(3712)

படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவபெருமான் அவனே,

இடைப்புக்கோ ருருவும் ஒழிவில்லை யவனே புகழ்வில்லை யாவையும் தானே,

கொடைப்பெரும் புகழார் இனையர்தன் னானார் கூறிய விச்சையோ டொழுக்கம்,

நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றமர்ந்த நாதனே.

 

பதவுரை

கொடை பெரு புகழார்

-

ஓளதாரியத்தால் மிக்க புகழையுடையராய்

இனையர்

-

இன்னாரின்னா ரென்று ப்ரஸித்தி பெற்றவர்களாய்

தன்னானார்

-

எம்பெருமான் றன்னோடொத்த ஜ்ஞாந சக்திகளை யுடையராயிருக்குமவர்கள்

கூரிய விச்சையோடு ஒழுக்கம் நடை பலி

-

கூர்மையான ஞானமும் (அதற்கு தக்க) அனுட்டானமும் நித்ய்யாத்ரையான பகவதாராதனமும் இயல்வாகப் பெற்றிருக்குமிடமான

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதன்

-

திருச்சிற்றாற்றுப்பதியில்

படைப்பொடு கெடுப்பு காப்பு அவன்

-

ஸ்ருஷ்டி ஸம்ஹார்ரக்ஷணங்களுக்கு நிர்வாஹகனாயிருக்குமவன்

பிரமன் பரம்பரன்

-

ப்ரஹ்மஸ்வரூபியா யிருக்கிற பராத்பரன்

சிவபிரான் அவனே

-

சிவஸ்வரூபியுமானவன்

இடை புக்கு

-

மேற் சொன்ன இருவர்க்கு மிடையிலே ரக்ஷகனாய்ப் புகுந்து

ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே

-

ஒரு பதார்த்தைத்தையும் விட்டு நீங்காமல் ஸர்வாந்தர்யாமி யாயிருக்குமவன்

யாவையும் தானே

-

சேதநாசேதந விபாகமின்றிக்கே எல்லாம் தன்னதீன மாயிருக்கப் பெற்றவன்

புகழ்வு இல்லை

-

இதில் அதிசயோக்தியானது ஒன்றுமில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரமன் முதல் எறும்பளவாகவுள்ள ஸகல ஜந்துக்களினுடையவும் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணுவான் திருச்சிற்றாற்றெம்பெருமானே யென்னுமிடம் அர்த்த வாதமன்று, மெய்யே யென்கிறார். படைப்போடு கெடுப்புக்காப்பவன் – படைத்தல் அழித்தல் காத்தல் ஆகிய இவையெல்லாம் தன் அதீனமாம்படியிருக்குமவன். பிரமபரன்பரன் – மநுஷ்யர் முதலானவர்களிற்காட்டிலும் இந்திரனுக்கு எவ்வளவு ஏற்றமுண்டோ, அவ்வளவு ஏற்றம் இந்திரனிற்காட்டில் பிரமனுக்குண்டு, அவனிற்காட்டில் எம்பெருமானுக்கு அத்தனை யேற்ற முண்டு என்பது இங்கு அறியத்தக்கது. “பிரமனும் அவனே, சிவனும் அவனே“ என்ற கான தேஹத்தை தேஹமே ஆத்மா என்பதுபோல. இடைப்புக்கு ஓருருவு மொழிவில்லை –மில்லை, மற்றுள்ள ஸகல பதார்த்தங்களும் அவனிட்ட வழக்கே யென்கை. புகழ்வில்லையென்றது –அதிசயோக்தியன்று என்றபடி. இப்படி அர்த்தவாதமன்றிக்கே யதார்த்தமான புகழையுடைய எம்பெருமான் திருச்சிற்றாறமர்ந்த நாதன் என்கிறார்.

அத்தலம் எப்படிப்பட்ட தென்ன, அத்தலத்திலுள்ளாரது பெருமையைச் சொல்லும் முகத்தால் அத்தலத்தின் பெருமை சொல்லுகிறன பின்னடிகள். (கொடைப்பெரும்புகழார் இத்யாதி) அவ்வூரிலுள்ளார் ஔதார்யத்தில் பெரும்புகழ் பெற்றவர்கள், எதிரிகளையும் பண்ணிப் படைத்த புகழ். இனையர் –இன்னாரின்னாரென்று ப்ரஸித்தி பெற்றிருக்குமவர்கள். “எனையர்“ என்னும் பாடமும் வியாக்கியானங்களில் காட்டப்பட்டுள்ளது, இப்படியிருப்பார் பலரென்றபடி தன்னானார் – எம்பெருமானைப் போன்று தட்டுத் தடங்கலில்லாத சக்தியையுடையவர்கள். “அவன்றன்னைப் போலே அதிகரித்த காரியத்தில் வெற்றிகொண்டல்லது மீளாதவர்கள்“ என்பது ஈடு.

கூரிய விச்சையோடொழுக்கம் நடைப்பலியியற்கை – “வித்யா“ என்னும் வடசொல் விச்சையென விகாரப்பட்டது, ஞானத்தைச் சொன்னபடி. கூர்மையான ஞானமும் அதற்கேற்ற அனுட்டானமும், அனுட்டானங்களில தலையான பகவதாராதனமும் இயல்வாகப் பெற்றவர்கள். இப்படிப்பட்ட பரம பாகவதர்கள் மலிந்த திருச்சிற்றாற்றுப்பதியில் அமர்ந்த நாதன் முன்னிரண்டடிகளிற் சொன்ன பெருமை பொலிந்தவன்.

 

English Translation

The Lord who is these is himself Brahma, Siva and Indra too.  He fills all the worlds and is himself all of them.  He resides in Tirucchengunrur, no words can praise him, -with generous nobles, scholars, craftsmen and devotees

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain