nalaeram_logo.jpg
(3801)

கொடுவினைப்படைகள்வல்லையாய் அமரக்கிடர்கெட அசுரர்கட்கிடர்செய்

கடுவினைநஞ்சேயென்னுடையமுதே கலிவயல்திருப்ஙபளிங்குடியார்

வடிவிணையில்லாமலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை

கொடுவினையேணும்பிடிக்கந்யொருநாள் கூவுதல் வருதல்செய்யாயே.

பதவுரை

கொடுவினைபடைகள் வல்லையாய்

(விரோதிகள் திறத்துக்) கொடுந் தொழில் புரியவல்ல ஆயுதங்களை கொண்டு காரியஞ்செய்ய வல்லவனே!

அமரர்க்கு இடர் கெட

தேவர்களுக்கு இடர் கெடும்படியாக

அசுரர்கட்கு இடம் செய்

அசுரர்களுக்கு துக்கத்தை வினைக்குமிடத்து

கடு வினை நஞ்சே

விரைவில் முடிக்கவல்ல நஞ்சானவனே!

என்னுடைய அமுதே

எனக்குப் பரம போக்யமான அம்ருதமே!

கலிவயல் திரு புளிங்குடியாய்

செழித்த வயல் சூழ்ந்த திருப் புளிங்குடியில் வாழ்பவனே!

வடிவு இணை இல்லா மலர் மகள்

வடிவழகில் ஒப்பற்ற பெரிய பிராட்டியாரும்

மற்றை நிலமகள்

அப்படிப்பட்ட பூமிப் பிராட்டியாரும்

பிடிக்கும் மெல் அடியை

வருடுகின்ற ஸுகுமாரமான திருவடியை

கொடு வினையேணும் பிடிக்க ஒரு நாள்

தௌர்ப்பாக்ய சாலியான நானும் வருடுமாறு ஒரு நாளாகிலும்

கூவுதல் வருதல் நீ செய்யாய்

என்னை யழைத்துக் கொள்வதோ வந்தருள்வதோ செய்ய வேணும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

**** – கீழே ஆறாம்பத்தில் தோழிபாசுரமாக அவதரித்த துவளில் மாமணிமாடப் பதிகத்தில் பின்னை கொல் நிலைமா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள் என்ற பாசுரத்தினால் ஆழ்வார் பிராட்டியாருடைய ப்ராதுர்ப்பாவவிசேஷமென்பது காட்டப்பட்டிருக்கின்ற தலைவா ;  அப்பிராட்டிமார்தாம் *கோவநம்பியைக் கால்பிடிப்பாளென்னும் பேற்றைப் பெற்றவர்களாகையாலே அப்பேற்றில் தமக்கும் அந்வயமுண்டாக வேணுமென்று கருதி உன்னுடைய திருவடிகளிலே நானும் வந்து அடிமை செய்யும்படி என்னை அங்கேயழைப்பதோ நீ யிங்கே வருவதோ இரண்டத்தொன்று செய் வேணுமென்கிறார்.*

எம்பெருமான் கீதையில் தன்னைப்பற்றித் தானே கொல்லி கொள்ளும்போது ஸமோஹம் ஸர்வபூதேஷீ நமே த்வேஷ்யோஸ்தி ந ப்ரி என்று, தான் ஸர்வபூதங்களிடத்து ஒரு நிகராயிருப்பவென்றும்,. தனக்கு த்வேஷபாத்ரமாவானும் ப்ரீதிபாத்ரமாவானும் ஒருவனுமில்லையென்றும் சொல்லிக் கொள்ளுகிறான்.   இப்படி அன் தான் சொல்லிக்கொள்வது மாத்திரமேயல்லாமல் அவனையறிந்தவர்கள் சொல்லுமிடத்தும் தேவாநாம் தாந்வாநாஞ்ச ஸாமார்யமதிதைவதம் என்று தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பொதுவான தெய்வமென்கிறார்கள்.  இப்படிப்பட்ட எம்பெருமான் அமரர்களை வாழ்விப்பதும் அசுரர்களைத் தொலைப்பதுமாயிரா நின்றான்;  இப்பாட்டில் "அமரர்க்கு இடர்கெட அசுரர்கட்கிடர் செய்" என்ற அருளிச் செய்யப்படுகிறது.  ஸர்வபூதனமனாகக் குலாவப்படுகிற பகவானுக்கு இது பொருந்துமோவென்று சங்கைதோன்றும்.  உண்மையில் எம்பெருமான் ஸர்வபூதஸமனென்பதில் ஸந்தேஹமில்லை;   தேவஜாதியில் ப்ரீதியும் அஸரராக்ஷ ஜாதியில் த்வேஷமும் அவனுக்கில்லை.  அப்படியிருக்குமாகில் அசுரஜாதியிற் பிறந்தவனான ப்ரஹலாதாழ்வானிடத்தும் ராக்ஷவஜாதியிற் பிறந்தவனான விபீஷணாழ்வானிடத்தும் அருள் செய்யப் பொருத்தமில்லை யாகும்.  விளக்கில் விட்டில்கள் தரமாகவே வந்து விழுந்து முடிந்து போவதுபோல அஸுர ராக்ஷஸர்களும் தாங்களே வந்து விரோதங்களைச் செய்து, கழுத்திலே கல்லுக்கட்டிக் கொண்டு குளத்திலே விழுந்து சாவாரைப்போல மடிந்து போனால் அது எம்பெருமானுடைய குற்றமன்றே.  ராமாவதாரத்தில் இராவணன் கரிகுழற்கனிவாய்த திருவினைப்பிந்தத கொடுமையிற் கடுவிசையரக்கன் என்று திருமங்கையாழ்வாரருளிச் செய்தபடி கனத்த அபராதியாயிருக்கச் செய்தேயும், பெருமாள் அவனையும் அங்கீகரிக்கத் திருவுள்ளங் கொண்டிருந்தமையை விபீஷணோலா ஸீக்ரீவ!  யதி வா ராவணஸ் ஸ்வயம் என்பதனால் நன்கு அறியா நின்றோம்.  இராவணனையும் வலியடக்கி வெற்றிப்புகழ் பெற்றிருந்த வாலியையே ஓர் அம்பினால் முடித்தருளின பெருமாளுக்கு இராவணனை முடித்தல் அரிதன்றே. *பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானை* என்று ஆண்டாளருளிச் செய்தபடி அவலீலையாகக் கிள்ளிக்களைய வேண்டியவனன்றோ இராவணன்.  அன்னவனை விரைவில் கொன்றிடாதே தாமதஞ்செய்ததும், *கச்சாநுஜநாமி* என்று சொல்லிப் போர்களத்தில் நின்றும் போகவிட்டதும் அவனுடைய அநுகூல்யத்தை யெதிர்பார்த்தேயன்றோ.  ஆகவே "அமரர்க்கிடர்கெட அசுரர் கட்கிடர் செய்" என்றவிதில் எம்பெருமானுக்கு குணஹநியொன்றும் வாராதென்க

கடுவினை நஞ்சே! என்னுடையமுதே! = ஒரு வஸ்துதானே சிலர்க்கு விஷமாயும் சிலர்க்கு அமுதமாயுமிராநின்றதாயிற்று.   *வஞ்சஞ்செய் சஞ்சனுக்கு நஞ்சானனை* என்றார் திருமங்கை யாழ்வாரும் "என்னுடையமுதே" என்று சொல்லப்பட்ட இவ்வமுதம் எங்கிருக்கிறதென்ன, கலிவயல் திருப்புளிங்குடியாய்!  என்கிறார். இங்கே ஈடு:– "இவ்வம்ருதத்துக்குக் கடல் கடைதல் ஸ்வர்க்கத்திலே போதல் செய்யவேண்டா;  திருப்புளிங்குடியிலே ஸந்நிஹிதமாயிற்று இவ்வம்றுதம்"

திருப்புளிங்குடியா யென்றழைத்து அவனுக்கு ஸமாசாரம் சொல்லுகிறார் பின்னடிகளால் வடிவழகுக்கு ஒப்பில்லாத பெரிய பிராட்டியாரும் ஸ்ரீபூமிப் பிராட்டியாரும் தங்களுடைய பரம ஸுகுமாரமான திருக்கைகளாலே பிடிக்கும்போதும் கூசிப்பிடிக்க வேண்டும்படி அத்யந்த ஸுகுமாரமான திருவடிகளை பாவியேனும் பிடிக்குமாறு என்னை அங்கேயழைத்துக் கொள்ளுதல், அன்றிக்கே இங்கே வந்தருளுதல் ஒருநாள் செய்ய வேமென்றாராயிற்று.  கொடுவினையேனும் என்றது–ப்ராப்தியுடையேனாயும் அதில் போக்யதையை யறிந்த வனுயுமிருந்து வைத்து நெடுங்காலம் இழந்திருக்கும்படி கொடிய பாபத்தை யுடையேனான நானும் என்றபடி.

கூவுதல் வருதல் செய்யாயே = இரண்டு காரியங்களை விகற்பித்துச் சொல்லுமிடங்களில் பெரிய காரியத்தை முன்னே சொல்லுவதும், சிறிய காரியத்தை பின்னே சொல்லுவதும் இயல்பு.  எம்பெருமான் தானே வருவதென்பது பெரிய காரியமாயும், ஆழ்வாரைக் கூவிக் கொள்வதென்பது சிறிய காரியமாயுமிருப்பதால் "வருதல் கூவுதல் செய்யாயே" என்று சொல்ல ப்ராப்தமாயிருக்க, கூவுதல் வருதல் செய்யாயே யென்று சொல்லியிருப்பதேன்?  என்று சங்கை தோன்றும் ;  இதற்கு நம்பிள்ளை யருளிச் செய்வது காணீர்– "முற்பட 'வருதல்' என்றிலராயிற்று அஸ்ஸமுதாயத்தைக் குலைக்க வொண்ணா தென்னுமத்தாலே" என்று. அதாவது, *வடிவிணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் ஸந்நிவேசத்தைத் தாமம் கண்டுகளிக்க ஆழ்வார் ஆசைப்பட்டவராகையாலே அந்தச் சேர்த்தி யழகைக் குலைக்க மனமில்லாமை பற்றி, வருதலை முன்னே சொல்லிற்றிலரென்கை.*

English Translation

O Lord of happy-fields Tiruppulingudi, my ambrosia who destroys terrible Asuras!  Lord wielding many fierce weapons.  Lord who destroyed the gods' woes.  The peerless lotus-dame Lakshmi and Earth Dame press your lotus feet.  That I too may press your feet, come to me or call me unto yourself!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain