nalaeram_logo.jpg
(245)

கன்னிநன் மாமதிள் சூழ்தரு பூம்பொழில் காவிரித் தென்ன ரங்கம்

மன்னிய சீர்மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வு கந்து

உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே யூட்டி ஒருப்ப டுத்தேன்

என்னின் மனம்வலி யாள்ஒரு பெண்இல்லை என்குட்ட னேமுத் தம்தா.

பதவுரை

கன்னி

-

அழிவற்ற

நல்

-

விலக்ஷணமான

மா மதின்

-

பெரியமதில்களாலே

சூழ்தரு

-

சூழப்பட்டு

பூ பொழில்

-

பூஞ்சோலைகளையுடைய

காவிரி

-

காவேரிநதியோடு கூடிய

தென் அரங்கம்

-

தென்திருவரங்கத்தில்

மன்னிய

-

பொருந்தியெழுந்தருளியிருக்கின்ற

சீர்

-

கல்யாணகுணயுக்தனான

மது சூதனா

-

மதுஸூதநனே! [கண்ணபிரானே!]

கேசவா

-

கேசவனே!

பாவியேன்

-

பாவியாகிய நான்

வாழ்வு உகந்து

-

(நமது ஜாதிக்கேற்ற கன்று மேய்க்கையாகிற) ஜீவநத்தை விரும்பி

உன்னை

-

(இவ்வலைச்சலுக்கு ஆளல்லாத) உன்னை

சிறுகாவே

-

விடியற்காலத்திலேயே

ஊட்டி

-

உண்ணச்செய்து

இள கன்று மேய்க்க

-

இளங்கன்றுகளை மேய்க்கைக்காக (அவற்றின்  பின்னே போக)

ஒருப்படுத்தேன்

-

ஸம்மதித்தேன்;

(இப்படி உன்னை அனுப்பிவிட்டுப் பொறுத்திருந்த)

என்னில்

-

என்னிற்காட்டில்

மனம் வலியாள்

-

கல்நெஞ்சையுடையளான

ஒரு பெண்

-

ஒரு ஸ்த்ரீயும்

இல்லை

-

(இவ்வுலகில்) இல்லை;

என் குட்டனே

-

எனது குழந்தாய்!

முத்தம் தா

-

(எனக்கு) ஒரு முத்தம்கொடு.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கன்னி-ஸ்திரமாயிருக்கை; நிகண்டு;- “கன்னிபெண் அழிவில்லாமை கட்டிளமைக்கும் பேரே”” என்றான் மண்டலபுருடன். யாவரும்வந்தடி வணங்க அரங்கநகர் துயின்ற ஸர்வேச்வரனான உன் அருமையை நோக்காது உன்னை இடைப்பிள்ளையாகவே நினைத்துச் சாதித்தொழிலென்று கன்று மேய்க்கைக்காகக் காலையிலே ஊட்டிக் காடேறப்போகவிட்ட எனது நெஞ்சின் காடிந்யத்தை என்னென்று சொல்வேன்; இவ்வாறு கடினமான நெஞ்சையுடையஸ்த்ரீ மர்ராரெனுங் கிடைப்பாளோவென்று இவ்வுலகெங்குந் தேடினாலும் கிடையாள்; வேறு சிலராகில் நெஞ்சழிந்து விழுந்து விடார்களோ? இனி இதைப்பற்றிச் சிந்தித்துப் பயனென்? எனக்குண்டான இவ்வருத்தமெல்லாந்தீர ஒருமுத்தங் கொடுத்தருள் என்று அணைத்து உகந்து சொல்லுகின்றாள். வாழ்வு உகந்து என்ற சொல்நயத்தால்-ஸ்வப்ரயோஜநத்தைக் கணிசித்தேனேயொழிய உன் ஸம்ருத்தியை நான் விரும்பிற்றிலேனே என்று உள் வெதும்புகின்றமை தோற்றும். ஒருப்படுத்தேன்=ஒருப்பாடு-ஒருமனப்படுதல், ஸம்மதித்தல் என்றபடி: ‘நீ கன்று மேய்க்கும்படியை நான் ஸம்மதித்தேன்’ என்கை. “ஒருப்படுத்தேன்””  என்கிறவிது-உடன்பாட்டுக்கும் எதிமறைக்கும்

பொதுவான வினை; இங்கு உடன்பாட்டில் வந்ததென்க. முத்தம்-அதரம்.

English Translation

O Madhusudana, residing with lasting glory in strong walled Srirangam amid fragrant groves watered by the Kaveri River! O Kesava, life-breath of this wicked self! Wantonly I fed you early in the morning and sent you to graze the calves. There is no human with a heart harder than mine! My child, quick, gives me a kiss!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain