(3713)

அமர்ந்த நாதனை யவரவ ராகி அவர்க்கருள் அருளுமம் மானை

அமர்ந்ததண் பழனத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றாற் றங்கரை யானை,

அமர்ந்தசீர் மூவா யிரவர்வே தியர்கள் தம்பதி யவனிதே வர்வாழ்வு,

அமர்ந்தமா யோனை முக்கணம் மானை நான்முக னையமர்ந் தேனே.

 

பதவுரை

அமர்ந்த நாதனை

-

நாதனென்றால் தகும் தகுமென்னும்படியான நாதனாய்

அவர் அவர் ஆகி

-

தன் பக்கலில் அர்த்திகளாக வருவாரெல்லார்க்கும் அபிமாரியாய்

அவர்க்கு அருள் அருளும் அம்மானை

-

அவர்கட்கு அபிஷ்டங்களை யளித்தருளும் ஸவாமியாய்

அமர்ந்த தண் பழனம்

-

செறிந்து குளிர்ந்த நீர் நிலங்களையுடைய

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற் றங்கரையானை

-

திருச்சிற்றாற்றுப் பதியிலெழுந்தருளியிருப்பவனுமாய்

அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்

-

ஸ்ரீமான்களான மூவாயிரம் பிராமணர்களுக்கு வாஸஸ்தானமாய்

அவனி தேவர் வாழ்வு

-

நிலத்தேவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழுமிடமான அப்பதியிலே

அமர்ந்த மானோனை

-

பொருந்தியெழுந்தருளியிருக்கு மாச்சர்ய பூதனுமாய்

முக்கண் அம்மானை நான் முகனை

-

சிவனுக்கு பிரமனுக்கும் அந்தர்யாமியுமான பெருமானை

அமர்ந்தேன்

-

கிட்டப் பெற்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸர்வேச்வரனாயிருந்து வைத்து ஸகல ப்ராணிகளும் ஆச்ரயிக்கலாம்படி திருச்சிற்றாற்றுப்பதியிலே நின்றருளும் பெருமானைப் பெற்றேனென்கிறார். அமர்ந்த நாதனை –எம்பெருமானைத் தவிர்த்துப் பிறர்களை இவ்வுலகுக்கு நாதரென்றால் “ஐயோ? இது தகாத பேச்சாயிருந்தது“ என்று பரிதபிக்கவேண்டியிருக்கும், எம்பெருமானை நாதனென்று சொன்னால் தகும் தகும் என்னும்படியாயிருக்குமாம், “அமர்ந்த நாதனை“ என்றதற்கு இதுவே கருத்து. *த்ரைலோக்யமபி நாதேந யேந ஸ்யாத் நாதவத்தரம் * என்ற ஸ்ரீராமாயண ச்லோகம் இவ்விடத்திற்கு மிகப் பொருத்தமானது. “ஆனைப் பிணங்களைக் குதிரை சுமக்கவற்றே என்னாதபடி உபய விபூதிக்கும் நாதனென்றால் தக்கிருக்கும்மவனை“ என்று இருபத்தினாலாயிரம். அவரவராகி –இதற்குக் கீழே “நாதனை“ என்று வந்தபடியாலே அதற்குச் சேர இதற்குப் பொருள் கொள்ளவேண்டும், நாதன் என்பதற்கு –அர்த்திக்கப்படுமவன் என்று பொருளாகையாலே அர்த்திகள் நினைவுக்கு வரக்கூடியவர்கள், மேலே “அவர்க்கருளருளும்மானை“ என்றிருக்கையாலே அதற்குச் சேரவும் பொருள் கொள்ளவேணும், ஆகவே, அவரவராகி யென்றது – அந்தந்த அர்த்திகளாகியென்று பொருள்படும்.

இதற்கு இரண்டு வகையாகக் கருத்தருளிச் செய்வர். அவர்கள் “இது நமக்கு வேணும்“ என்றிருப்பதுபோல எம்பெருமான் “இவர்களுக்கு இது வேணும்“ என்றிருப்பனாம் –அதைச் சொல்லுகிறதென்று முதற் கருத்து. அவர்கள் அர்த்திகளாயிருக்குமாபோலே இவனும் அர்த்தியாயிருக்கும், கொடுக்கவேணுமென்று அவர்கள் அர்த்தித்தால் கொள்ள வேணுமென்று இவன் அர்த்திப்பனென்பது இரண்டாங்குகருத்து. அவரவர்களது அபேக்ஷதங்களைத் தன்பேறாகக் கொடுக்குவனென்றதாயிற்று.

கீழ் ஆறாம்பாட்டில் * மனக்கொள்சீர் மூவாயிரவர் வண்சிவனுமயனுந்தானு மொப்பார்வாழ் * என்றருளிச் செய்த்துபோல இங்கும் * அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி * என்றருளிச் செய்கிறார். “முக்கணம்மானை நான்முகனை“ என்றது –முக்கண்ணனுக்கும் நான் முகனுக்கும் உயிரானவனை யென்றபடி.

 

English Translation

The eternal Lord graces all by becoming all of them, I have attained forever the Lord who is Siva and Brahma too.  He resides in Tirucchengunrur on the banks of Tirucchitraru, inspiring three thousand Vedic seers and devotees of high merit

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain