(3706)

என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்தவெம் பெருமான்,

முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள என்னையாள் கின்றேம் பெருமான்,

தென்திசைக் கணிகொள் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை மீபால்

நின்றவெம் பெருமான், அடியல்லால் சரணம் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே.

 

பதவுரை

இமையவர் பெருமான் என் அமர் பெருமான்

-

நித்ய ஸூரிநாதனாப் போலே என்க்குற்ற நாதனாய்

இரு நிலம் இடந்த எம்பெருமான்

-

மாநிலத்தைப் பிரளயாபத்திலிருந்து இடந்தெடுத்த எமது நாதனாய்

முன்னை வல் வினைகள் முழுது உடன்மாள

-

அநாதியான வலிய தீவினைகளெல்லாம் ஒரு நொடிப் பொழுதில் மாளும்படியாக

என்னை ஆள்கின்ற எம்பெருமான்

-

என்னை அடிமை கொண்டருளுகிற பெருமையை யுடையனாய்

தென் திசைக்கு அணி கொள்

-

தென் திசைக்கு அலங்காரமாகக் கொள்ளப்படுவதான

திருச் செங்குன்றூரில் திருச்சிற்றாற்ங்கரை மீபால் நின்ற

-

திருச்சிற்றாறென்னும் திருப்பதியின் மேலேப்பக்கதில்லெழுந்தருளி யிருப்பவனான

எம்பெருமான்

-

அஸ்மத்ஸ்வாமியினுடைய

அடி அல்லால்

-

திருவடிகளைத் தவிர்த்து

எனக்கு நினைப்பிலும் பிறிது சரண் இல்லை

-

என்னுடைய மனோரது தசையிலும் வேறொரு புகல் இல்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “என்னமர் பெருமானிமையவர் பெருமா“ வென்ற விதனை “இமையவர் பெருமான் என்னமர் பெருமான்“ என மாற்றியந்வயிப்பது. * அயர்வது ம்மார்களதி பதியாயிருக்குமவன் எனக்கு அமர்ந்த ஸ்வாமியாயுள்ளான். அந்த பரத்வமெஙகே, இந்த ஸௌலப்ய மெங்கே! என்று வியப்புத் தோற்ற வருளிச் செய்கிறபடி இரு நிலமிடந்த எம்பெருமான் – பிரளயாபத்தைப் போக்கின தன் வல்லமையைக் காட்டி என்னை ஆட்படுத்திக் கொண்டவனென்றபடி.

முன்னைவல்வினைகள் முழுதுடன்மாள என்னையாள்கின்ற வெம்பெருமான் – கீழே தமக்குப் பிறந்த அச்சத்தைப் போக்கினபடியைச் சொல்லுவது இங்கு விவக்ஷிதம்.

நான் காமடியில் “சரண்நிலைப்பிலும்“ “சரணம் நினைப்பிலும்“ என்பன பாட பேதங்கள். “சரணம்“ என்று பாடமாம்போது “அடியல்லால்“ என்பது “அடியலால்“ என்று தொகுதுதலாகக் கொள்க.

 

English Translation

My eternal Lord came and measured the Earth and sky.  He rules over me, destroying my past karmas by the root.  He stands in Tirucchengunrur, jewel of the South, on Tirucchitraru.  I cannot think of a refuge other than his lotus feet

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain