(3709)

எனக்குநல் லரணை எனதா ருயிரை இமையவர் தந்தைதாய் தன்னை,

தனக்குன்தன் தன்மை அறிவரி யானைத் தடங்கடல் பள்ளியம் மானை,

மனக்கொள்சீர் மூவா யிரவர்வண் சிவனும் அயனும் தானுமொப் பார்வாழ்,

கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்கண் டேனே.

 

பதவுரை

எனக்கு நல் அரணை

-

எனக்கு நிர்ப்பயமான புகலிடமாயும்

எனது ஆர் உயிரை

-

என்னுடைய ஸத்தையை நிர்வஹித்துப் போருமவனாயும்

இமையவர்தந்தை தாய் தன்னை

-

நித்ய ஸூரிகளுக்கும் ஸகலவித பந்துவானவனாயும்

தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை

-

ஸர்வஜ்ஞனான தனக்கும் தனது தன்மை அறியக்கூடாமலிருப்பவனாயும்

தட கடல் பள்ளி அம்மானை

-

விசாலமான கடலிலே பள்ளி கொள்பவனாயுமுள்ள ஸர்வேச்வரனை

மனம் கொள் சீர்

-

மனத்திலே கொண்ட பகவத் குணங்களையுடையவர்காளன

மூவாயிரவர்

-

மூவாயிர மந்தணர்கள்

வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார்

-

சிவனையும் பிரமனையும் திருமாலையும் மொத்தவர்களாய்க் கொண்டு

வாழ்

-

வாழுமிடமாய்

கனம் கொள் திண்மாடம்

-

செறிந்து திண்ணிதான மாடங்களையுடைத்தான

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற தனுள்

-

திருச்சிற்றாற்றுப் பதியிலே

கண்டேன்

-

ஸேவிக்கப்பெற்றேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பரிவர்களின் மிகுதியைக் காட்டும் பாசுரமிது. இப்பாட்டுக்கு மூன்றாமடி உயிரானது, * மனக்கொள்சீர் மூவாயிரவர் வண் சிவனுமயனுந்தானு மொப்பார்வாழ் * என்பது. எம்பெருமானுடைய திருக்கலியாண குணங்களை மனத்திலே கொண்டு “இக்குணங்களை யுடையானுக்கு என்வருகிறதோ“ என்று அஸ்தாநே பயசங்கை பண்ணி வர்த்திப்பார் மூவாயிரவருளராம், அதைக்காட்டி எம்பெருமான் ஆழ்வாரைத் தேற்றுவித்தபடியாலே அதைப் பாசுரத்திலே கூட்டி அநுஸந்தித்தாராயிற்று. அவர்களை வண்சிவனு மயனுந்தானு மொப்பார் என்றது –ஆளவந்தார் ஸ்தோத்ரத்னத்தில் * த்வதாச்ரிதாநாம் ஜகதுத்பவஸ்திதி ப்ரணாச ஸம்ஸார விமோசநாதய பவந்தி லீலா, * என்றருளிச் செய்தபடி ஸ்ருஷ்டிஸ்திதி ஸம் ஹாராதிகளை இவர்களே நிரவஹிக்க வல்லார யிருக்கையைச் சொன்னபடியாம். இங்கே நம்பிள்ளையீடு – ஸ்ரீபரத்வாஜமஹாமுனியோடொக்கு மவர்கள், தன்னைப் பிரிந்தவன்றுமுதல் ராவணவதம் பண்ணி மீளுமளவுஞ் செல்ல “இவர்களுக்கு என் வருகிறதோ“ என்று இத்தையே நினைத்திருந்தவனிறே ஸ்ரீ பரத்வாஜபகவான்“ என்று.

 

English Translation

I have found the refuge for my soul, in high mansioned Tirucchengunrur.  Here he resides amid three thousand devotees with Siva and Brahma.  He is father and mother to the celestials and the sages.  He reclines in the deep ocean, not knowing his own nature

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain