nalaeram_logo.jpg
(3676)

எங்குவந் துறுகோ என்னையாள் வானே! ஏழுல கங்களும் நீயே,

அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே,

பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோ நீயின்னே யானால்

மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான்புலம் இறந்ததும் நீயே.

பதவுரை

என்னை ஆள்வானே

-

(இதுவரையில்) என்னை நிர்வஹித்துக்கொண்டு போருமவனே!

எழ் உலகங்களும் நீயே

-

ஸப்தலோகங்களும் நீயிட்ட வழக்கு,

அங்கு

-

அந்த லோகங்களில்

அவர்க்கு அமைந்த

-

(பலன்களைக் கோருகின்ற) அவரவர்களுக்கு ஆராதிக்கும்படி ஏற்படத்தின

தெய்வமும்

-

தைவங்களும்

நீயே

-

உன் அவயபூதங்கள்

அவற்றவை கரும்மும் நீயே

-

அத்தெய்வங்களைக் குறித்து ஆராதனையாகப் பண்ணும் காரியங்களும் நீயிட்ட வழக்கு.

பொங்கிய புறம்பால் பொருள் உள ஏலும்

-

இவ்வுலகங்களிற் காட்டிலும் விஞ்சிப் புறம்பட்ட பொருள்கள் எவ்வனவிருந்தாலும் அவ்வளவும்

அவையும் நீ

-

அவையும் நீயிட்டவழக்கு

மங்கிய அரு ஆம் நேர்ப்பமும் நீயே

-

காரணாவஸ்தையில் சுருங்கிக் கிடக்கிறஸூக்ஷ்மசிதசித் வஸ்துக்களும் நீயிட்ட வழக்கு

வான் புலன் இறந்ததும் நீயே

-

அவ்யக்தத்தையும் வியாபிக்கக்கூடியதாய் கண்முதலிய இந்திரியங்களுக்குப் புலப்படுத்தன்மையற்ற தான ஜீவஸமஷ்டியும் நீ யிட்ட வழக்கு.

இன்னே ஆனால்

-

இப்படியாமளவில், (உன்னை நான் எங்குவந்து உறுகோ? என்று கீழ்ப்பாட்டோடே அந்வயம்)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (எங்கு வந்துறுகோ) இது கீழ்ப்பாட்டுக்கே விவரணமானது. ஸகல்லோகங்களும், அவ்வுலகங்களினால் ஆராதிக்கப்படுகிற இந்திரன் முதலிய தெய்வங்களும், அவற்றினுடைய க்ரியைகளும், உலகத்துக்குப் புறம்புள்ள பதார்த்தங்களும் எல்லாம் நீயிட்ட வழக்கு, ஆதலால் என்னுடைய முயற்சியினால் உன்னை நான் எங்ஙனே வந்தடையும்படி? இதற்கு முன்பு நிர்ஹேதுகமாக என்னை நீ விஷயீகரித்தாப்போலே இன்னமும் அந்த க்ருபையினாலேயே விஷயீகரித்தருளாய் என்கிறார்.

எங்கு வந்து உறுகோ? ஒருவன் மேருமலையிலுச்சியில் நின்றால் அவனை யொருநொண்டி. சென்று கிட்டுவதென்றுண்டோ? சென்றுகிட்டுகைக் குறுப்பாக சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட ஸாதனங்களை யனுஷ்டிக்கத் தமக்கு சக்தியில்லாமை தெரிவிக்கப்பட்டதாமிங்கு. என்னையாள்வானே! – ஆதிமுதல் என்னையாண்டது நீயேயன்றோ. இதுவரை எனக்கு நேர்ந்த நிலைகள் எனது முயற்சியினாலல்லவே, இவ்வளவும் வர நிறுத்தின நீ இனி என்கைபார்த்திருக்கவொண்ணுமோ? என்பது கருத்து. “ஏதாவதீம் கமயிது பதவீம் தயாளோ சேஷாத்வலேசநயநே க இவாதிபார“ என்ற தேசிக ஸ்ரீஸூக்தி இங்குக் காணத்தக்கது. ஏழுலகங்களும் நீயே –“என்னையாள்வாளே!“ என்ற வளவேயேர்? ஸகலலோகங்களுக்கும் ஆவன செய்பவன் நீயேயன்றோ? அபிமுகனான என்னோடு விமுகர்களான மற்றையாரோடு வாசியற எல்லாரையும் நிர்வஹிப்பது நீயேயன்றோ என்றபடி.

“ஏழுலகங்களையும் நானா நிர்வஹிக்கிறேன், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தைப் பணிந்து அந்தந்த தெய்வத்தினாலன்றோ “அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நியே“ என்று. “வணங்குந் துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால் பிணங்குஞ்சமயம் பலபலவாக்கி, அவையவைதோறு அணங்கும் பலபலவாக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்“ என்ற திருவிருத்தப்பாசுரம் இங்கே நினைக்கத்தக்கது. “இறுக்குமிறையிறுத்துண்ண எவ்வுலகுக்குந்தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வநாயகன்தானே“ (5-2-8) என்று கீழெ ஸுவ்யக்தமாகவுமருளிச்செய்தார். ஸகல தெய்வங்களும் நீயிட்டவழக்கு, அந்தத் தெய்வங்கள் செய்துபோருகிற செயல்களும் உன்னுடைய அநுப்ரவேசத்தினாலாமவையேயன்றி அவைதாமே செய்யுமவையல்ல என்றபடி.

பொங்கிய புறம்பால் பொருளுளவேலும் அவையுமோ நீ – “பொங்கிய“ என்பதைப் புறம்பிலேயும் அந்வயிக்கலாம், பொருளிலேயும் அந்வயிக்கலாம். இந்த லோகங்களிற்காட்டில் விஞ்சிப் புறம்பான மஹதாதிஸமஸ் தபதார்த்தங்களும் நீ யிட்டவழக்கு (அல்லது) அண்டத்துக்குப் புறம்பேயுள்ளதாய், “தசோத்தராண்யாவரணாநி யாநிச“ என்று ஆளவந்தார்ருளிச் செய்தபடியே ஒன்றுக்கொன்று பத்துமடங்கு விஸ்த்ருதமானவையும் நீயிட்டவழக்கு பொங்கிய ஒன்றுக்கொன்று விஸ்த்ருதமாய் அண்டத்துக்குப் புறம்பாய் அதுக்குக் காரணமான மஹதாதிகளென்று சிலவுண்டில் அவையும் உன்னதீனம்.“

மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே –கார்யப் பொருளாய்க் காணப்படும் நிலைமை யழிந்து காரணப்பொருளுக்குரிய ஸூக்ஷமாவஸ்தையை யடைந்திருக்கிற அவ்யக்தமும் நீயிட்ட வழக்கு என்றபடி. வான்புலனிறந்ததும் நீயே – வான் என்றது வியாபிக்கக்கூடியது என்றபடி. புலனிறந்தது என்றது. இந்திரியங்களுக் கெட்டாமல் அதீந்த்ரியமானதென்றபடி. அவ்யகத்தையும் வியாபிக்ககூடியதாய் கண் முதலிய கரணங்களுக்கு எட்டாத்தாய்க் காரணமான ஜீவஸமஷ்டியும் நீயிட்ட வழக்கு என்றதாயிற்று. வான் என்பதனால் சொல்லப்பட்ட வ்யாபகத்வம் ஸவரூபத்தினாலன்று, ஞானத்தினால் என்று உணர்க. ஜீவாத்மாக்களுக்கு ஞானத்தால் விபுத்வமுள்ளதேயன்றி ஸ்வரூபத்தினால் விபுத்வமில்லையென்பது நூற்கொள்கை என்றுரைப்பாருமுளர். அதுவுமொக்கும். ஆக, கார்யாவஸ்தையோடு காரணாவஸ்தையோடு முக்தாவஸ்தையோடு வாசியற உன்கை பார்த்திருக்கவேண்டின பின்பு நான் என் காரியத்திற்குக் கடவேனாக ப்ரஸக்தியுண்டோ? என்றதாயிற்று.

English Translation

You are the formless, the souls, and the wokeful celestials.  You are the seven worlds and the gods therein, and their deeds, if there is anything beyond space, that too is you, So where can I go from here to meet you, my Lord?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain