nalaeram_logo.jpg
(3698)

பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம்,

அணியார் ஆழியும் சங்கமு மேந்தும் அவர்காண்மின்,

தணியா வெந்நோ யுலகில் தவிர்ப்பான், திருநீல

மணியார் மேனியோ டென்மனம் சூழ வருவாரே.

பதவுரை

பணியா அமரர்

-

எவரையும் பணிய வேண்டாத நித்ய ஸூரிகளினுடைய

பணிவும் பண்பும் தாமே ஆம்

-

பணிவுக்கும் ஞானும் முதலிய குணங்க்களுக்கும் தாமே இலக்காயிருபவரும்

அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்துமவர்

-

ஆபரணமாப் பொருந்திய திருவாழி திருச்சங்குகளைத் தாங்கி நிற்பவருமான அப்பரமபுருஷ

பணியா வெம் நோய் தவிர்ப்பான்

-

ஒருகாலும் தணியாத வெவ்விய நோய்களைத் தவிர்பதற்காக

திரு ஆர் நீலம் மணி மேனியோடு

திரு ஆர் நீலம் மணி மேனியோடு

-

அழகியதாய் நீலமணி போன்றதான வடிவோடுகூட

என் மனம் சூழ உலகில் வருவார்

-

என்மனம் பிரமிக்கும்படியாக இவ்வுலகில் வந்து உலாவுவார்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய சயனத்தை நினைத்து பரிந்து பேசின ஆழ்வாரை நோக்கி “நீர் இப்படி துடிக்கக் கடவீரோ? அவன் ஸர்வரக்ஷகனன்றோ, என்று சொல்ல, அதற்கு “நிர்யஸூரிகளின் பரிவுக்கு இலக்கானவ்வன் ஸம்ஸாரத்திலே அவ்வடிவோடே வந்து உலாவாநின்றால் நானிப்படி துடிக்காமலிருக்க முடியுமோ? வேறு எம்பெருமானைத் தவிர வேறுயாரையும் ஒருநாளும் பணிந்தறியாத அமரர்களன்றோ நித்யஸூரிகள். அவர்களுடைய பணிவுக்கும் ஞானம் முதலிய குணங்களுக்கும் தாமே இலக்காயிருக்குமவர் என்றபடி. ஆறாயிரப்படியில் நிர்வாஹம் வேறுவகையாகவுள்ளது, “ஸ்வாச்ரித சதுர்முகாதி தேவர்களுக்கு ஸ்வேதரஸகல ஜநாபிவந்த்யத்வ நிரதிசயஐச்வர்யப்ரதனாய்“ என்பது ஆறாயிரப்படியருளிச் செயல். நான்முகன் முதலிய தேவர்களுக்கு தங்களைப் பலரும் பணியும்படியான பெருமையையும் செல்வங்களையும் அளித்தவன் என்பது கருத்து, வணங்காமை என்கிற தன்மைசிலரிடத்திலே ஹேயமாகவும் சிலரிடத்திலே சிறப்பாகவும் சொல்லப்படும். வணங்குவதற் கென்றே பிறந்த நம் போல்வார் வணங்காதிருந்தால் அது “வணங்காமன்னன்“ என்றும் “வணங்கலி லரக்கன்“ என்றும் சொல்லும்படியாகி ஹேயமாகும். தேவதைகளாகவுள்ளவர்கள் எம்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்க வேண்டியவர்களல்லாமையாலே பணியாவமார் என்றது பொருந்தும்.

அணியாராழியஞ் சங்கமு மேந்துமவர்காண்மின் என்றதன் உட்கருத்தை நம்பிள்ளை கண்டறிந்து வெளியிடுகிறபடி பாரீர், “ஸர்வாபரணமும் தானேயாகப் போரும்படியான திவ்யாயுதங்களைத் தரித்து நித்யஸூரிகளுக்குக் காட்சி கொடுத்தால் அவர்களும் அஸ்தாநே சங்கைண்ணி மங்களாசாஸனம் பண்ணும்படியாயிற்று இருப்பது.“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. இங்கே ஆழ்வார் துடிக்கிறதுடிப்பு திருநாட்டிலே நித்யஸூரிகளுக்கு முண்டாயிருக்குமென்றபடி.

அஞ்சுவதற்கு நிலமல்லாத திருநாட்டிலேயே அப்படியானால் இந்நிலத்திற் சொல்ல வேணுமோவென்கிறார் பின்னடிகளில். உலகில் என்பதை மூன்றாமடியிலும் அந்வயிக்கலாம். நான்காமடியிலும் அந்வயிக்கலாம். அதாவது, “உலகில் தணியாவெந்நோய் தவிர்ப்பான்“ என்பது ஒரு அந்வயம், உலகில் வருவார்“ என்பது மற்றொரு அந்வயம். தாபத்ரயம் முதலான துக்கங்கள் தணியாவெந்நோயென்படுகிறது.

திருநீலமணியார் மேனியோடு – அப்பெருமான் அவ்விபூதியைவிட்டு இவ்விபூதியிலே வரவேண்டினால் நீலமணி போலே ச்ரமஹரமாய் ஸூகுமாரமான அவ்வடிவோடே வரவேணுமோ? அப்படி வருகையால் என் என்மனம் சுழற்சியடைகின்றது என்பதை என்மனம் சூழ என்பதனால்காட்டினபடி.

English Translation

Being the Lord of gods, he receives their homage, he wields a beautiful conch and discus, look!  He destroys the pall of existence, he will came and light my heart with his gem-hue

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain