nalaeram_logo.jpg
(250)

பன்றியும் ஆமையும் மீனமு மாகிய பாற்கடல் வண்ணா உன்மேல்

கன்றி னுருவாகி மேய்புலத் தேவந்த கள்ள அசுரன் தன்னை

சென்று பிடித்துச் சிறுக்கைக ளாலே விளங்கா யெறிந்தாய் போலும்

என்றும்என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனமா வார்களே.

பதவுரை

பன்றியும்

-

மஹாவராஹமாயும்

ஆமையும்

-

ஸ்ரீகூர்மமாயும்

மீனமும்

-

மத்ஸ்யமாயும்

ஆகிய

-

திருவவதரித்தருளின

பால் கடல் வண்ணா

-

பாற்கடல் போல் வெளுத்திருந்துள்ள திருமேனியையுடையவனே!

உன் மேல்

-

உன்னை நலியவேணுமென்ற எண்ணத்தினால்

கன்றின் உரு ஆகி

-

கன்றின் உருவத்தை எடுத்துக் கொண்டு

மேய் புலத்தே வந்து

-

(கன்றுகள்) மேயும் நிலத்தில் வந்துகலந்த

கள்ளம் அசுரர் தம்மை

-

ச்ருத்ரிமனான அஸுரனை

(அவன் சேஷ்டையாலே அவனை அசுரனென்றறிந்து)

சென்று

-

(அக்கன்றின் அருகிற்)சென்று

சிறு கைகளாலே

-

(உனது) சிறிய கைகளாலே

பிடித்து

-

(அக்கன்றைப்) பிடித்து

விளங்காய்

-

(அஸுராவிஷ்டமானதொரு) விளாமரத்தின் காய்களை நோக்கி

எறிந்தாய் போலும்

-

விட்டெறிந்தாயன்றோ;

என் பிள்ளைக்கு

-

என் பிள்ளையான கண்ணபிரானுக்கு

தீமை செய்வார்கள்

-

தீமைகளை உண்டுபண்ணுமவர்கள்

என்றும்

-

என்றைக்கும்

அங்ஙனம் ஆவார்கள்

-

அவ்விளவும் கன்றும் போலே நசித்துப்போகக்கடவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘பாற்கடல்வண்ணா’ என்றது-க்ருஷ்ணாவதாரத்தில் நிறத்தைச் சொன்னபடியன்று; ‘பாலின் நீர்மை செம்பொனீர்மை’ என்ற பாட்டிற் சொல்லியபடி-ஸாத்விகர்களான க்ருதயுக புருஷர்களுடைய ருசிக்குத் தக்கபடி திருமேனி நிறத்தை யுடையவனாய்க்கொண்டு அவர்களைக் காத்தருளினவாற்றைச் சொல்லுகிறதென்க; இனி, ‘பாற்கடல்வண்ணா”’ என்று பாடமாகில், பார்[பூமி] சூழ்ந்த கடல் போன்ற [கறுத்த] நிறத்தையுடையவனே! என்று பொருளாய் இவ்வவதாரத்தின் நிறத்தையே சொல்லிற்றாகலாம். கன்றினுருவாகி வந்த அசுரன் [வத்ஸாஸுரன்] ஒருவனாதலால் ‘அசுரன்றன்னை’ என்று ஒருமையாக சொல்ல வேண்டியிருக்க, அங்ஙனஞ் சொல்லாது ‘அசுரர்தம்மை’ என்று பன்மையாகக் கூறினது-பால்வழுவமைதியின் பாற்படுமென்க; “உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும் இழிப்பினுனும் பால்திணை இழுக்கினுமியல்பே” என்றார் நன்னூலார்; கோபத்தினால் பன்மைப்பால் ஒருமைப்பாலாதலேயன்றி ஒருமைப்பால் பன்மைப்பாலாதலும் உண்டென்பது ஒருசாரார் கொள்கை; சிறியதிருமடலில், “அருகிருந்த, மோரார்குடமுருட்டி முன்கிடந்ததானத்தே, ஓராதவன்போற் கிடந்தானைக் கண்டவளும், வாராத்தான் வைத்ததுகாணாள் வயிறடித்திங், கார்ர்புகுதுவார் ஐயரிவரல்லால், நீராமிதுசெய்தீர் என்றோர் நெடுங்கயிற்றால், ஊரார்கள் எல்லாருங்காண உரலோடே, தீரா வெகுளியளாய்ச் சிக்கென ஆர்த்தடிப்ப, ஆராவயிற்றி னோடாற்றாதான்” என்றவிடத்து ‘ஐய்யர்’ ‘நீராம்’ என்று ஒருமைப்பால் பன்மைப்பாலாக அருளிச் செய்துள்ளமையும், ‘தீரர்வெகுளியளாய்’’ என்றமையால் இதுக்கு அடி கோபமென்பதும் இங்கு உணரத்தக்கது. “உண்ணிலாவியவைவரால்”” என்ற பதிகத்திலும் மற்றும் பலவிடங்களிலும் ஐம்பொறிகளை ‘ஐவர்’ என உயர்திணையாற் கூறியது, இழிபு பற்றிய திணைவழுவமதி என்றாற்போலக் கொள்க. “கன்றினுருவாகி” என்றதை உபலக்ஷணமாக்கித் தாம்பர்யங் கண்டுகொல்வது; அன்றிக்கே, ஆழ்வாருக்கு கிருஷ்ணனிடத்தில் ப்ரேமாதிசயத்தாலே, வந்த ஒருவனே ஒன்பதாகத் தோற்றி பஹூவசநம் ப்ரயோகித்தார் என்று கொள்ளவுமாம்” என்பர் ஒரு அரும்பதவுரைகாரர்.

கண்ணபிரானே! உன்னை நலிய வந்த வத்ஸாஸுரனையும் கபித்தாஸுரனையும் அநாயாஸமாக முடித்தவனன்றோ நீ -என்று யசோதைசொல்ல, அவன் ‘ஆம்’ என்ன அதைக்கேட்ட யசோதை மனமகிழ்ச்சி ஒருபக்கத்திலும் வயிற்றெரிச்சல் ஒருபக்கத்திலுமாய் ‘என்னுடைய பிள்ளைக்குத் தீமை செய்யக் கருதுமவர்கள் என்றும் அப்படியே மாளக்கடவர்கள்’’ என்று கைநெரித்துச் சாபமிடுகிறாள் ஈற்றடியில்.

English Translation

O Lord of the Milk Ocean, who came as fish, tortoise and boar, a deceitful Asura came on you in the form of a calf in the grazing grounds. With your little hands you went and caught him, and threw him against a wood-apple tree! That is what happens to those who mean harm to my child!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain