(3705)

எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பனென் அப்பன்,

பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும் பொருந்துமூ வுருவனெம் அருவன்,

செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு

அங்கமர் கின்ற, ஆதியான் அல்லால் யாவர்மற் றெனமர் துணையே?

 

பதவுரை

உங்கள் செல் சார்வு

-

யாம் சென்று சேரும் புகலிடமாயும்

யாமுடை அமுதம்

-

நமக்குப் பரமபோக்யனாயும்

இமையவர் அப்பன்

-

தேவாதி தேவனாயும்

என் அப்பன்

-

எனக்கு ஸ்வாமியாயும்

பொங்கு மூ உலகும்

-

பரந்த மூவுலகத்தையும்

படைத்து அழித்து அளிக்கும்

-

ஸ்ருஷ்டித்து ரக்ஷித்து ஸம்ஹரிப்பானாயும்

பொருந்தும் மூ உருவன்

-

மேலே சொன்ன முச்செயல்களுக்கும் பொருத்தமாக மூர்த்தித்ரயஸ்வரூபியாயும்

எம் அருவன்

-

எமக்கு உயிரானவனாயும்

செம் கல் உகளும் தேம் பனை புடை சூழ்

-

செவ்விய மீன்கள் துள்ளும்படி தேன்மிக்க நீர் நிலங்கள் சூழ்ந்த

திருச் செங்குன்றூர் திருச்சிற்றாறு அங்கு

-

திருச்சிற்றாரென்னும்பதியிலே

அமர்கின்ற

-

அமர்ந்திருப்பவனாயு மிருக்கின்ற

ஆதியான் அல்லால்

-

ஆதிப்பிரானல்லது

என் அமர் துணைமற்று யாவர்

-

எனக்குற்ற துணை வேறுயார்? (யாருமிலர்)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வெறும் வீர ஸ்ரீயைக் காட்டினபடியேயன்று, தன்னுடைய பரமபோக்யத்தை காட்டிக் கொடுத்தானென்கிறார்யாமுடையமுதம் என்று. எங்கள் என்றும் யாமுடை கூட்டி யென்க. “* கேசவன் தமர்க்குப் பின்பு தனியரல்லரே“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. “இமையவரப்பன்“ என்பது அத்தலத் தெம்பெருமானுக்கு இற்றைக்கும் வழங்குந் திருநாமம். இமையவரப்பனென்று சொல்லி உடனே என்னப்ப னென்கையாலே நித்ய ஸூரிகளை அடிமை கொண்டாப்போலே தம்மையுமடிமை கொண்டவன் என்பது காட்டப்பட்டதாம். “குறைவற்றார்க்கும் ஸத்தா ஹேதுவாய் குறைவுக்கெல்லையான வெனக்கும் ஸத்தா ஹேதுவானவன்“ என்பது ஈடு.

நான்முகனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டியை நடத்தியும், தானான தன்மையில் ரக்ஷணத்தை நடத்தியும், ருத்ரனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸம்ஹாரத்தை நடத்தியும் இப்படி மூவுருவாயிருக்குமவன் என்னுடைய பயத்தைப்போக்கி எனக்கும் தாரகனாயிராநின்றானென்கிறது இரண்டாமடி. இப்படிப்பட்ட வெம்பெருமான் நீர்வளம் பொருந்திய திருச்சிற்றாற்றுப்பதிலே, விபவாவதாரங்கள் போலே தீர்த்தப் ப்ரஸாதித்துத் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளாமே நித்யஸந்நிதி பண்ணி யிராநின்றான், அவனை யொழிய எனக்கு உற்ற துணையில்லை, அவனே நமக்கு நற்றுணைவன் என்றாராயிற்று.

 

English Translation

Our sweet destination is Tirucchengunrur where fish dance enchanted in nectar-sweet waters of Tirucchitraru surrounding our first-Lord.  He is the Lord who takes various forms to create, protect and destroy the world.  Other than him, our ambrosia and master, who can be my refuge?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain