nalaeram_logo.jpg
(3797)

காய்சினப்பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக்காரர் முகில் போல்

மாசினமாலிமாலிமானென்று அங்கவர்படக் கனன்று முன்னின்ற

காய்சினவேந்தே கதிர்முடியாநே  கலிவயல்திருப்புளிங்குடியாய்

காய்சின வாழிசங்குவாள் வில் தண்டேந்தியெம்மிடர்கடிவானே.

பதவுரை

பொன்மலையின் மீ மிசை

பொன்மயமான மஹாமேருமலையின் மேலே படிந்த

கார்முகில் போல

காள மேகம் போலே

காய் சினம் பறவை ஊர்ந்து

வெல்லிய சினத்தையுடைய பக்ஷி ராஜனை நடத்தி

மா சினம் மாலி

பெரிய சினத்தை யுடையனாய்க் கொண்டு வந்த மாலி யென்ன

மான் மாலி

சமாலி யென்ன

என்றவர் அங்கு பட

இப்படிப்பட்டவர்கள் அங்கே முடியும் படியாக

கனன்று முன் நின்ற

சீறி அவர்கள் முன்னே நின்ற

காய் சின யேந்தே!

காய்சின வேந்தென்னுச் திரு நாமமுடைய பெருமானே!

கதிர் முடியானே

விளங்காநின்ற திருவபிஷேகத்தை புடையவனே!

கலி வயல் திரு புளிங்குடியாய்

செழித்த வயலையுடை திருப் புளிங்குடியில் வாழ்பவனே!

காய்சினம்

வெவ்விய சினத்தை யுடைய

ஆழி சங்கு வாள்வில் தண்டு

திருவாழி முதலான பஞ்சாயு தங்களையும்

வந்தி

திருக்கைகளில் தரித்துக் கொண்டு

எம் இடர் கடிவானே

எமது இடங்களைப் போக்குமவனே

(திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய் என்று

கீழ்ப்பாட்டோடே அந்வயம்)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– கீழ்ப்பாட்டில் அபேக்ஷித்தபடிகளைத் திருச்செவி சாத்தின எம்பெருமான் ஆழ்வீர் ! உம்முடைய அபேக்ஷிதங்க ளவிந்தோம் ; அப்படியே செய்ய நமக்கும் விருப்பமுண்டு ;  ஆனால் அதற்குச் சில ப்ரதிபந்தகளுண்டே;  அவையிருக்க நாம் எப்படி செய்து? என்ன, மாஸி ஸீமாவி மால்யவான் முதலான அரக்கர்களை அநாயாஸமாகப் பொடி படுத்தின எனக்கு என் விரோதிகளைப் போக்குகை அசிதோ ?  அவர்களிலும் வலிதோ என் விரோதி என்கிறாரிப்பாட்டில், உகவாதரர்முன்னே பெரிய திருவடியை மேற்கொண்டு சென்று நின்ற நீ, உகந்து காண வாசைப்பட்ட என் முன்னே அப்படி வந்து நின்றருள நினைத்தால் தடையுண்டோ?  அவசியம் அப்படி வந்து நின்றருளவேணும் என்கிறார்.

இராவணனுக்கு முன்பு இலங்கையை யாண்டு கொண்டிருந்த மாலி ஸீமாவிப்ரப்ருதிகளான அரக்கர்களை எம்பெருமான் கருடாரூடனாய்ச் சென்று முடித்தருளின வரலாற்றைத் திருமங்கை யாழ்வார் பெரிய திருமொழியில் (8–6–2) 'பொருந்தாவரக்கர் வெஞ்சமத்துப் பொன்றவன்று புள்ளூர்ந்து, பெருந்தோள் மாலி தலை புரளப்பேர்ந்தவரக்கர் தென்னிலங்கை இருந்தால் தம்மையுடன் கொண்ட அங்கெழிலார் பிலத்துப் புக்கொளிப்பக் கருந்தான் சிலைகைக் கொண்டான்' என்ற பாசுரத்தினால் விரிவாக அநுஸந்திப்பது காண்க. "அருளாழிப்பள்" என்று விசேஷிக்கப்படுகிற புள்ளரையன் இங்குக்  "காய்சினப் பறவை" என்று விசேஷிக்கப்படுகிறான்; விரோதிகளின் மீது எம்பெருமானுக்கு ஒருநால் அருள்தோன்றினாலும் கருடனுக்கு அருள் தோன்றாதாம் ;  கண்ணற்ற அழியச்செய்வனாம்.  காய்சினப் பறவை யென்றது–விரோதிகள் விஷயத்திலே வெவ்விய சீற்றத்தையுடைய கருடன் என்றபடி.  அவன்மேல் எம்பெருமான் ஏறிநின்ற நிலைக்குத் தகுதியாக ஒருவமை கூறுகின்றாய பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல் என்று.  மேருமலையின்மீது காளமேகம் படிந்தாற் போன்றிருந்த தென்க.  கருடன் பொன்மலையாகவும் எம்பெருமான் கார்முகிலாகவும் கொள்ளப்பட்டானன்.  அப்படி கருடாரூடனா யெழுந்தருளினபோது மாண்டு போனவர்களைச் சொல்லுகிறது இரண்டாமடி.  'மாலிமான்' என்றதை 'மான்மாலி' என்றாக்கி மஹானான மாலி ஸீமாவி என்று கொள்க. மாவி ஸீமாவிகளைச் சொன்னது மால்யவானுக்கும் வலக்ஷணம். என்று அவர் பட–என்று சொல்லப்படுகிறத அவ்வரக்கர் களெல்லாம் முடியும்படியாக, கனன்று முன்னின்ற–சீற்றங் கொண்டு அவர்கள் முன்னே நின்ற என்றபடி.   கொல்லப்பட வேண்டிய பாபிகளான அவர்களுக்குப் பெரிய திருவடிமேல் நின்று ஸேவை ஸாதிக்கவும் வேணுமோ? அடியேனுக்குத்தானோ அந்த ஸேவை அரிதாக வேண்டும்? என்பது உள்ளுறை.

காய்சின வேந்தோ! விரோதிகளைக் காய்ந்து போடும் சினத்தையுடைய ஸ்வாமியே!  என்றபடி,.  இங்கு ஓர் ஆராய்ச்சி குறிக்கொள்ளத்தக்கது;  திருப்புளிங்குடி யெம்பெருமானுக்குத் காய்சின வேந்து என்று திருநாமம்.  ஈட்டிலும் நம்பிள்ளை இது திருநாமமென்றே யெடுத்துக் காட்டியுள்ளார்.  இப்படியிருக்க, காய்சின வேந்து என்கிற இச்சொல்லைச் சிலர் 'காசினி வேந்து' என்று ஆக்கினதோடு நில்லாமல், காசினி யென்று பூமிக்குப் பெயராதலால் காசினி வேந்தென்றது பூமிக்கு அரசன் என்றவாறு என்று கொண்டு இத்தலத்தெம்பெருமானைப் பூமிபாலன் என்கிற வட சொல்லால் வழங்கி வருகின்றனர்.  திருநரங்கூரைச் சேர்ந்த மாலைப் பூமிபாலன் என்கிற வட சொல்லால் வழங்கி வருகின்றனர். திருநாங்கூரைச் சேர்ந்த பதினொரு திருப்பதி களையுஞ் சேர்த்து "நத்தீப கடப்ரணர்த்தக மஹாகாருண்ய ரக்தாம்பக" இத்யாதியாக ஒரு ச்லோகம் இருப்பதுபோல, ஆழ்வார் திருநகரியைச் சார்ந்த நவ திருப்பதிகளையுஞ் சேர்த்து "வைகுண்ட நாத விஜயாஸந பூமிபால" இத்பாதியாக வொரு ச்லோகம் ப்ரஸித்தமாகவுள்ளது.  இது மணவாள மாமுனிகள் அருளிச் செய்ததென்றும் சொல்லி வருகிறார்கள். ஈட்டிலருளிச்செய்த படிக்கு நேர்விரோதமாகக் காசினி வேந்தென்று பாடங்கொண்டு பூமிபாலனென்று அதற்கு ஸம்ஸ்கருதமாக்கி மணவாள மாமுனி களருளிச் செய்தாரென்றால் இது ஸம்பாவிதமாகுமோ? ஒரு வியாக்யானத்திலாவது காசினி வேந்தென்கிற பாடமும் அதற்குரிய பொருளும் காணப்படவில்லை. "காயுஞ் சினத்தையுடை வேந்தே!" என்றே ஸகல வியாக்யானங்களிலு முள்து. "இது திருநாமம்" என்று இருபத்தினாலாயிரப்படியிலும் ஈட்டிலும் விசேஷித்து அருளிச் செய்யப்பட்டுமிருக்கிறது.  இங்ஙனேயிருக்க, விபரீதம் எங்ஙனே புகுந்ததென்று ப்ராமாணிக ப்ராஜ்ஞர்கள் ஆராயக்ககடவர்கள்.  உண்மை யென்ன வென்றால் காய்சின வேந்தென்பதைக் காசின வேந்தென்று வழங்கிவர, பிறகு அது காசினி வேந்தென்று வழங்கப்பட்டு, அதற்கு பூமிபாலனென்று அர்த்தமும் செய்யப்பட்டதாயிற்று. திவ்யப்ரபந்தத்திலும் வியாக்யானங்களிலும் பரிசய மற்றவர்களின் கணி இது. ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபத்திலுள்ள திருத்தண்கால் என்னுந் திருப்பதியைத் திருத்தங்காவென்று வழங்கி வந்து ஸம்ஸ்க்ருத்தில் தங்கால சேஷத்ரமாக்கி ஸ்தல புராணமும் இட்டிருப்பதுபோல, இங்கும் பூமிபால சேஷத்ர மாஹாத்மிய மென்று ஒரு ஸ்தல புராணமும் தோன்றி யிருக்கக் கூடும்.

கதிர் முடியானே! – அடியார்களை ரக்ஷிப்பதற்கென்று நீ திருவபிஷேக மணிந்திருக்க, நான் இழக்கலாமோ வென்கிறார் போலும், கலிவயல் திருப்புளிங்குடியார்!= செழிப்புமிக்க வயலையுடை திருப்புளிங்குடியிலே திருக்கண்வளர்ந் தருளுமவனே! நீ இப்படி அணினாயிருக்க நானிழக்கலாமோ வென்கை. ஈற்றடியில் பஞ்சாயுதச் சேர்த்தியை யருளிச்செய்கிறார். *எப்போதுங் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்* என்றாப்போலே அடியோங்களுடைய ஆபத்துக்களைப் போக்குகைக்காக நீ பஞ்சாயுதாழ்வார்களோடே கூடியிருக்க என் ப்ரதிவந்தகங்கள் என் செய்யும்? என்றவாறு.

இப்பாட்டில் வினை முற்று இல்லை; விளியோடே நின்றிருக்கிறது, கீழ்ப்பாட்டோடே அந்வயம். "எம்மிடர்கடிவானே! திருக்கண்தாமரை தயங்க நின்றருளாய்" என்று கூட்டுக.

English Translation

O Lord in the happy fields of Tiruppulingudi, Kalsinivenda, -terribly angry monarch, -like a dark cloud on a golden peak you come riding the angry bird, stood and fought a fierce battle and killed Mali and surmali. With your conch and other terrible weapons, you do end our woes!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain