nalaeram_logo.jpg
(3795)

புளிங்குடிக்கிடந்து வாகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று

தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாயெனக்கருளி

நளிர்ந்தசீருலக மூன்றுடன்வியப்ப நாங்கள் கூத்தாடிநின்றார்ப்ப

புளிங்குநீர்முகிலின்பவளம் போற்கனிவாய்சிவப்ப ரிகாணவாராயே.

பதவுரை

புளிங்குடி கிடந்து

திருப்புளிங்குடியிலே சயனித்தும்

வாருண மங்கை இருந்து

வாகுரை மங்கையிலே வீற்றிருந்தும்

வைகுந்தத்துள் நின்று

ஸ்ரீவைகுண்டத்திலே நின்றும்

தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே     என்னை ஆள்வாய்

என் சிந்தையைத் தெளிவித்து அங்கே விட்டுக் பிரியாதேயிருந்து என்னை யாளுமவனே

எனக்கு அருளி

எண் திறத்திலே க்ருபை பண்ணி

நரிள்ந்த சீர்

(உனது) குளிர்ந்த திருக்குணத்தை பற்றி

உலகம் மூன்று உடன் வியப்ப

மூவுங்கும் ஒருமித்து ஆச்சரியப் படும்படியாகவும்

நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப

நாங்களும் கூத்தாடிக் கோளாஹலம் செய்யும்படியாகவும்

பளிங்கு நீர்

தெளிந்த நீரையுடைத்தான

மூகிலின்

காளமேகத்திலே

பவளம் போல்

பவளக்கொடி படர்ந்தாற்போலே

கனிவாய் சிவப்பு

கனிந்த திருவதரம் சிவந்து தோன்று மழகை

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– திப்வயதேசங்களில் சில தலங்களில் சயனிப்பது, சில தலங்களில் வீற்றிருப்பது, சில தலங்களில் நிப்தாகவன்றோவுள்ளது.  இந்நிலைமைகளைத் தனித்தனியே அநுபவிப்பது தவிர, இவை மூன்றையும் சேர்த்ததுபவிப்பதொரு சுவையுமுண்டு ஆழ்வார்களிடத்தில்*நின்ற தெந்தையூரகத்து இருத்தெந்தை பாடகத்து அன்று வெஃகனைக் கிடந்தது* என்றார் இவர்தாமே கீழே.  திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகத்தில் *கல்லுயர்ந்த நெடுமதில் சூழ் கச்சிமேயகளிறென்றும் கடற்கிடந்த கனியேயென்றும் அல்லியம் பூ மலர்ப்பொய்கைப் பழனவேலி ணணியழுந்தூர் நின்று கந்தவம்மானென்றும்* என்றொரு காசுரம் பாடினார்.  இதில் *கச்சிமேய களிறென்பதற்குத் திருப்பாடகத் தெம்பெருமானை அர்த்தமாகவுரைத்தார் பெரியார் வாச்சான் பிள்ளை.  களிறு என்றதற்குப் பொருத்தமாக ஹஸ்திகிரிநாதரான பேரருளாளப் பெருமாளை அர்த்தமாகப் பணிக்க வேண்டியிருக்க அவரைவிட்டு ஒரு மூலையிலுள்ள பாண்டவதூதனை எதுக்குப் பணிக்க வேண்டியிருக்க அவரைவிட்டு ஒரு மூலையிலுள்ள பாண்டவ தூதனை ஏதுக்குப் பணித்தாரென்று சிலர் விசிகித்ஸை செய்வதுண்டு,.  ஆழ்வாருடைய திருவுள்ள மறிந்து செய்தருளின வியாக்கியான மன்றோவது;  அப்பாட்டில், கடல்கிடந்த கனியே யென்று கிடையழகையும், அணியழுந்தூர் நின்றுகந்த வம்மானென்று நிலையழகையும் அது பவித்திருக்கையாலே அதற்குப் பொருத்தமாக வீற்றிருக்குமழகின் அனுபவந்தான் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் உறைந்திருக்குமென்றும் அதற்கு சேர ஸ்ரீபாண்டவதூதனையே பொருளாகக் கொள்ளவடுக்கு மென்றும் திருவுள்ளம் பற்றியே பெரியவாச்சான்பிள்ளை வீற்றிருந்த தலமான கிருப்பாடகத்தை யெடுத்துக் காட்டியருளினர்.  அது பவரஸிகர்களின்படி இது.  இந்த ரீதியிலே புளிங்குடிக்கிடந்து வாகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று* என்று இப்பாசுரமைந்தவழகு பரமபோக்யம்.

ஆசார்யஹருதயத்தில்– திருவாய்மொழியாயிரத்திலும் நம்மாழ் வாருகந்த திவ்ய தேசங்களில் விளங்கும் திருக்குணங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் ககாட்டும் பிரகாணத்தில் இம்மூன்று தலங்களிலுஞ் சேர்ந்து ஒன்றாக விளங்குந்திருக்குணத்தை யெடுத்துக்காட்டியுள்ள சூர்ணையாவது–"போக்யபாகத்வரை தெளிந்த நதைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம்" என்பது (இதன் கருத்தாவது) பசி களத்தவன் அன்னம் பக்வமாருமளவும் ஆறியிருக்க மாட்டாமல் பதற்றத்தாலே அன்னம் பக்வமாருமிடத்திற்கு அணித்தாகவந்து கிடப்பதும் இருப்பதும் நிற்பதுமாய் தன்னுடைய அலமாப்பைக் காட்டுவளும்;  அதுபோல, எம்பபெருமானும் தனக்கு போக்ய பூதாரான ஆழ்வார்க்குப் பரமபக்திபாகம் பிறக்குமளவும் ஆறியிருக்க மாட்டாமல் தனக்குண்டான பதற்றத்தைத் திருப்புளிங்குடி வரகுணமங்கை ஸ்ரீவைகுண்டங்களில் கிடப்பதிருப்பது நிற்பதான நிலைமைகளினால் காட்டியருள்கிறானாம். இதை ஆழ்வார் *தெளிந்த வென்சிந்தை யகங்கழியாதே யென்னையாள்வாய்!* என்கிற விளியினால் ஒருவாரு காட்டியருளுகிறார்.  பசிகனத்தவன் அன்னம் பக்வமாருமிடத்தை விட்டகலா தாப்பாலே எம்பெருமானும் ஆழ்வாருடைய பக்தி பரிபக்வமாகுமிடமான திருவுள்ளத்தைவிட்டு ஆகலாதே வர்த்திக்கிறபடி.

திருப்புளிங்குடியிலே கிடந்ததோர் கிடக்குமழகைக் காடியும், லாகுணமங்கையிலே *பிரானிருந்தமை காட்டினீர்* என்னுமிருப்பழக் காட்டியும், ஸ்ரீவைகுண்டத்திலே *நிலையார நின்றான்* என்னும் நிலையழகைக் காடியும் தம்மையீடுபடுத்திக் கொண்டமையை முதலடியிலே பேசினாராயிற்று.

தெளிந்த வென்சிந்தை யகங்கழியாதே யென்னை யாள்வாய்–என் சிந்தையைக் தெளிவித்து அத்தைவிட்டுப் பிரியாதேயிருந்து குணஜ்ஞானத்தாலே யென்னைத் தரிப்பித்துக் கொண்டு போருமவனே! என்றபடி.  அயோக்யதாநுஸந்தானம் பண்ணி அகலாதபடி கண்கண் சிவந்தென்கிற பதிகத்திலே என்னுள்ளத்தைத் தெளிவித்து அத்தைக் கைவிடாதே அதிலே நிரந்தவாஸம்பண்ணி எடுப்பும் சாய்ப்புமாக என்னை நடத்திக் கொண்டு போருமவனே! என்க.

எனக்கருளி என்பது நீ காணவாராயே யென்பதிலே அங்வயிக்கும், நளிர்ந்த சீரை உலகம் மூன்றும் வியக்கவும், நாங்கள் கூத்தாடி நின்று ஆர்க்கவும் நீ வரவேணும் என்கிறார்.  'நளிந்த சீர்' என்றது குளிர்ந்த குணம் என்றபடி. அநுஸந்திதவர்களின் உள்ளத்தைக் குளிரச் செய்யும் சீலகுணமென்க.  ஆழ்வார் எப்படியபேக்ஷித்தாரோ அப்படியே செய்தான் என்று இம்மஹா குணத்தைச் சிறியார் பெரியாரென்னும் வாசியின்றிக்கே எல்லாருமறிந்து ஆச்சரியப்படும்படி வரவேணும்.  அவ்வளவேயுமன்றிக்கே நாங்களும் மதுவனமழித்த வானர முதலிகள் போலே ஸஸம்ப்ரமந்ருத்தம் பண்ணி நின்று கோலாஹல பரவசர்களாம்படியாகவும் வரவேணும் என்கிறாராயிற்று.

பளிங்கு நீர் முகிலின் பவளம்போல் கனிவாய் சிவப்ப–தெளிந்த நீர் நிறைந்த காள மேகத்திலே பவளக்கொடி படர்ந்தாற்போலே யிருக்கிற திருவதரம் சிவந்து தோன்று மழகை நாங்கள் காணும்படியாகவும் வரவேணும்.

English Translation

Reclining in Tiruppulingudi, seated in Varagunamangai, and standing in Vaikundam, you enter my heart and clear my thoughts, Lord such is your grace!  May the three words also see you, and may we shout and dance in joy.  Pray come and show your cloud-hue form, and let your coral lips redden!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain