nalaeram_logo.jpg
(3792)

பண்டைநாளாலேநின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்

கொண்டு நின்கோயில்சீய்த்துப்பல்டிகால் குடிகுடி வழிவந்த நாட்செய்யும்

தொண்டரொர்க்கருளிச்சோ திவாய்திறந்து உன் தாமரைக் கண்களால்நோக்காய்

தொண்டிரைப்பொருநல் தண்பணை சூழ்ந்த திருப்புளிங்குடிக்கிடா தானே.

பதவுரை

தெண் திரை பொருநல்

தெளிந்த அலைகளையுடைத்தான தாமிரபர்ணியோடு சேர்ந்த

தண் பணை சூழ்ந்த

அழகிய சீர்நிலங்களால் குழப்பட்ட

திருப்புளிங்குடி

திருப்புளிங்குடி யென்கிற திருப்பதியிலே

கிடந்தானே

சயனித்தருள்பவனே!

நின் திரு அருளும்

உனது க்ருபையையும்

பங்கயத்தாள் திரு அருளும்

பெரிய பிராட்டியாருடைய க்ருபையையும்

பண்டை நாளாலே கொண்டு

நெடுநாளாகவே அடைந்து கொண்டு

நின்கோயில் சீய்த்து

உன்னுடைய திவ்யதேசத்திலே உரிய கைங்கரியத்தைப் பண்ணி

பல்படிகால் குடி குடி வழி வந்து

அநாதிகாயமாய்ப் போருகிற வம்ச பரம்பரையாக

ஆள் செய்யும் தொண்ட ரோர்க்கு

அடிமைசெய்து யோருகிற அடியோங்கள் விஷயத்திலே

அருளி

அருள் செய்து

சோதி யாய் திறந்து

அழகிய திருப்பவளத்தைத் திறந்து

(நல்வார்த்தைகளைப் பேசி)

உன் தாமரை கண்களால் நோக்காய்

உனது தாமரை போன்ற திருக்கண்களாலே நோக்கியருள வேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– வேறு புகலற்ற அடியேனைக் குறித்து ஒரு வார்த்தை யருளிச் செய்து பிடாயகெடக் குளிர நோக்கியருளவேணுமென்று வேண்டுகிறார்.  முன்னடிகளிரண்டாலும் தம்முடைய படியை நிரூபிக்கிறார். திவ்ய தம்பதிகளின் திவ்ய கடாக்ஷமே விளைநீராகக் கொண்டு நித்ய கைங்கர்யம் பண்ணும் ஸந்தானத்திலே தோன்றப் பெற்ற தந்து பெருமையை யெடுத்துப் பேசுகிறார்.  *எதிர் சூழல்புக்கெனைத்தோர் பிறப்பு மெனக்கே யருள்கள் செய்ய விதி சூழ்ந்ததாலெனக்கே லெம்மான் திரிவிகிரமனையே* என்றருளிச் செய்தவராகையாலே "பண்டை நாளாலே நின் திருவருள்" கொண்டதாகக் கூறுகின்றார்.  பிராட்டியின் க்ருஷிபல மாகவே எம்பெருமானது திருவருள் வாய்த்ததாதலால் "பங்கயத்தால் திருவருளுங்கொண்டு" என்கிறார்.  முற்பட்டதை முன்னே சொல்லிப் பிற்பட்டதைப் பின்னே சொல்ல வேண்டியிருக்க, பிற்பட்டதான எம்பெருமான் திருவருளை முன்னே சொல்லியிருப்பது வழுவாகாது கார்யத்தை முன்னே சொல்லிக் காரணத்தைப் பின்னே சொல்லுவதும் முறையே.

நின் கோயில் சீய்த்து–திவ்ய தேசங்களிலே பண்ணுங் கைங்கரியங்களில் தலையானது இது. *வயலணியனந்தபுரம் கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே* என்று மேலுமருளிச் செய்வர். திருவலகிடுதல் மெழுகுதல் கோலமிடுதல் முதலிய செய்கைக்குக் கோயில் சீய்க்கை யென்று பெயர்.  இங்கே ஈட்டில் திருக்கண்ணமங்கையாண்டானிதிஹாஸ் மொன்றுளது;  அவரைப் பற்றி ஸ்ரீவசநபூஷணத்தில் "திருக்கண்ண மங்கையாண்டான ஸ்வவ்யாபாரத்தை விட்டான்" என்றருளிச் செய்யப் பட்டிருக்கின்றதன்றோ.  அப்படிப்பட்டவவர் அவ்வூரில் ஒரு மகிழ மரத்தடியிலேயிருந்து திருவலகிடா நிற்கையில் உண்மையுணர்ச்சியற்ற வொருவன் 'எம்பெருமானே உபாயமென்றிருக்கிற அநந்ய ப்ரயோஜநர் இங்ஙனே கிலேசப்படுவது எதற்கா–' என்றானும்; அப்போது திருவலகிட்ட விடத்தையும் இடாத விடத்தையுங் காட்டி 'இவ்விடமும் அவ்விடமும் இருந்தபடி கண்டாயே இதற்கொரு பலமில்லை யென்று தோற்றியிருந்ததோ?' என்று பணித்தாராம் திருக்கண்ண மங்கையாண்டான்.   இங்கு அறிய வேண்டுவதாவது;–த்ருஷ்டப்ரயோஜந மென்றும் அத்ருஷ்ட ப்ரயோஜநமென்றும் ப்ரயோஜந மிருவகைப்படும்.   அத்ருஷ்ட ப்ரயோஜகத்திற்கொரு ஸாத்நாநூஷ்டாநம் பண்ணுமையே அநந்ய ப்ரயோஜநர்க்குற்றது.  ஸன்னிதி வாசலை அலகிடுதல் முதலிய திருப்பணிகளை ஒரு ப்ரயோஜநாபேசைஷயின்றிக்கே செய்வதனால் ஒரு குறையுமில்லை;  இது நிஷ்ப்ரயோஜநந்தானே யென்ன வேண்டா; திருவலகிடாதவிடம் கண்கொண்டு காண வொண்ணாதாயும், திருவலகிட்டவிடம் கண்ணுற்கான வினிதாயுமிருப்பதே ப்ரயோஜனம்.  இது அநந்ய ப்ரயோஜநத்வத்திற்கு விரோதியன்று என்பதாம்.

பல்படிகால் என்பதனால் வம்ச பரம்பரையாக இங்ஙனே கைங்கரியஞ்செய்யும் ஸந்தான மென்கிறது. தொண்டனேற்கு என்று ஒருமையாகச் சொல்லாமல் 'தொண்டரோர்க்கு' என்று பன்மையாகச் சொன்னது அநுபந்திகளையுங் கூட்டிக் கொண்டு சொன்னபடி.  சோதிவாய் திறந்து பூவலருமாபோலே வாய்திறந்தொரு வார்த்தை யருளிச் செய்யவேணும்.  வாய் திறக்கும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்விளையும் அதுபயிக்க வேண்டிச் 'சோதிவாய்' என்கிறார்.  இங்கே ஈடு :– "*மாம் அக்ரூரேதி வசஷ்யதி*" யென்று வார்த்தையனவிலேயிற்கு அக்ரூரன் அநுபதித்தது தத்காலத்தில் திருமுகத்திற் செவ்வியும் உத்தேச்யமாயிருக்கிறதாயிற்று இவர்க்கு.

உன் தாமரைக் கண்களால் நோக்காய்–வார்த்தையில் தோற்றாத பந்தமும் நோக்கிலே தெரியும்படி குளிர நோக்கியருளவேணுமென்கை. கோயிலில் பிள்ளை தேவப்பெருமாளரையா இப்பாட்டை ஸேவிக்கையில் *உன் தாமரைக் கண்களால் நோக்காய்* என்று ஒருவிசை சொல்லி நிறுத்தாதே 'நோக்காய் நோக்காய் நோக்காய்' என்று பலகாலும் ஒருவிசை கொண்டிருந்து மேலடியில் போகமாட்டாதே நின்றாராம் ; அப்போது கோஷ்டியில் வீற்றிருந்து அவரது திருத்தகப்பனாரான ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் எழுந்திருந்து 'பிள்ளாய்! நீ எம்பெருமான் திருவுள்ளம் புண்டும்படி இங்ஙனே பலகாலும் சொல்லி நிப் பத்திக்கலாமோ? அழகிய மீற்றைத் தந்து நல்ல பாட்டைத் தந்து ஐச்வர்ய ஸந்தானங்களையும் தந்தருளியிருக்க ஒன்றும் செய்யாதாராக நினைத்து இன்னமும் நோக்காய் நோக்காய் நோக்கயென்றால் இது என்னே!  மேலே பாடு என்றாராம்.

English Translation

O Lord reclining in Tiruppulingudi surrounded by surging Parunal waters, Pray look at us with your lotus eyes, and part your silent lips.  From the days of yore, through your grace and the lotus-lady's grace, we have thronged your temple and served you in many ways as bonded serfs

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain