nalaeram_logo.jpg
(3798)

எம்மிடர் கடிந்திங்கென்னையாள்வேனே இமையவர் தமக்குமாங்களையாய்

செம்மடல்மருந்தாமரைப்பழனத் தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்

நம்முடையவடியர்கவ்வைகண்டுகேந்து நாங்களித்துளஉலங்கூர

இம்மடவுலகர்காண நீயொருநாள்  இருந்திடாயெங்கள் கண்முகப்பே.

பதவுரை

எம் இடர் கடிந்து

எம்முடைய இடரைப் போக்கி

இங்கு என்னை ஆள்வானே

இங்கு என்னை அடிமை கொண்டு போருமவனே

இமையவர் தமக்கும் ஆங்கு ஆணையாய்

பிரமன் முதலிய தேவர்களுக்கும் அப்படியே ரக்ஷகனானவனே

செம்மடல் மலரும் தாமரை பழனம்

சிவந்த இதழ்கள் மலருகிற தாமரைகள் பொருந்திய நீர் நிலங்களை யுடைத்தான

தண் திருப்புளிங்குடி கிடந்தாய்

அழகிய திருப்புளிங்குடியிலே சயனித்தருள்பவனே

நாம்

அடியொம்

நம்முடைய அடியர் கவ்வை கண்டு உகந்து

பாகவதர்களின் கோலாஹலங் கண்டு மகிழ்ந்து

களித்து உளம் நலம் கூர

உள்ளத்தினுள்ளே பரமானைத்தம் பொங்கும்படியாக

இம் மடவுலர்காண

அறிவிலிகளான இவ்வுலகத்தாருங் காண

நீ ஒருநாள் எங்கள் கண் முகப்பே இருந்திடாய்

நீ ஒருநாள் எமது கண்ணெதிரே இருந்தருளவேணும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– உலகில் துர்ப்பலர்களென்றும் ப்ரபலர்களென்றும் இருவகுப்பினருளர் ப்ரபலர்கள் தங்களைத் தாங்களே ரக்ஷித்துக் கொள்ள வல்லவர்களென்பது கிடையாது;  எப்படி துர்ப்பலர்கள் எம்பெருமானால் ரக்ஷிக்கப்பட வேண்டியவர்களோ, அப்படியே ப்ரபலர்களும் அவன் கைபார்த்திருக்கவேண்டியவர்களே–என்னு மர்த்தத்தை வெளியிட்டுக் கொண்டு, அடியோங்கள் வாழும்படி எங்கள் கண் வட்டத்திலே ஒருநாள் இருக்கவேணுமென்று இரக்கிறார்.  ஆதியிலேயே *மயர்வற மதிநல மருளினன்யனவன்* என்று நான்பேசும்படிபாய என்னுடைய மயர்வையறுத்து என்னையடிமை கொண்டவனன்றோ நீ என்னுங்கருத்துப்படவருளி செய்கிறார். எம்மிடர்கடிந்து இங்கென்னையாள்வானே யென்று, இருள் தருமாஞாலமான விந்நிலத்திலேயன்றோ இவ்வுபகாரம் செய்தது! என்பது, இங்கு என்றதனால் காட்டப்படுகிறது.

இப்படி ரக்ஷகனாவது எங்களுக்கு மாத்திரமல்ல; "ஈச்வரோஹம்" என்று செருக்கியிருக்கிற பிரமன் முதலிய தேவர்களுக்கும் நிர்வாஹகன் நீயேயன்றோ வென்கிறார் இமையவர் தமக்குமாங்கனையாய்! என்று.  இப்படி துப்பலரோடு ப்ரபலரோடு வாசியற அனைவர்க்கும் ரக்ஷகன் நானேயென்னுமிடத்தை ஸர்வலோக ஸாக்ஷிகமாக நிருபித்துக் கொண்டு திருப்புளிங் குடியிலே சாய்ந்தருளா நிற்பவனே யென்கிறது இரண்டாமடி.  தமக்குச் செய்தருள வேண்டுவதைப் பின்னடிகளாலருளிச் செய்கிறார்.  "இம்மடவுலர்காண நீ யொருநாள் எங்கள் கண் முகப்பேயிருந்திடாய்" என்பது பிரார்த்தனை.  திருப்புளிங்குடியில்நின்று மெழுந்துவந்து திருப்புளியடியிலே ஸேவை தந்தருளவேணுமென்கிறார்.  ஒருநாளிருந்தால் போதுமோ வென்று கேட்வேண்டா பெருவிடாயன் 'நாக்குநனைக்கத் தண்ணீர்வேணும்' என்றால் அதற்கு அவ்வளவேயோ கருத்து "அதர்சநே தர்மநமாத்ரகாமா: த்ருஷ்ட்வா பரிஷ்வங்க ரஸைகலோலா" என்றான் ஒருமஹாகவி.  முதலடியிலேயே ஆசாஸ்மஹே விக்ரஹயோ ரபேதம் என்று ஆசம்ஸிக்கவொண்ணாதே.

அன்றிக்கே, இருந்திடாய் என்றது–சயனத்திருக்கோலத்தை விட்டு வீற்றிருந்த திருக்கோலத்தைக் காட்டியருளவேணுமென்று பிரார்த்திகிறரென்றுமாம்.  மூன்றாமடிக்கு ஆறாயிரப் படியருளிச் செயல் காண்மின்–"உனக்கு நல்லராயிருப்பார் நீ யிருந்தருளுமிருப்பைக் கண்டால் படும்பாடுகண்டு நாங்கள் வாழும் படியாக" என்று. 'நும்முடையடியர்' என்பதற்கு பர்யாயமாக  'நம்முடையடியர் என்பது உலகவழக்கு 'நம் அகத்தில் எல்லாரும் ஸெளக்கியந்தானே" என்றால் "நும் அகத்தில் '' என்று தானே பொருள்படும். 'எங்களைப் போன்ற அடியவர்கள் 'என்கிற பொருளிலும்  'நம்முடையடியர்' என்பதுண்டு. பக்தபாகவதர்களின் கவ்வையை–கோலாஹலத்தைக் கண்டு நாங்கள் களிக்கும் படியாக என்றதாயிற்று எம்பெருமான் எழுந்தருளியிருந்த ஸேவைஸாதிப்பது எப்படி உத்தேச்யமோ, அப்படியே அப்போது பாகவதர்கள் தங்களுடைய ஆனந்தபரீவாஹமாகச் செய்யும் கோலாஹலங்களைக் கண்டுகளிப்பதும் உத்தேச்யம்ம என்பது இங்குத் தெரிவிக்கப்படுகிறது.  *நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குமாங்கே பொசியுமால்* என்றகணக்கிலே ஸம்ஸாரிகளும் காணம்படியாக வேணுமென்கிறார்.  இம்மடவுலகர் காண என்பதனால். இந்த ஸம்ஸாரத்தில் அறிவுகேடராய் இடக்கை வலக்கையறியா தவர்களாயிருப்பாரும் கண்ணாலேகாணும்படியாக வென்கை.   'மடவுலகர்' என்பதற்கு ஸ்வாபதேசம் ஆசார்யஹருதயத்தில் (142) "ஊரார் காட்டார் உலகர் கேவலைச் வர்யகாமஸ்வதந்த்ரர்" என்ற சூர்ணையில் காணத்தக்கது.

English Translation

O! Lord reclining in cool Tiruppulingudi waters amid fire-like lotus blooms!  O Lord of celestials too, you destroy our woes and rule us.  Come and site before us one day, -that we may rejoice and express our hearts, that your devotees may enjoy the commotion, that this foolish world may also be witness

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain