nalaeram_logo.jpg
(3679)

யானும்நீ தானே யாவதோ மெய்யே அருநர கவையும் நீயானால்,

வானுய ரின்பம் எய்திலென் மற்றை நரகமே யெய்திலென்? எனிலும்,

யானும்நீ தானாய்த் தெளிதொறும் நன்றும் அஞ்சுவன் நரகம்நா னடைதல்,

வானுய ரின்பம் மன்னிவீற் றிருந்தாய். அருளுநின் தாள்களை யெனக்கே!

பதவுரை

யானும் நீ தானே ஆவது மெய்யே

-

(எல்லாமும் நீயாகையாலே) யானும் நீதானே யென்கிறவிது உண்மையே, (இதில் ஒரு ஸந்தேஹமில்லை)

அரு நரகு அவையும் நீ

-

என்னால் பொறுக்கமுடியாத ஸம்ஸாரத்திலுள்ளவையெல்லாம் நீயிட்ட வழக்கே,

ஆனால்

-

ஆனபின்பு

வான் உயர் இன்பம் எய்தில் என்

-

திருநாட்டிலே போய்ச் சிறந்த ஆனந்தத்தைப் பெற்றிருந்தாலென்ன?

மற்றை நரகமே எய்தில் என்

-

அதற்கெதிர்த்தட்டான ஸம்ஸாரநரகத்தை யடைந்தால் தானென்ன?

எனிலும்

-

என்று இப்பொருளுண்டேயாகிலும்,

யானும் நீ தான் ஆய் தெளிதொறும்

-

நான் உனக்கடியேனென்பதை யுணரும்போதெல்லாம்

நரகம் நான் அடைதல் நன்றும் அஞ்சுவன்

-

ஸம்ஸார நரக வாழ்க்கைக்கு மிகவும் பயப்படா நின்றேன்,

நான் உயர் இன்பம்

-

பரமபதப் பேரின்பத்தை நிரந்தரமாகவுடையையாய்க்கொண்டு எழுந்தருளி யிருக்குமவனே!

நின் தாள்களை எனக்கு அருளு

-

உன் திருவடிகளை எனக்குத் தந்தருளவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸர்வபூதாத்மதே தாத! ஜகந்நாதே ஜகந்மயே, பரமாத்மநி கோவிந்தே மித்ராமித்ரகதாகுத, * என்ற ப்ரஹ்லாதாழ்வானுடைய அத்யவஸாயமுள்ளவர்களுக்கு எல்லாம் எம்பெருமானுடைய விபூதியாகவே தோற்றக் குறையில்லையாதலால் இப்படிப்பட்ட அத்யவஸாயம் ஆழ்வார் தமக்கும் குறையற உண்டாகி யிருக்கும்போது இவர் ஓரிடத்தை த்யாஜ்யபூமியாகவும் மற்றோரிடத்தை ப்ராப்யபூமியாகவும் கொள்வதற்கு நியாயமில்லையே, இவ்வுலகத்திலிருப்பைக் கழித்து அவ்வுலகத்தில் கொண்டுபோய்ச் சேர்த்து அங்கேயே வைக்கவேணுமென்று நிர்ப்பந்திப்பதானது மேற்சொன்ன அத்யவாஸயத்திற்கு இணங்காதே என்றொருசங்கை தோன்றக்கூடிய துண்டு, அதற்குப் பரிஹாரமாக அவதரித்தது இப்பாசுரமென்க.

யானும் நீதானேயாவதோ மெய்யே – “ஸர்வம் கலும் இதம்ப்ரஹ்ம* என்கிற சாஸ்த்ரார்த்தத்தில் ஒரு ஸந்தேஹமும் இல்லை யென்றவாறு. சாஸ்த்ராத்தம் இதுவானபின்பு அருநரகவையும் நீ என்பதும் சாஸ்த்ரார்த்தமாகத் தேறிநிற்கும். இங்கு அருநரகு என்கிறது ஸம்ஸாரநிலம். இந்நிலத்திலுள்ள பொருள்களை யெல்லாம் உன்னைப்பார்ப்பது போலவே பார்க்கத் தடையில்லை யென்றவாறு. இப்படியான பின்பு, ஸம்ஸாரவிபூதி ஹேயமென்றும் நித்யவிபூதி உபாதேயமென்றும் கொள்வதற்குப் பொருத்தமில்லாமை கூறப்படுகிறது. இரண்டாமடியினால்.

ஆனாலும் இந்த ஸம்ஸாரவாழ்க்கையில் அருவருப்புத்தானுள்ளது என்கிறார் மூன்றாமடியினால். வானுயரின்பமெய்தினாலென்ன, மற்றைநரகமேயெதினாலென்ன? என்று இரண்டையும் துல்யமாகப் பாவிப்பதற்கு எந்தத் தெளிந்தஞானம் (அத்யவஸாயம்) ஹேதுவோ, அந்தஞானம் நிலைநின்றிருந்தாலன்றோ ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பும் இல்லாதிருக்கலாம். அந்த ஞானம் நிலைத்திருப்பதற்கு இந்த நரகநிலம் மிகவும் விரோதாயாகையாலு இந்நிலத்திலிருப்புக்கு மிகவும் அஞ்சவேண்டியதாயிருக்கின்றது என்பது மூன்றாமடியின் தேர்ந்த கருத்து. இங்கே இருபத்தினாலாயிரப்படி ஸ்ரீஸூக்தி காண்க, - சேஷத்வஜ்ஞானத்துக்கு விருத்தமான ஸம்ஸாரத்திலேயிருக்கில் அகப்பட்ட இந்த ஞானத்தையுமிழப்பனென்று நான் மிகவும் அஞ்சாநின்றேன்“ என்று.

ஆகவே தம்முடைய பிரார்த்தனையைத் தலைக்கட்டியேயாகவேணுமென்கிறது ஈற்றடி.

English Translation

If it is true that I am you and Heaven an Hell are also you, then how does it matter whether I enter sweet Heaven or Hell? And yet my Lord, the thought of Hell does frighten me!  O Lord residing in sweet Heaven, Pray grant me your feet

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain