(3708)

அல்லதோர் அரணும் அவனில்வே றில்லை அதுபொரு ளாகிலும், அவனை

அல்லதென் ஆவி அமர்ந்தணை கில்லா தாதலால் அவனு றை கின்ற,

நல்லநான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும்புகை விசும்பொளி மறைக்கும்,

நல்லநீள் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெனக்குநல் லரணே.

 

பதவுரை

அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை

-

திருச்சிற்றாறு தவிர்ந்த மற்ற கோவில்களில் ரக்ஷகனாயிருக்கின்றவனும் அவனிற் காட்டில் வேறுபட்ட வனல்லன்,

அது பொருள் ஆகிலும்

-

என்கிறவதுவே உண்மைப் பொருளானாலும்

என் ஆவி

-

என் உயிரானது

அவனை அல்லது அமர்ந்து அணைகில்லாது

-

அத்திருச்சிற்றாறெம்பெருமானை யொழிய வேறொருவனைப் பொருந்தி விரும்பமாட்டாது,

ஆதலால்

-

ஆகையினாலே

அவன் உறைகின்ற

-

அப்பெருமான் நித்யவாஸம் பண்ணுமிடமானதும்

நல்ல நான்மறையோர்

-

வைதிகோத்தமர்கள்

வேள்வியுள் மடுத்த

-

யாகத்திலிட்ட ஹவிஸ்ஸுக்களிலுண்டான

நறு புகை

-

பரிமளம் மிக்க புகையானது

விசும்பு ஒளி மறைக்கும்

-

ஆகாசத்திலுள்ள (ஸூரியன் முதலிய) சுடர்ப்பொருள்களை மறைக்கும் படியாயுள்ளதும்

நல்ல நீள மாடம்

-

விலக்ஷணமாக வோங்கின மாடங்களையுடையதுமான

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு

-

திருச்சிற்றாற்றுப் பதியானது

எனக்கு நல் அரண்

-

எனக்கு நிர்ப்பயமான புகலிடம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மற்றும்பல திருப்பதிகளா முண்டாயிருக்க, ஆழ்வீர்! நீர் சிற்றாற்றிலே இவ்வளவு நிர்ப்பந்தம் கொள்வதேன்? என்று சிலர் கேட்பதாகக் கொண்டு அதற்கு மறுமொழி கூறுகின்றாரிதில். அல்லதோரணும் அவனில் வேறில்லை அது பொருள் –திருச்சிற்றாறு தவிர்ந்த மற்ற புகலிடமான அர்ச்சரஸ்தலங்களும் திருச்சிற்றாற்றுப் பெருமானுகந்தவையே, இதுபரமார்த்தம் இதில் எனக்கு இறையேனும் ஸந்தேஹமில்லை, எல்லாத் திருப்பதிகளும் ஒன்றுதான், அத்திருப்பதிகளிலுள்ள எம்பெருமான்க ளெல்லாரும் ஒருவரேதான் என்கிறதத்துவம் நானறியாததன்று என்றபடி.

அப்படியாகில் திருச்சிற்றாற்றுப் பெருமாளையல்லது அறியேனென்று இந்த நிர்ப்பந்தம் எதற்காக? என்கிறீர்களோ? ஆகிலும் அவனை யல்லது என்னாவி அமர்ந்தணைகில்லாது பெருமானை என் மனம் சேர்ந்தணையாது. சிறிய திருவடி * ஸ்நேஹோ மே பரமோ ராஜந்! த்வயி நித்யம் ப்ரதிஷ்டித, பக்திச் ச நியதா வீர! பாவோ நாந்யத்ர கச்சதி * என்று பரம பதநாதனையும் வேண்டேனென்றான், பரமபதநாதன் ஈச்வரனல்லனோ? ப்ராப்த சேஷியல்லனோ? எதற்காக விஷயத்திலும் கொள்ளுங்கோ ளென்கிறார். அமர்ந்து அணைகை –உள்வெதுப்பற்றுப் பொருந்றெனக்கு நல்லரணே என்ற விடத்து அந்வயம். “திருச்சிற்றாறே எனக்கு நல்லரண்“ என்று ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுக. அத்தலத்தின் வைதிக ஸம்ருத்தி சொல்லுகிறது மூன்றாமடி. நல்ல நான் மறையோ ரென்றது – காம்யகருமங்களைச் செய்பவரல்லர், பகவத் கைங்கர்ய மென்னும் ப்ரதிபத்தியோடே செய்பவர்களென்றபடி. காம்யமாகச் செய்தாலும் குற்றமில்லை யென்கிற திருவுள்ளமும் நம்பிள்ளைக்கு உள்ளது. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி, “அநந்யப்ரயோஜந ராகில் இவர்கள் நுஷ்டானத்துக்கு ப்ரயோஜநமென்னென்னில் ஸ்வயம் ப்ரயோஜநமாதல். பகவத் ப்ரதிபக்ஷங்களையழியச் செய்யும் அபிசாரம் பலமாதல், எம்பெருமானாரைப் போலேயாயிற்று அவ்வூரில் ப்ராஹ்மணரும்“ என்று.

இங்கு அறிவேண்டிய இதிஹாஸமாவது – கொடுங்கோன்மை கொண்ட சோழனுக்காக மேல்நாட்டுக் கெழுந்தருளின எம்பெருமானார் திருநாராயணபுரத்தில் பதினொருஸம்வத்ஸர மெழுந்தருளியிருந்தும் அவனுடைய வாழ்நாள் மாளக் காணாமையலே அவன் முடியும்படி, திருவேங்கட முடையானை அதிதேவதையாகப் பண்ணிக்கொண்டு அபிசாரகரும்மொன்று அநுஷ்டித்து மநோரதம் தலைக்கட்டப் பெற்றாரென்பது.

 

English Translation

Any other refuge is not different from him, who is all.   This is true, but even my heart seeks him alone.  Hence his abode in high mansioned Tirucchengunrur is my only refuge, where the fragrant smoke of the Vedic sacrifice clouds the sky

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain