(3805)

அறிந்தவவேத வரும்பொருள்நூல்கள்

அறிந்தனகொள்க அரும்பொருளாதல்

அறிந்தனரெல்லாம் அரியைவணங்கி

அறிந்தனர் நோய்களறுக்கும்மருந்தே.

 

பதவுரை

அறிந்தன வேதம் அரு பொருள் நூல்கள்

தத்துவத்தை யறிந்தலையாயிருக்கிற வேதங்களினுடைய அரிய பொருள்களை யுறுதியிட வல்ல இதிஹாஸ புராணாதி நூல்களானவை

அருபொருள் ஆதல் அறிந்தன கொள்க

எம்பெருமான்  அறிவதற்கரிய பொருள் என்றில்வளவே அறிந்ததாகக் கொள்ளத்தகும்

அறிந்தனர் எல்லாம்

ஞானிகளான யாவரும்

அரியை வணங்கி

ஸர்வேச்வரணை ஆச்ரயித்த

நோய்கள் அறுக்கும் மருந்து

தங்களுடைய ஸம்ஸார வியாதிகளை போக்க வல்ல மருந்தாக

அறிந்தனர்

அவனைத் தெரிந்து கொண்டார்கள் (இவ்வளவேயல்லது அவனுடைய யீடுபட்டிலர் என்றவாறு)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– வேதங்களாலும் வேத வித்துக்களாலும் அறியப்போகாத பெருமானை நான் அவனது நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே உள்ளபடி அறியப்பெற்றேனென்கிறார்.  “அறிந்தன வத வரும் பொருள் நூல்கள்” என்கிற முதலடிக்கு இரண்டுபடியாகப் பொருள் கூறுவர் ‘அரும்பொருள் அறிந்தன வேத நூல்கள்’ என்று அந்வயம் கொண்டால்–ப்ரத்யக்ஷத்தாலும் அநுமாநத்தாலும் அறியவொண்ணாத அர்த்தங்களை அறிந்தவையாயிருக்கின்ற வேதங்களாகிற சாஸ்த்ரங்கள் என்று பொருள்படும்.  அன்றியே பாசுரமுள்ளபடியே அந்வயித்தால்–அறிந்தவையாயிருக்கிற வேதங்களில் அறிந்து கொள்ள முடியாத அர்த்தங்களை நிஷ்கர்ஷித்துக் தரவல்ல ப்ரஹமஸீத்ரம் இதிஹாஸ புராணம் முதலிய நூல்கள் என்று பொருள்படும்.  ஆக இப்படிப்பட்ட சாஸ்த்ரங்களெல்லாம், அரும்பொருளாதல் அறிந்தன கோள்க– ‘எம்பெருமான் அறிய முடியாத பொருள்’ என்றிவ்வளவே அறிந்து கொண்டதாக நாம் கொள்ள வேணும் என்றபடி. –  ••• வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் என்று எம்பெருமானை அறிந்துவிட்டதாக அவை சொல்லிக் கொண்டாலும் உண்மையில் என்ன அறிந்தன? அறிய முடியாதவனவன் எனறே யறிந்தன.

வேதங்கள் கிடக்கட்டும்; பரஹம விந்துக்களாக் குலாவப்படுகின்ற வ்யாஸ பராசர வால்மீகி ப்ரப்ருதிகளான மஹர்ஷகள் தாமும் அறிந்த விதம் கேண்மின்;  அரியை வணங்கி நோய்களறுக்கும் மருந்தே அறிந்தனர் = எம்பெருமானுடைய திருநாமங்களில் ஹரி யென்கிறவொரு திருநாமத்தையே பற்றிக்  கொண்டு “ ••• –ஹரணா தேவ துஃக்காநாம் உரிரித்யபதீயதே” என்கிறபடியே ஸாம்ஸாரிகதுக்களைப் போக்குமவன் என்றிவ்வளவு தெரிந்து கொண்டார்களே யல்லது அவனுடைய பரம போய்கதையையாவது, அவனே நிரபேக்ஷ உபாய பூதன் என்பதையாவது தெரிந்து கொண்டார்களல்லர் ‘நோய்களறுக்கும் மருந்து’ என்றிவ்வளவே தெரிந்து கொண்டார்கள்.

பாசுரத்தில் இவ்வளவே யிருந்தாலும், கீழ்ப்பாட்டின் முடிவில் அறிந்தவனே என்றுள்ளதே இங்கும் ஆகர்ஷித்துக் கொள்ள வேணும் ஆறாயிரப்படி முதலான ஸகல வியாக்கியானங்களும் இது உடன்பாடு.

 

English Translation

The Vedic texts have revealed Hari as the substance of consciousness.  O Thinking men, worship him as the cure for all ills

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain