nalaeram_logo.jpg
(3675)

ஆருயி ரேயோ! அகலிடம் முழுதும் படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த,

பேருயி ரேயோ. பெரியநீர் படைத்தங் குறைந்தது கடைந்தடைத் துடைத்த,

சீரிய ரேயோ.மனிசர்க்குத் தேவர் போலத்தே வர்க்கும்தே வாவோ,

ஓருயி ரேயோ. உலகங்கட் கெல்லாம் உன்னைநான் எங்குவந் துறுகோ?

பதவுரை

ஆர் உயிரே ஓ

-

அருமையான உயிராயிருப்பவனே!

அகல் இடம் முழுதும் படைத்து

-

விசாலமான உலகம் முழுவதையும் ஸ்ருஷ்டித்து

இடந்து

-

(ஒருகால்) பிரளயாரணவத்தில் மங்கிப்போகாதபடி இடந்தெடுத்து

உண்டு

-

(ஒருகால்) திருவயிற்றிலே வைத்து நோக்கி

உமிழ்ந்து

-

பிறகு வெளிப்படுத்தி

அளந்த

-

(ஒருகால்) மாவலிபக்கல் நீரேற்று அளந்துகொண்ட

பேர் உயிரே ஓ

-

ஸர்வஸ்மாத் பரனே!

பெரிய நீர் படைத்து

-

மஹாஜலமான ஏகார்ணவத்தை ஸ்ருஷ்டித்து

அங்கு உறைந்து

-

அங்கே கண்வளர்ந்தருளி

அது கடைந்து

-

அதுபோன்ற வொரு பாற்கடலைக் கடைந்து

(அது) அடைத்து உடைத்த

-

அதுபோன்ற மற்றொரு கடலிலே ஸேதுபந்தம் பண்ணி தநுஷ்கோடியாலே அதனையுடைத்த

சீரியரே ஓ

-

பரபரனே!

மனிசர்க்கு தேவர் போல தேவர்க்கும் தேவா ஓ

-

மனிசர்கும் தேவர்க்கும் எவ்வளவவாசியோ அவ்வளவவாசி தேவர்க்கும் உனக்கும் போரும்படியாகவுள்ளவனே!

உலகங்கட்டு எல்லாம் ஓர் உயிரே ஓ

-

எல்லா வுலகங்களுக்கும் ஓர் உயிராயிருப்பவனே!

நான் உன்னை எங்க வந்து உறுகோ

-

அடியேன் உன்னை எங்கு வந்து கிட்டப்பெறுவேன்?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஆருயிரேயோ) ஆழ்வீர்! பேறுபெறுமவர் நீரான பின்பு அதற்குரிய ஸாதநானுஷ்டானமும் உம்முடைய தலையிலேயாக வேண்டாவோ? அஃது ஒன்றுமின்றிக்கே “அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்“ என்றால் இதுவொரு வார்த்தையோவென்று எம்பெருமான் திருவுள்ளமாக, நானொரு ஸாதநானுஷ்டானம் பண்ணிவந்து காண்பதென்று ஒன்றுண்டோ வென்கிறாரிதில். ஆருயிரேயோ –உயிர் நீயாயிருக்க நான் என்ன ஸாதநானுஷ்டானம் பண்ணி வந்து கிட்டுவேன்? சரீரத்தை ரக்ஷிப்பது எதுவோ அதுவன்றோ உயிர், சரீரம் தான் தன்னை ரக்ஷித்துக்கொள்வதுண்டோ? கருதரிய வுயிர்க்கு உயிரான நீயிருக்க, சரீரபூதனான நான் ஒரு ஸாதனமனுஷ்டிக்க யோக்யதையுண்டோ? என்பது கருத்து.

“அகலிட முழுதும் படைத்திடந்து உண்டுமிழ்ந்தளந்த“ என்றது –நீ தானே படைத்த வுலகுக்கு நன்மை செய்யவேண்டிய காலங்களில் ஒவ்வொன்றும் நீயேயன்றோ செய்து போகின்றாய் என்று எடுத்துக் காட்டுகிறபடி. பூமிப்பரப்படங்கலும் நீயே படைத்தாய், படைக்கப்பட்டவது பிரளயத்திலே நோவுபழ மஹாவராஹமாய் எடுத்துக்கொண்டேறினாய், மற்றுமொருகால் திருவயிற்றிலே வைத்து நோக்கினாய், உள்ளே கிடந்து தளராதபடி வெளிநாடுகாண வுமிழ்ந்தாய், மஹாபலி அபஹரித்துக்கொண்டபோது எல்லை நடந்து மீட்டுக் கொண்டாய், இங்ஙனே ஒவ்வொரு துர்தசையிலும் நீயேயுணர்ந்து நோக்கினாயல்லேயோ? என்று கருத்தை விரிக்க.

பேருயிரேயோ! – பெரியோனே! என்று வியாக்கியானம் காண்கிறது “பேரியரேயோ“ என்று பாடமிருந்திருக்கலாமென்று சிலர் எழுதியுள்ளார்கள், “பெரியரேயென்றது நீட்டலாய் பேரியரேயென்று பாடமாகில் ஸ்வரஸம்“ என்றார்கள்.

முதலடியிலே கூறின செயல்கள் ஸர்வஸாதாரணமாகச் செய்தனை, இரண்டாமடியில் கூறுவன – பிராட்டியாக்காக விசேஷித்துச் செய்தவை. * விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்டலெம்பெருமானே! * என்றும் * பலேக்ரஹிர்ஹி கமலாலாபேந ஸர்வச் ச்ரம * என்றும் சொல்லுகிறபடியே கடல்கடைந்ததும் பிராட்டிக்காக, கடலில் திருவணை கட்டினதும் பிராட்டிக்காக.

மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்குந் தேவாவோ – சோறும் தண்ணீரும் தாரகமான மனிதர்களுக்கும் அம்ருதமேதாரகமான தேவர்களுக்கும் எத்தனைவாசி போருமோ அத்தனைவாசி போருமாயிற்று அந்தத் தேவர்களுக்கும் எம்பெருமானுக்கும். தேவர்களை மநுஷ்ய கோடியிலே யெண்ணலாம்படி பரமவிலக்ஷணனானவனே! என்றபடி. ஓருயிரேயோ உலகங்கட்கெல்லாம் – ஸகல சேதநாசேதநங்களுக்கும் ஏகாத்மாவானவனே! ஆத்மா சரீரத்துக்கு ஹிதசிந்தை பண்ணுமதொழிய சரீரம் தன்னைத்தானே ரக்ஷித்துக் கொள்வதென்பதுண்டோவென்கை. உன்னை நான் எங்குவந்து உறுகோ? – உன்னை நான் எந்த இடத்திலே வந்து கிட்டுவேனென்று கேட்கிறபடியன்று. “உன்னை நான் என்னுடைய யத்நத்தாலே எங்ஙனே ப்ராபிக்கும்படி. யென்கிறார்“ என்பது ஆறாயிரப்படி. “உயிராயிருக்கிற வுன்னை சரீரபூதனான நான் என்ன ஸாதநானுஷ்டானத்தைப் பண்ணி வந்து கிட்டுவேன்? ஆத்மாசரீரத்துக்கு ஹிதசிந்தைபண்ணுமதொழிய, சரீரம் ஸ்வரக்ஷணத்தைப் பண்ண வென்பதொன்றுண்டோ?“ என்பது ஈடு. எங்கு என்றது எங்ஙனே யென்றபடி.

உறுகோ – உறுகு ஓ என்று பிரிக்க. உறு என்னும் பகுதியினடியாய் பிறந்த தன்மையொருமை யெதிர்கால வினைமுற்று உறுகு என்பது. இதில் கு விகுதி காலத்தையும் இடத்தையும் காட்டும். ஓகாரம் இரக்கப்பொருளில் வந்தது.

English Translation

O Great soul! You made the Earth, ate, remade, lifted and measured it!  O Glorious soul! You made the Ocean, you sleep on it, you churned it, parted it and brided it!  O The Oversoul, what gods are to men, you are to the gods, O, Soul of all the worlds, where can I come and meet you?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain