(3714)

தேனைநன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்டவம் மானை,

வானநான் முகனை மலர்ந்தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்தமா யோனை,

கோனைவண் குருகூர்ச் வண்சட கோபன் சொன்னவா யிரத்துளிப் பத்தும்,

வானின்மீ தேற்றி யருள்செய்து முடிக்கும் பிறவிமா மாயக்கூத் தினையே.

 

பதவுரை

தேனை நன் பாலை கன்னலை அமுதே

-

தேனும் பாலும் கன்னலும் அமுதும் போலப் பரமபோக்யனாய்

இருந்து உலகு உண்ட அம்மானை வானம் நான்முகனை

-

கட்டளைப்பட்ட ஜகத்தைக் காத்தருளின பெருமானாய் வானுலகத்தவனான சதுர் முகனை

மலர்ந்த தண் கொப்பூழ் மலர் மிசை படைத்த மாயோனை

-

மலர்ந்து குளிர்ந்த திருநாபிக்கமலத்திலே யுண்டாக்கின் ஆச்சரிய பூதனுமான

கோனை

-

ஸர்வேச்வரனைக்குறித்து

வண் குருகூர் வண் சடகோபன்

-

ஆழ்வார்

சொன்ன ஆயிரத்துள்

-

அருளிச்செய்த ஆயிரத்து னுள்ளும்

இப் பத்தும்

-

இத்திருவாய்மொழியானது

வானின் மீது ஏற்றி

-

பரமபதத்திலே ஏறவிட்டு

அருள் செய்து

-

பகவத் கைங்கர்ய ப்ராப்து யாகிற அருளைச் செய்வித்து

பிறவி மா மாயம் கடத்தினை முடிக்கும்

-

ஸம்ஸாரமாகிற ஆச்சர்ய நாடகத்தை முடித்துவிடும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருவாய்மொழி கற்கைக்கு, ஸம்ஸார நிவ்ருத்தியையும் பரமபதப்ராப்தியையும் பயனாகவருளிச் செய்கிறார். ஆழ்வார்க்கு எம்பெருமான் விஷயத்திலுண்டான அச்சத்தைத் தீர்ப்பது இத்திருவாய்மொழியிலேயாதலால், அச்சமுண்டாவதற்குக் காரணமும் இங்கே ஒருவாறு தெரிவிக்கப்படுகின்றது –தேனை நன்பலைக் கன்னலை யமுதை யென்று. இப்படி ஸர்வவித போக்யவஸ்துவாயிருக்கையாலே இதற்கென வருகிறதோவென்று அச்சமுண்டாகக் கூடுமென்றோ. அவ்வச்சம் கெட்டதற்கான ஹேதுவும் அடுத்தபடியாகச் சொல்லுகிறது திருந்துலகுண்டம்மானை யென்று. ஜகத்தைப் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கி அச்சங்கெடுத்த பெருமான் திறத்திலேயோ நாம் அச்சங்கொள்வது! என்று அச்சந்தவிர்ந்தபடி. இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்தினுள்ளும் இப்பதிகமானது தன்னைக் கற்கவல்லவர்களை முந்துறமுன்னம் ஸம்ஸாரத்தை யறுத்துப் பின்னை திருநாட்டிலே யேற்றுமென்று சொல்லவேண்டுவது முறைமையாயிருக்க இங்ஙனே சொன்னதன் சுவையை நம்பிள்ளை வெளியிடுகிறார்காண்மின் –“நாடு அராஜகமானால் முன்னம ராஜபுத்ரன் தலையிலே முடியை வைத்துப் பின்னை விலங்கு வெட்டிவிடுமாபோலே“ என்று. அதாவது, ராஜகுமாரன் ஏதோ குற்றங்கள் செய்திருந்தற்காகச் சிறையிலடைக்கப்பட்டு விலங்கிடப் பெற்றிருந்தான், திடீரென்று அரசன் முடிந்துபோக, சிறையில் கிடக்கும் ராஜபுத்திரன் தலையிலே முடிவைக்க வேண்டியதாயிற்று, அப்போத, ஒரு நொடிப்பொழுதும் நாடு அராஜகமாயிருக்கக் கூடாதாகையாலே முன்னம் அவன் தலையிலே முடியை வைத்து பின்னை சிறை விடுவிப்பர்களாம். அதுபோலவென்க. ஸ்தநந்தயப்ரஜைக்கு சிகித்ஸைபண்ணவேண்டி வந்தால், முலையை வாயிலேகொடுத்துச் சிகித்ஸை பண்ணுமாபோலேயென்கிற த்ருஷ்டாந்தமும் இங்குப் பொருந்தும்.

 

English Translation

This decad of the thousand songs by kurugur Satakopan on the lotus-navel Lord, sweet as honey, milk, sugar and sap, who swallowed the Earth, -those who can sing it will end this drama and attain Heaven

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain