nalaeram_logo.jpg
(3680)

தாள்களை யெனக்கே தலைத்தலை சிறப்பத் தந்தபே ருதவிக்கைம் மாறா,

தோள்களை யாரத் தழுவிதென் னுயிரை அறவிலை செய்தனன் சோதீ,

தோள்களா யிரத்தாய். முடிகளா யிரத்தாய்! துணைமலர்க் கண்களா யிரத்தாய்,

தாள்களா யிரத்தாய்! பேர்களா யிரத்தாய்! தமியனேன் பெரிய அப்பனே.

பதவுரை

தாள்களை எனக்கே தலைத்தலை சிறப்ப தந்த

-

(உனது) திருவடிகளை எனக்கே அஸாதாரணமாகத் தலைமேல் சிறக்கும்படி தந்தருளின

பேர் உதவி

-

மஹோபகாரத்திற்கு

கைம்மாறு ஆ

-

பிரதியுபகாரமாக,

என் உயிரை

-

எனது ஆத்மவஸ்துவை

தோள்களை ஆர தழுவி

-

தோள்களை நன்றாகத் தடவிக் கொடுத்து

அறவிலை செய்தனன்

-

பரிபூரண விக்ரயம் செய்து விட்டேன்

சோதீ!

-

நான் தந்தவிதனைப்பெற்று அபூர்வலாபம் பெற்றதாகக் களித்து விளங்குமவனே!

தோள்கள் ஆயிரத்தாய்

-

(அந்தக்களிப்பினாலே பணைத்த) பலபலதிருத்தோள்களையுடையவனே!

முடியன் ஆயிரத்தாய்

-

பலபல திருமுடிகளையுடையவனே!

துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்

-

ஒன்றோடொன்றொத்த மலர் போன்ற பலபல திருக்கண்களையுடை வனே!

தாள்கள் ஆயிரத்தாய்

-

பலபல திருவடிகளையுடையவனே!

பேர்கள் ஆயிரத்தாய்

-

பலபல திருநாமங்களை யுடையவனே!

தமியனேன் பெரிய அப்பனே

-

அகிஞ்சநனான வெனக்கு இன்னமும் எவ்வளவோ செய்யப் பாரித்திருக்குமவனே!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நானாசைப்பட்டபடியே திருவடிகளை யெனக்குத் தந்தருளின சிறந்தவுதவிக்குத் கைம்மாறாக இவ்வாத்மவஸ்துவை எம்பிரானே! உனக்கு அர்ப்பணஞ் செய்தேனென்கிறார்.

“தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்த பேருதவி“ என்கிறாரே, எம்பெருமானுடைய திருவடிகள் இவர்க்குப் பரிபூர்ணத்ருப்தியாகக் கிடைத்து விட்டனவோ? என்னில் ஸம்ஸாரிகளெல்லோரும் உண்டியே உடையே உகந்தோடித் திரியாநிற்க, தாம்மாத்திரம் அப்படியல்லாமல் எம்பெருமானது திருவடிகளையே தாரகபோஷக போக்யமாகக்கொண்டிருக்கும்படி பெற்றவோருதவியையே இங்குப் பேசுகிறாரென்க. ஆறாயிரப்படி யருளிச்செயல் – “ஸம்ஸாரிக்களெல்லாரும் பராக்ருதவிஷயைக தாரக போஷக போக்யராயிருக்கச் செய்தே என்னை உன் திருவடிகளையே தாரகபோஷக போக்யமாயிருக்கும்படி பண்ணியருளினாய், இந்த மஹோபகாரமே அமையாதோ? இவ்வுபகாரத்துக்குக் கைம்மாறாக என்னுடைய ஆத்மாவை உனக்கே அடிமையாகத்தந்தேன“ என்பதாம். “இப்போது திருவடிகளைக் கொடுக்கையாவது ஸம்ஸாரத்தோடு பொருந்தாதபடியையும் தன்னையொழியச் செல்லாதபடியையும் தமக்குப்பிறப்பித்த தசையைப்ரகாசிப்பிக்கை ஸ்ரீ வால்மீகி பகவான் முதலாழ்வார்கள் தொடக்கமானாருண்டாயிருக்க என்பக்கலிலே விசேஷகடாக்ஷம் பண்ணி என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.

இப்பேருதவிக்குக் கைம்மாறாக எம்பெருமானுக்கு ஆத்ம வஸ்துவைக் கன்யகாதானம் பண்ணுகிறாராயிற்று ஆழ்வார். ஒருவனுக்கொருவன் கன்னிகையைக் கொடுக்கும்போது தோள்களையாரத் தழுவிக் கொடுப்பது வழக்கம், ஆத்மவஸ்துவுக்கு அவயவமொன்றுமில்லையாகிலும் தம்முடைய அபிநிவேசாதிசயத்தாலே அது தாளுந்தோளும் முடியுமாய்ப் பணைத்ததாகக்கொண்டு “தோள்களையாரத் தழுவியென்னுயிரை அறவிலைசெய்தனன்“ என்கிறார். பரம ஸந்தோஷத்தோடே கொண்டாடிக்கொண்டு ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகிறேனென்றவாறு. “எனதாவியாவியும். நீ – எனதாவியார் யானார்“ “மனமும் வாசகமும் செய்கையும் யானு நீதானே“ என்றவற்றை மறந்தார் ஹர்ஷத்தாலே.

“என்னுயிரை அறவிலை செய்தனன்“ என்று ஆழ்வார் சொன்னவாறே எம்பெருமான் தனக்கொரு அபூர்வவஸ்து கிடைத்ததுபோலவே புகர்பெற்று விளங்கினானாயிற்று, அதைக் கீழ்க்கண்ணாலே கண்டறிந்தவாழ்வார் சோதீ! என்று நெஞ்சுகுளிர விளிக்கிறார். இவ்வளவு மாத்திரமேயோ? அவபவங்களும் சதசாகமாகப் பனைக்கத் தொடங்க, பிரானே! என்னுடைய அற்பவாக்கியத்தைக் கொண்டு இப்படியும் உடல்பூரிப்பாய்யோ? இது என்ன பித்து! என்கிறார் பின்னடிகளால். இங்கு நம்பிள்ளையருளிச் செய்யும் ஸ்ரீஸூக்திகள் காணீர், - “ஒரு ஸம்ஸாரியை லபித்து அவாப்தஸமஸ்த காமனானவன் இப்படி ஹ்ருஷ்டனானானென்கிறவிது கூடுமோவென்னில், ஸார்வபௌமனான க்ஷத்ரியனுக்கு ஒருபர்த்தியுண்டென்னா, அபிமதையான மஹிஷிபக்கலிலே சாபலமின்றிக்கே யொழியுமோ? அவாப்தஸமஸ்தகாமத்வமும் ப்ரமாணஸித்தமானால் அப்படியே கொள்ளுமத்தனையன்றோ“

English Translation

O Effulgent Lord of thousand arms and thousand heads, thousand lotus eyes, thousand feet and thousand names!  For the gift of your feet to this destitute, -my Lord and Father! – I give my priceless life to you, and embrace you to my heart

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain