸத்திற்கு ஹேதுவாகையாலே இது நமக்கு ஆதரணீயம் என்கிற ப்ரதிபத்தியில்லாமல் தன்னுடைய ஸந்தோஷத்தையே ப்ரயோஜனமாக நினைத்துச் செய்வது புருஷார்த்த விரோதியென்றும். அந்த விரோதியைக் கழிக்கிறது நமஸ்ஸென்றும் ரஹஸ்யாத்தமுள்ளது.  கைங்கர்யம் வாய்க்க வேணுமென்றும் நித்யப்ரார்த்தனை நடக்கவேணுமென்று அருளிச் செய்து, இந்த ப்ராத்தனை இந்நிலத்தில் மாத்திரமன்று, திருநாட்டிலுமண்டு என்றுமருளிச் செய்து, அதற்கு ப்ராமாணமாக ‘மருந்தேநங்கள் போகமகிழ்ச்சிக்கு’ என்னுமிப்பாசுரத்தை யெடுத்துக் காட்டியுள்ளார் பிள்ளைலோகாசார்யர் (187) “மருந்தேநங்கள் போகமகிழ்ச்சிக்கு என்னாநின்றதிறே” என்கிறத விதுவே த்வயப்ரகரணத்தின் முடிவுசுர்ணை.  அவ்விடத்து மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் வருமாரு;.– கந்தல்கழிந்த அந்நலத்திலும் ஸ்வபோகத்க்ருக வோதய முண்டாமோவென்ன அருளிச்செய்கிறார் (மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிககென்னா நின்றதிறே) என்று.  அதாவது, உன்னுடைய அநுபத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்துககு ஸ்வபோக்த்ருத்வபுத்தியை விளைவித்து ஸ்வரூபத்தையழியாதபடி ஸாத்மிப்பிக்கும் பேஷஜமானவனே யென்று நித்யஸுரிகள் பேசும்பாசுரமாகச் சொல்லாநின்றதிறேய்னக என்று.

இப்படி பிள்ளைலோகாசார்யரும் மணவாளமாமுனி களுமருளி செய்த ரீதியில் பாசுரத்தில் பொருள் காணுமளவில், நாங்கள் போகமகிழ்ச்சிக்கு மருந்தே!–உன்யைநுபவித்து அத்தாலே எங்களுக்கு உண்டாகுமானந்தத்தை ஸ்வரூபவிருத்தமாக்கமல் ஸ்வரூபாநுருப்மாகச் செய்யவல்ல மருந்தாயிருக்குமவனே!  என்பதாகப் பொருள் காணவேணும்.  ஸ்வரூப் விருத்தமான ஆனந்தமாவது என்ன? ஸ்வரூபாநுரூபமான ஆனந்தமாவது என்ன என்னில்: ‘நானநுபவிக்கிறேன், என்னுடைய அநுபவமிது’ என்று கொண்டு உண்டாகிற ஆனந்தம் ஸ்வரூப விருத்தமானது. ‘அவன் வஸ்துவை அவன் அநுபவிக்கிறான்.  அவன் ஆனந்ததப்படுகிறான்’ என்றுகொண்டு அவனது ஆனந்தத்தைக் கண்டு உண்டாகிற ஆனந்தம் ஸ்வரூபாநுரூபமானது.  ஸாரமாகக் கேண்மின்; சேதநனாகையாலே ஆனந்தப்படாமலிருக்க முடியாது ; அவர்ஜநீயமாய் ஆனந்தம்பிளையும் ; தன்னையநுபவித்து அவனுக்குண்டாகிற முகமலத்தியைக் கண்டு ஆனந்திப்பதேயுள்ளது. வேறு ஸ்வந்த்ரமான ஆனந்தம் உண்டாகக் கூடாதென்றும் அது ஸ்வரூபவிருத்தமென்றும் அநுஸந்தானம் செல்லவேணும், இவ்வநு ஸந்தானம், இங்கிருக்கிற காலத்தோடு ப்ராப்யபூமியில் சென்று சேர்ந்தகாலத்தோடு வாசியற் எப்போதும் நடந்துசெல்லும் என்பதே.  இதற்கு ப்ரமாணமாகவுள்ள பாசுரம் “மருந்தே நங்கள் போகமகிழ்ச்சிக்கு” என்கிறவிது.  ஆறாயிரப்படி முதலிய வியாக்கியானங்களில் இவ்வர்த்த விசேஷத்தை வெளியிட்டருளாதது குஹயதமென்பது பற்றியேயென்க,

உலகில் “பிணிக்குமருந்து, பசிக்குமருந்து” என்கிற பிரயோகங்கள் காண்கின்றன. பிணிக்குமருந்தென்றபோது, பிணியைத் தீர்க்கும் மருந்து என்று பொருள்படுகிறது.  பசிக்கு மருந்தென்றபோது, பிணியைத் தீர்க்கும் மருந்து என்று பொருள்படுகிறது.  பசிக்கு மருந்தென்றபோது பசியையுண்டாக்கும் மருந்தென்று பொருள் படுகிறது.  அப்படியே, நங்கள் போக மகிழ்ச்சிக்கு மருந்தென்ற இவ்விடத்திலும் இரண்டு பொருளும் அமையத் தட்டில்லை ; போகத்தில் எங்களுக்கென்று உண்டாகும். மகிழ்ச்சியை யெடக்குபவனே! என்கிற பொருள் ரஹஸ்யப்ரஸ்தானத்தில் கொள்ளப்பட்டது.  போகத்தினால் நாங்கள் மிக மகிழும்படி செய்பவனே! என்கிறபொருள் பகவத் விஷயப்ரஸ்தானத்தில் கொள்ளப்பட்டது (இது ஸாமாந்ய புத்திகளுக்கு நிலமல்லாத விஷயம்) பட்டரருளிச் செய்த அஷ்டச்லோகியில் (2) *மந்த்ர ப்ரஹமணி மத்யமேந நமஸா* என்னும் க்லோகத்தில் (திருமந்த்ரத்திலுள்ள) நமஸ்ஸீக்கு, முன்னும் பின்னும் ஸ்வஸ்தானத்திலும் யோசனை காட்டி மூன்றுவகையாக அத்த சிசைஷ பண்ணப்பட்டிருக்கின்றது.  அதுவும் பெரியோர் பாடே கேட்டுணரத்தக்கது.

சுருந்தேவன்=காளமேகச்யாமளமாய் திவ்யமான வடிவையுடையவன்.  எம்மான் அவ்வடிவக் காட்டி எனை யீடுபடுத்திக் கொண்டவன் பெருந்தேவர் குழாங்களுக்குப் படிவிடும் வடிலையன்றோ எனக்கு உபகரித்தானென்று ஆனந்தம் பொங்கிச் சொல்லுகிறபடி.  கண்ணன்–அவதாரமுகத்தாலும் உபகாரம் செய்தவன்.  விண்ணுலகம் தரும் தேவன்–பரமபதத்தைத் தருவானாயிருக்கிற ஸர்வேச்வரன்.  ஆக இப்படிப்பட்ட எம் பெருமானை, மனமே சோரேல் கண்டாய்–அவன் நம்மைப் பெறுவதற்கு எவ்வளவோ க்ருஷி பண்ணினான் காண்;  அந்த க்ருஷி ஒருவாருபவித்திருக்கிறன்ற திப்போது;  அதை விபலமாக்கிவிடாதேகொள் நெஞ்சே! என்கிறார்.

 

English Translation

Extolled by hordes of celestials as the Soma of their bliss, the dark Krishna is our liberation, Note, O Heart, so never leave him

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain