nalaeram_logo.jpg
(3683)

வேண்டிச்சென் றொன்று பெறுகிற் பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட் கேலும்,

ஈண்டிது ரைக்கும் படியை யந்தோ! காண்கின்றி லேனிட ராட்டி யேன்நான்,

காண்தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன்நங்கள் கோனைக் கண்டால்,

ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வன் எத்தனை காலம் இளைக்கின் றேனே.

பதவுரை

ஒன்று வேண்டி சென்று

-

என்னிடத்தில் ஒன்றைய்யே க்ஷித்து வந்து

பெறுகின்றவரில்

-

பெறுகின்றவர்களுக்குள்ளே

என்னுடைய தோழியர்

-

தலைமைபெற்ற உயிர்த்தோழிகளான

நுங்கட்கேலும்

-

உங்களுக்குங்கூட

ஈண்டு இது உரைக்கும் படியை

-

இப்போது எனக்கு ஓடும் நிலைமையைப் பாசுரமிட்டுச் சொல்லக்கூடிய பிரகாரத்தை

இடராட்டியேன் கான் அந்தோ காண்கின்றிலேன்

-

இடருற்றிருக்கிற நான் ஐயோ! அறிகின்றிலேன்,

காண்தகு தாமரை கண்ணன்

-

காணவினிய தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவனாய்

கள்வன்

-

பார்த்த பார்வையிலே ஸர்வ ஸ்வாபஹாரம் பண்ண வல்ல வஞ்சகனாய்

விண்ணவர்கோன் எங்கள் கோனை

-

நித்யஸூரிகளைப் போலே என்னை யடிமை கொண்வனான எம்பெருமானை

கண்டால்

-

காணப்பெற்றால்

ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்

-

அவன் பக்கலிலேதிரண்ட வளைகளையும் அடக்கத்தையும் மீட்டுக் கொள்ளலாமென்று

எத்தனைகாலம் இளைக்கின்றேனே

-

எத்தனையோகாலமாக ப்ரயாசைப்படுகின்றேனே.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “வேங்கடவாணனை வேண்டிச் சென்று – சங்கம் சரிந்தன சாயிழந்தேன்“ என்றான் கீழ்ப்பாட்டில் நீ ஆசைப்பட்ட விஷயம் திருவேங்கடமுடையானாகில் அது தகுதியே நீ ஆசைப்பட்டால் கிடையாத்துண்டோ வென்று தோழியர் சொல்ல, ஆசைப்பட்டபொருள் பெறுவாரெல்லாரிலும் நான் தலையாயிருக்கச் செய்தேயும் ஆசைப்பட்டுப் பெறாதே நான் படுகிற வ்யஸனம் வாசாமகோசரமாகையாலே ஸ்யஸனப்படுமத்தனையல்லது உங்களுக்குச் சொல்லுகைக்கு ஒரு சொல் காண்கின்றிலேன் என்கிறாள்.

முன்னடிகட்கு ஆறாயிரப்படியின் நடையிலே உரைத்தோமிது. இருபத்தினாலாயிரப்படியிலும் ஈட்டிலும் பொருள்வாசிகாண்கிறது. வேண்டிச் சென்று என்றது வேண்டிவந்து என்றபடி. என்னிடத்திலே வந்து ஒன்றை விரும்பிப் பெறுமவர்களில் தலையான வரிசையையுடைய தோழிமாரான வுங்களுக்கும் என்பது முதலடியின் கருத்து. என்னிடத்தில் கேட்டு நீங்கள் பெறாத்துமுண்டோ? உங்களுக்குஞ் சொல்லாது மறைப்பதொன்றுண்டோ? அப்படியிருந்தும் ஈண்டிதுரைக்கும்படியை யந்தோ காண்கின்றலேனிடராட்டியேன் நான் என்று கூட்டுக.

மற்றொருபடியாகத் தமிழனுடைய நிர்வாஹமொன்றும் காட்டப்படுகிறது, வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பார் இல்“ என்று பதம் பிரித்து, அப்பெருமானிடஞ் சென்று ஒன்று வேண்டிப் பெற நினைத்தவர்களில் அது பெற்றாரில்லை, * வேண்டிற்றெல்லாந்தரும் வள்ளல் * என்று வீணான ப்ரஸித்தியேயொழிய அவனிடம் பெற்றாரில்லை – என்பதாகவும் பொருள் கொண்டிருந்தேனாகிலும் இப்போது சொல்லலாவது காண்கிறிலேன் என்கிறாள். அந்தோ! – நீங்கள் கேளாவிட்டாலும் நானே சொல்லியாகிலும் ஒருவாறு ஆற்றவேண்டியிருக்க, வாய் திறந்தொன்று சொல்லவொட்டுகிறதில்லையே நான் படுமிடர், ஐயோ என்கிறாள்.

“இடராட்டியேன்“ என்றதை விவரிப்பன் பின்னடிகள். (காண்தகு தாமரைக் கண்ணன்) வடமொழியில் தர்சநீயமென்றொரு சொல்லுண்டு, அதற்குப் பர்யாயமான தமிழ்ச்சொல்“ காண்டகு “என்பது. ஓயாது கண்டு கொண்டே யிருக்கத்தக்க என்று பொருள். இது தாமரைக்கு அடைமொழியாகவுமாம், கண்ணுக்கு அடைமொழியாகவுமாம். (சள்வன்) அத்திருக்கண்ணோக்கத்தாலே என்னையும் என்னுடைமையையும் கொள்ளைகொண்ட பகற்கொள்ளைக்காரன் என்றபடி. “விண்ணவர்கோன்“ என்று சொல்லி உடனே தங்கள் கோன் என்றதனால் – நித்யஸூரிகளைப்போலே ஆழ்வாரைமீடுபடுத்திக்கொண்டவன் என்கிற கருத்துத் தோன்றும். “ஒரு விபூதியாகப் படுத்தினபாட்டைக்கிடீர் என்னையொருத்தியையும் படுத்திற்று“ என்று விசேஷத்துக்கருத்து முரைப்பர் நம்பிள்ளை.

இப்படிப்பட்ட எம்பெருமான் * கண்காண நிற்கில் ஆணையிட்டு விலக்குவ்களென்று கண்ணுக்குத் தோற்றாதபடி நிற்சின்றான், அவனைக் காணப் பெற்றால் அவனால் கொள்ளை கொள்ளப்பட்ட எனது வளைகளையும் அடக்கத்தையும் திருப்பிப் பெற்றுக் கொள்ள வேணுமென்னும் அவாவினால் நான் நெடுங்காலமாக ஆயாஸப்படுகிறேன் என்றாளாயிற்று. அவன் பிரிந்தவன்று தொடங்கி வளைகழன்றும் அடக்கங் கெட்டும் இருப்பதனாலும, அவனோடு கூடப்பெற்றால் வளைதங்கி அடக்கமும் குறையற்றிருக்க நேருமாதலாலும் “கண்டால் ஈண்டிய சங்கும் நிறைவுங் கொள்வான்“ எனப்பட்டது. இவ்வாசையோடே காலங் கழிகிறதேயன்றி ஆசை நிறைவேறும் விரகில்லையே! என்கிற வருத்தம் ஈற்றடியிலேயுறையும்.

English Translation

O Sakhis who are good at going to him and getting your favours! Alas, my wicked self has no words to unburden my woes on you! If ever that rogue with comely lotus eyes, our Lord, is seen here again, how I yearn to receive from him my lost bangles and my lustre!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain