nalaeram_logo.jpg
(3695)

ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்,

வாளும் வில்லுங் கொண்டுபின் செல்வார் மாற்றில்லை,

தாளும் தோளும் கைகளை யாரத் தொழக்காணேன்,

நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே.

பதவுரை

ஆளும் ஆளார்

-

(கைங்கர்யத்திற்காக) ஒரு ஆளையும் வைத்துக்கொள்ளுகிறாரில்லை.

ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்

-

திருவாழி திருச்சங்குகளைச் சுமப்பவர் தாமேயாயிருக்கிறாரே

வாளும் வில்லும் கொண்டு

-

நந்தக்வாளையும் சார்கவில்லையுங் கொண்டு

பின் செல்வார் மற்று இல்லை

-

பின் செல்லுகைக்கு ஒருவருமில்லையே,

தாளும் தோளும்

-

திருவடிகளிலும் திருத்தோள்களிலு மீடுபட்டு

கைகளை ஆர தொழ காணேன்

-

கையாரத் தொழுபாரையுங் காண்கின்றிலேன் (ஆதலால்)

ஞாலத்து அடியேன் நாளும் நாளும் நாடுவன்

-

இவ்விபூதியிலே அடியேன் நாள்தோறும் பின் செல்லப்பாராநின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழிரண்டுபாட்டுக்களிலே தமக்கு ஒருவரும் துணையில்லையென்று சொன்ன முகத்தாலே தம்முடைய தனிமையை வெளியிட்டாராயிற்று. இப்படி தம்முடைய தனிமையைச் சொன்ன ப்ரஸங்கத்தாலே அவனுடைய தனிமையை நினைத்து வருத்துகிறாரிப்பட்டால்.

ஆளும் ஆளார் – எம்பெருமானுக்கு உபய விபூதியும் ஆளாயிருக்கச் செய்தேயும் அப்பெருமான் ஒரு சேவகனைத் தன்னிடம் வேலைக்கு வைத்துக்கொள்ளவில்லை யென்று வயிறு பிடிக்கிறாராழ்வார். எதனாலேயென்னில், (ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்) ஆள் இருந்தால் திருவாழி திருச்சங்குகளைத் தாமே சுமப்பரோ? மடாதிபதிகள் தம்முடைய த்ரிதண்டத்தையும் ஒரு கைங்கர்யபார் கையிலே கொடுத்துத் தாம் கைவீசிக்கொண்டு  பேரகாநின்றார்களே அவர்களுடைய திருமேனி அத்தனை ஸுகுமாரமானால் எம்பெருமானது திருமேனியின் ஸௌகுமார்யம் வாய்கொண்டு வருணிக்ப்போமோ? திருவாழி திருச்சங்கு முதலான திவ்யாயுதங்களைத் தாம் சுமக்கலாமோ? அவை சுமக்க ஆள்வைத்துக்கொள்ள வேண்டாவோ? என்கிறார்.

இங்கே நம்பிள்ளையீடு – விபூதித்வயத்திலும் பரிகைக்கு ஆளில்லை. தனியே ஒருவரை ஆளவேணுமென்றிருக்கிறார், நித்யஸூரிகள் பகவதனுபவத்திலே அந்யபரர், ஸம்ஸாரிகள் சப்தாதிகளிலே அந்யபரர், (ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்) ஆபரணமான திவ்யாயுதங்கள், அவன் ஸௌகுமார்யத்தாலே மலையெடுத்தாற் போலே சுமையாய்த் தோற்றுகிறது இவர்க்கு“

திருவாழி திருச்சங்குகள் எம்பெருமானுக்கு நிருபகங்களாகையாலே அவற்றை அவனே சுமந்தாக வேண்டுமேயல்லது பிறர் சுமக்கக்கூடுமோ? என்று சில பரவை காந்திகள் சொல்லுவதாகக் கொண்டு, அதைவிட்டு, வாளும் வில்லுங்கொண்டு பின் செல்வார் மற்றில்லை என்று வேறொன்றிலே தோள்மாறுகிறார். ராமாவதாரத்திலே இளைய பெருமாள் * ப்ருஷ்டதஸ் து தநுஷ்பாணிர் லக்ஷ்மணோநுஜகாம ஹ * என்னும்படியாக வாளும் வில்லுங்கொண்டு பின் தொடர்ந்து திரிந்தாரே, அப்படியொருவரைப் பின்னேகொண்டு செல்லலாகாதோ வென்கிறார்.

தாளுந் தோளும் கைகளையாரத் தொழக்காணேன் – பெருமாள் நடக்கும்போது மாறியிடுந் திருவடிகளும் வீசுகின்ற திருத்தோள்களும் காப்பிட வேண்டும்படி யிருக்குமே, அந்தோ, அவற்றுக்கும் மங்களா சாஸனம் செய்வாரில்லையே! என்கிறார். கைகளையார என்றது – கைகளார என்றபடி, ஐகாரம் – சாரியை. தொழக் காணேன் – இன்னார் தொழ என்பது வியக்தமாக இல்லாமையாலே, பிறர் தொழக் காணேன் – இன்னார் தொழ என்பது வியக்தமாக இல்லாமையாலே, பிறர் தொழக் காணேன், நான் தொழும்படி காணேன் என்று இரண்டு வகையாகவும் கொள்ளலாம். ஆறாயிரப்படியில் – “தானெழுந்தருளும் போது அவன் திருவடிகளையும் திருத்தோள்களையும் என்னுடைய கைகளினுடைய விடாய் தீரும்படி தொழக் காணப்பெறுகிறலேன்“ என்று காண்கையாலே, திருவடிகளையும் திருத்தோள்களையும் ஆழ்வார் தாம் தொழப் பெறாமே வருந்தியருளிச் செய்வதாகத் தெரிகிறது. திருவடிகளுக்கும் திருத்தோள்களும் பரிகின்றவர்களைக் காணேன் என்கிற பொருளும் பொருந்தும். ஆக, கீழ் மூன்றடிகளாலும் பரிவர் இல்லாமைக்கு வருந்தி, இனி ஈற்றடியினால் தம்முடைய பரிவின் மிகுதியைக் காட்டுகின்றார். நாளும்நாளும் காடுவனடியேன் ஞாலத்தே என்று (ஞாலத்தே) இங்கே ஈடு இன்சுவை மிக்கது, “பரமபதத்திலேயிருந்து அஸ்தாநே பயசங்கை பண்ணுகிறானோ? ப்ரஹ்மாஸ்ர்த ப்ரயோகம் பண்ணுவார்  நாகபாசத்தை யிட்டுக்கட்டுவார், அழைத்து வைத்து மல்லரையிட்டு வஞ்சிக்கத் தேடுவார்,  பொய்யாஸன மிடுவாராகிற தேசத்திலே வர்த்திய நின்றால் நான் அஞ்சாதே செய்வதென்?

English Translation

Alas, nobody comes here bearing his conch and discus, nobody comes following him with his dagger and bow, I look out for him everyday to serve and worship him, on this Earth, but do not see him, alas!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain