nalaeram_logo.jpg
(3673)

எடுத்தபே ராளன் நந்தகோ பன்றன் இன்னுயிர்ச் சிறுவனே, அசோதைக்

கடுத்தபே ரின்பக் குலவிளங் களிறே! அடியனேன் பெரியவம் மானே,

கடுத்தபோர் அவுணன் உடலிரு பிளவாக் கையுகி ராண்டவெங் கடலே,

அடுத்ததோர் உருவாய் இன்றுநீ வாராய் எங்ஙனம் தேறுவர் உமரே?

பதவுரை

எடுத்த பேராளன்

-

நிதி யெடுத்த மஹாநுபாவனென்று கொண்டாடப்படுகிற

நந்தகோபன் தன்

-

நந்தகோபனுடைய

இன் உயிர் சிறுவனே

-

இனிமையான உயிர்போன்ற திருக்குமாரனே!

அசோதைக்கு அடுத்த பேர் இன்பம்

-

(தேவதிப்பிராட்டி வயிறெறிந்து கிடக்க) யசோதைப்பிராட்டியிடம் வந்து சேர்ந்த அளவிறந்த ஆனந்தவடிவனாகி.

குலம் இளங் களிறே

-

அக்குலத்திற்கு யானைக்குட்டி போன்றவனே!

அடியனேன் பெரிய அம்மானே

-

அடியேனுக்கு உன் பெருமைகளெல்லாம் காட்டின பிரானே!

கடுத்த போர் அவுணன் உடல்

-

போர்புரிவதில் தினவு விஞ்சின இரணீயாசுரனுடைய உடலை

இரு பிளவு ஆ

-

இரு துண்டமாகும்படி

கை உகிர் ஆண்ட

-

திருக்கையிலுள்ள நகங்களைக் கொண்டு காரியஞ்செய்த

எம் கடலே

-

எம்போல்வார்க்குக் கடல் போன்றவனே!

இன்று

-

நான் விரும்புமிக்காலத்ல்

அடுத்தது ஓர் உரு ஆய்

-

தகுதியான வொரு உருவைக் கொண்டவனாகி

நீ வாராய்

-

நீ வருகின்றிலையே! (இப்படி நீ உபேக்ஷித் திருந்தாயாகில்)

உமர்

-

என்போன்றவர்களான (உம்மைச்சேர்ந்த) பக்தர்கன்

எங்ஙனம் தேறுவர்

-

(உன்னை ஸர்வரக்ஷகனென்று) எப்படி நம்புவர்கள்?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அடியவர்க்கு எளியவனென்று பேர்பெற்றிருக்கிற நீ இன்றுவந்து உதவாதொழியில் நீ ஆச்ரிதரக்ஷகனென்னுமிடத்தை உன்னடியார்கள் எப்படி நம்பமுடியுமென்கிறா. இப்பாசுரத்திற்கு உயிரானது. உமர் எங்ஙனம் தேறுவர்? என்பதற்கு இரண்டு படியாகப்பொருள் கூறுவர், தேறுகையாவது தரித்திருத்தலும் நம்பிக்கை கொள்ளுதலும். நீ முகங்காட்டாவிட்டால் உன்னுடையவர்கள் பிழைப்பர்களோ? (அல்லது) இதுவரை நீ செய்த செயல்களாக இதிஹாஸபுராணங்களில் எழுதப்பட்டுள்ள செய்கைகளை எப்படி நம்புவர்கள்? என்று இரண்டுபடியாகவும் நிர்வாஹமுளது.

நந்தகோபனுக்கு எடுத்தபேராளனென்று விருதுசாத்துகிறாராழ்வார், நிதியெடுத்தவனென்றபடி. எம்பெருமான் நம்மனையிலே வந்து சேரவேணுமென்கிற நினைவு கனவிலுமின்றி யிருக்கச் செய்தேனும் பரகதஸ்வீகாரமாகத் தானே வந்துநின்று ஸகலகோங்களையும் பரிபூர்ணாபெற்றிலனே“ என்று தேவகீப் பிராட்டியும் வயிறெரியும்படியாக நேர்ந்ததனால் நிதியெடுத்த மஹாநுபாவனென்கை மிகவும் பெருந்தும். பிறவியே தொடங்கி ஏழையாயிருந்தவன் திடீரென்று ஒரு நாளில் கனத்த வாழ்வு பெற்றிருக்கக் கண்டால் “இவன் நிதி கண்டெடுத்தான்“ “ம்ருதிமபரே பாரதமபரே பஜந்து பவபீதா, அஹமிஹ நந்தம் வந்தே யஸ்யாளிந்தே பரம்ப்ரஹ்ம. என்றார் ஒரு பக்க பண்டிதர், பிறவிக்கடலைக் கடக்கவேண்டி எம்பெருமானையறிவதற்காக உபநிஸ்ரீத்துக்களையும் ஸ்மிருதிகளையும் இதிஹாஸ புராணங்களையும் தஞ்சமாக அடைவார் அடைக அவையொன்றுமெனக்கு வேண்டா, யாவனொரு நந்தகோபனுடைய மனைக்கடையிலே ச்லோகத்தின் கருத்து. இதனால் நந்தகோபாலன் யெனக்குத் தஞ்சம் – என்பது இந்த ஹிதா நிதிரஸித்வம் அசேஷடம்ஸாம் லப்போஸி புண்யபுருஷை *(ஸ்ரீ வைகுண்டஸ்தவம்) என்று கூரத்தாழ்வனருளிச்செய்தபடியே ஒவ்வொருவருடைய உள்ளிலும் உறைந்து கிடைக்கச் செய்தேயும் பாக்யஹீநர்களால் வெளிக்கண்டு அநுபவிக்கப்பெறாமல் சில பரமபாக்யசாலிகளுக்கே அநுபவிக்கலாம்படியிருக்கும் எம்பெருமான் நிதியாகவே பேசத்தகுந்தவன், இந்த நிதியை நன்றாக வெடுத்து  அநுபவிக்கப் பெற்றவன் நந்தகோபனேயாதலால் இவனை எடுத்த பேராளனென்றது மிகவும் பொருந்தும். அவனுடைய நந்சீவனே கண்ணுக்கு தோற்ற வொகுவடிவுகொண்டு திரிகிறதோ! என்னலாம்படி அனமந்தவனாம் கண்ணபிரான்.

அசோதைக்கு அடுத்த பேரின்பம் – நந்தகோபன் நிதியெடுத்த மஹாநுபாவனானாலும் அதிகமாகப் பேரின்பமநுபவித்தது யசோதைப் பிராட்டியே யாவள். * அழுகையு மஞ்சி நோக்குமந் நோக்கும் அணிகொள் செஞ்சிறுவாய் –நெளிப்பதும், தொழுகையுமிவைகண்ட வசோதை தொல்லையின்பத்திறுதி கண்டானே * (பெருமாள் திருமொழி) என்றபடி – அவளுக்கு அடுத்த பேரின்பமென்க. அடுத்த – நினைவின்றியேயிருக்க, தானேவந்து கிட்டினபத்தைச் சிற்றின்பமாக்கினால்“ என்று. அதாவது இந்நிலத்திலுண்டாகும் இன்பமெல்லாம் சிற்றின்பை மென்றும் திருநாட்டிலுண்டாகும் இன்பமொன்றே பேரின்பமென்றும் இருந்த ப்ரஸித்தியை மாற்றி விட்டான் என்றபடி. பரமபதாநுபவத்திற் காட்டிலும் பதின்மடங்கு வீறுபெற்றதாம் யசோதைக்கு ஸ்ரீக்ருஷ்ணாநுபவானந்தம்.

குலவிளங்களிறு – இடைக்குலவத்தில் தோன்றிய ஆணைக்கன்று, “வாரணம் பையநின்றூர்வதுபோல்“ என்றும் “வேழப்போதக மன்னவன்“ என்றும் “காய்சினமாகளிறன்னாள். என்றுமுள்ள பாசுரங்களைநினைப்பது. யானையானது மிகவும் பலிஷ்டமான பிராணியாயிருக்கச் செய்தேயும் ஒரு கட்டுத்தறியிலே கட்டுண்டிருந்து வருந்துமாபோலே ஸர்வசக்னான தான் அசத்தனைப் போலே சட்டுண்டிருந்ததற்குச் சேர குலவிளங்களிறே! என்றது. “ஆய்ச்சி உரலோடார்க்கத் தறியார்ந்த கருங்களிறே போலநின்று தடங்கண்கள் பனிமல்குந் தன்மையானை“ என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் இங்குப் பொருந்தமாக நினைக்கத்தக்கது.

அடியனேன் பெரியவம்மானே! இங்கு ஈடு – “உன்னை மகனென்றிருப்பார்க்கோ உதவலாவது? முறையுணர்ந்திருப்பார்க்கு உதவலாகாதோ? முறையுணர்ந்திருப்பார்க்கு உதவலாகாதோ? நான் முறையிலே நின்றவாறே நீயும் முறையிலே நில்லாநின்றாய், அடியனேனென்று நான் சொல்ல நீ ஈச்வரனாயிராநின்றாய்“ என்பதாம். இதனால், “நந்தகோபனாயும் யசோதையாயுமிருந்து இவனை நியமித்து அநுபவிக்கப் பெற்றிலோமே“ என்கிற நிர்வேதமும் ஆழ்வார்க்கு உள்ளதாகத் தோன்றும்.

ஒரு சிறுக்கனுக்கு உதவினாப்போலேயாகிலும் அடியேனுக்கு உதவலாகாதோ என்னுங் கருத்துப்படப் பின்னடிகளருளிச் செய்கிறார். ப்ரஹ்லாதாழ்வானுக்காக, எங்குங் கண்டறியாத விலக்ஷ்ணமாக ஒரு திருவுருவத்தைப் பரிக்ரஹித்துக் கொண்டுவந்து விரோதியைக் கீண்டு அருள் செய்தாய், அப்படி அடியேனுக்காகவும் ஒரு திருவுருவெடுத்து வரலாகாதோ? அன்று உதவின நீ இன்று உதவாததென்?

எங்ஙனம் தேறுவர் உமரே – இதற்கு இரண்டுபடியாகப் பொருள் காண்க, பிரானே நீ வன்து தோன்ற மாட்டாயாகில் என்னைப் போன்றவர்கள் எப்படி ஜீவித்திருக்முடியும்? முடிந்துபோக வேண்டியதே. (அல்லது) ஆபத்காலங்களிலே அடியார்களுக்கு நீ உதவ்வருமவன் என்பதே என்னைப்போன்றவர்கள் எப்படி நம்பியிருக்கமுடியும் ஆபத்ஸகன், ப்ரணதார்த்திஹரன் இத்யாதி திருநாமங்களை மஹர்ஷிகளுக்குக் என்பதாக. நான் தரிக்கும்படிக்கும் உன்னிடத்தில் நான் அவிச்வாஸ் கொள்ளாதபடிக்கும் ஒருருவெடுத்து வரவேணுமென்றாராயிற்று.

English Translation

O Sweet child, dear as life to chieftain Nandagopal O Chubby elephant-calf, Yosada's joy, deep as the ocean!  You tore apart the wide chest of the wicked Hiranya with your claws!  Come again in your nerot form, or else, how will devotees live?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain