nalaeram_logo.jpg
(3690)

காண்கொடுப் பானல்ல னார்க்கும் தன்னைக் கைசெயப் பாலதோர் மாயந் தன்னால்,

மாண்குறல் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த,

சேண்சுடர்த் தோள்கள் பலத ழைத்த தேவ பிராற்கென் நிரைவினோடு, நாண்கொடுத்

தேனினி யென்கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்.

பதவுரை

ஆர்க்கும்

-

எப்படிப்பட்ட பேரளவுடையார்க்கும்

தன்னை காண் கொடுப்பான் அல்லன்

-

தன்னைக் காணக் கொடாத வனாயிருந்து வைத்து

மாயம் தன்னால்

-

தனது வஞ்சனத்தினாலே

கை செய் அப்பாலது ஓர்

-

அக்ருத்ரிம்மாய் அத்னிதீயமான

கோலம் மாண் குறள் வடிவு

-

ஸௌந்தரியத்தையுடைய  யாசகவாமன வேஷத்தை

காட்டி

-

(மஹாபலிக்கு) வெளிக்காட்டி (உடனே)

மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த

-

மண்ணுலகும் விண்ணுலகும் நிறையும்படியாக வியாபிதவனாய்

சேண் சுடர் பல தோள்கள் தழைத்த

-

ஓங்கி விளங்காநின்ற பல திருத்தோள்களும் தழைத்திருக்கிற

தேவபிராற்கு

-

தேவபிரானான எம்பெருமானுக்கு

என் நிறைவினோடு

-

என்னுடைய ஸ்த்ரீத்வபூர்த்தியோடே கூட

நாண் கொடுத்தேன்

-

லஜ்ஜையையும் இழந்தேன்,

நல் நுதல் என்னுடைய நங்கைமீர்காள்

-

விலக்ஷணமான திருமுக மண்டலத்தையுடையீர்களாயிருக்கிற என்னுடைய தோழிகளே!

இனி என் கொடுக்கேன்

-

இன்னமும் என்ன இழக்கக்கடவேன்?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் * கடைபறப்பாசங்கள் விட்ட பின்னையன்றி அவனவைகாண் கொடானே * என்று கூறின தலைவியைநொக்கி நங்காய்! எங்களோடு உறவை வேணுமாகில் நீ விட்டுத் தொலைக்கலாமேயொழிய அவன் காட்சி கொடுப்பதென்பது சொல்ல, எல்லாம் பண்டே இழந்தாயிற்றன்றோ, இன்னமும் இழக்க என்னவிருக்கிறது? என்று அவர்களுக்குச் சொல்லுகிறாள்.

(தன்னை ஆர்க்கும் காண்கொடுப்பானல்லன்) தமது முயற்சியினால் காண நினைப்பார் எத்தனை சிறப்புப் பெற்றவர்களாயிருந்தாலும் அவர்களுக்குத் தன்னைக் காட்டிக் கொடுக்குமியல்வின்னல்லன் எம்பெருமான். இது தாய்மாருடைய வார்த்தையின் அநுவாதமிருக்கிறபடி. அவன் துர்லபன் என்றன்றோ நீங்கள் சொல்லுகிறீர்கள், ஆமாம், அவன் துர்லபனென்றே கொள்ளுங்கோள் என்று அப்யுபகம்யவாதம் பண்ணுகிறபடி. துர்லபனென்று “காணகொடுப்பானல்லன் ஆர்க்குந்தன்னை“ என்று இசைந்து சொல்லிவிடுவதனால் லாபமில்லையே யென்னில், லாபமோ நஷ்டமோ, அந்த விசாரம் இங்கில்லை. “இன்னமும் ஆத்மாத்மீயங்களே நீ இழக்கவேபோகிறாய்“ என்று தாய்மார்கள் சொன்னதற்கு வலிதாக விடை கூறுவது மேல் முழுவதும். எந்த வடிவைக் காட்டி மஹாபலியின் ஸர்வஸ்வத்தையும் கொள்ளை கொண்டானானபின்பு, இன்னமும் அவன் கொள்ளை கொள்ளத்தக்கதாய் நான் இழக்கத் தக்கதாய் என்ன இருக்கிறது என்பது கருத்து.

“கை செய் அப்பாலது“ என்றது மாயத்தில் அந்வயிப்பதன்று, மாண்குறள் கோலவடிவுக்கு விசேஷணமாய் அதிலே அந்வயிக்கும். கைசெய்கைக்கு அப்பாலதான அழகையுடைய வடிவு. * ஓவியத்தெழுதவொண்ணா வுருவத்தாய்! * (கம்பர்) என்றபடி சித்திரத்திலும் எழுத வொண்ணாதபடி மிக அற்புதமாயமைந்த ஒப்புயர்வற்ற அழகையுடைய வடிவைக்காட்டி யென்றபடி. உபயவிபூதி நாதனான தான் ஒன்றுமில்லாதான் போலே யாசகனாய் வருகையும், சிறுகாலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்து கொள்ளுகையும் ஆகிய மாயத்தை நினைத்து, மாயந்தன்னால் எனப்பட்டது. மாவலி பரம சந்தோஷத்துடனே நீர்த்தாரையைக் கையில்விட, கையிலே நீர் விழுந்தவளவிலேயே ஸமஸ்த லோகங்களும் விம்மவளர்ந்தான், கற்பகச் சோலை பணைத்தாற்போலே திருத்தோள்கள் தழைத்தன. இந்திரனிழந்த ராஜ்யத்தை மீட்டுக்கொடுத்து அதனாலுண்டான மகிழ்ச்சி மிகுதியினால் வடிவுபுகர்பெற்று விளங்கிற்று, அப்படிப்பட்ட விலக்ஷணமான வடிவை எனக்குக்காட்டி எனது ஸர்வஸ்வமான அடக்கத்தை இழக்கக்கூடியதும் என்பாலொன்றுமில்லையே – என்றாளாயிற்று.

English Translation

O Sakhis! The Lord of celestials is hot the one to show himself easily.  He came as a sweet lad, then grew and took the Earth, sky and all.  He has beautiful arms of exceeding radiance and mischief, I have lost my dignity and my shame to him. So what can I lose now?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain