nalaeram_logo.jpg
(3672)

காணுமா றருளாய் என்றென்றே கலங்கிக் கண்ணநீர் அலமர வினையேன்

பேணுமா றெல்லாம் பேணிநின் பெயரே பிதற்றுமா றருளெனக் கந்தோ,

காணுமா றருளாய் காகுத்தா. கண்ணா! தொண்டனேன் கற்பகக் கனியே,

பேணுவார் அமுதே. பெரியதண் புனல்சூழ் பெருநிலம் எடுத்தபே ராளா!

பதவுரை

காணும் ஆறு அருளாய் என்று என்றே

-

(உன்னை நான்) காணும் வகை செய்தருளவேணுமென்று பலகாலும் சொல்லிக்கொண்டே

கலங்கி

-

(ஆசைப்பட்டபடி காணப்பெறாமையாலே) கலக்கங்கொண்டு

கண்ண நீர் அலமா

-

கண்ணீர் பரவாநிற்க,

வினையேன்

-

(காணப்பெறாத) பாவத்தை யுடையேனான நான்

பேணும் ஆறு எல்லாம் பேணி

-

(தூதுவிடுகை மடலெடுக்கை முதலாக) எதுஎது செய்யலாமென்று நினைத்தேனோ அதுவெல்லாம் செய்தும் (கிடையாமையாலே)

நின் பெயரே பிதற்றும் ஆறு எனக்கு அருள்

-

உனது திருநாமங்களையே பிதற்றிக்கொண்டிருக்கம்படியான விதுலேயன்றோ எனக்கு நீ செய்து கொடுத்தவருள்

அந்தோ

-

ஐயோ! (இவ்வளவேயோ நான் பெற்ற பாக்கியம்!)

காகுத்தர்

-

இராமனாய்த் தோன்றி எளியனானவனே!

தொண்டனேன் கற்பகம் கனியே

-

அடியேனக்குக் கல்பவ்ருக்ஷ பலனாகத்தோன்றியிருப்பவனே!

டேணுவார் அமுதே

-

ஆசைப்பட்டவர்களுக்கு அமுதம் போன்றவனே!

பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா

-

விசாலமாய்க் குளிர்ந்த பிரளய வெள்ளத்திலே யழுந்தின மஹாபூமியை உயரவெடுத்த மஹாநுபாவனே!

காணும் ஆறு அருளாய்

-

(உன்னைநான்) காணும்படி க்ருபை பண்ணவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “காணுமாறருளாய்“ என்று பிரார்த்தித்தவளவிலும் அருள்செய்யாவிடில் “இவ்வருள் கிடக்கட்டும், நாம் நமது முயற்சியாலே காணப்பெறுவோம்“ என்று நினைத்து ஸ்வப்ர வ்ருத்தியிலே ஊன்றுமவரல்லலே ஆழ்வார். எத்தனையுகமானாலும் அவனே காட்டக் காணவேணுமென்கிற விருப்பமொன்றே உடையாரன்றோ. * எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் * என்றாப்போலே அத்தலையில் அருளையே பார்த்து “காணுமாறருளாய், காணுமாறருளாய், காணுமாறருளாய்“ என்றே இந்த வாக்கியத்தையே உருப்போடுமவரன்றோ அப்படி உருப்போட்டும் காணப்பெறாதவாறே கலங்குவர், கலங்கிய கலக்கம் உள்ளடங்காமல் கண்ணீராய்ப் பெருகும், ஆக இப்படி துடித்துக் கொண்டிருக்கின்றேனே, இவ்வருளேயன்றோ என் திறத்தில் நீ செய்திருப்பது, இதற்குமேல் ஒன்று செய்யத் திருவுள்ளமில்லையோ? இவ்வளவேயோ என் திறத்தில் அருள் செய்யலாவது? என்கிறார்.

வினையேன் என்கிறவிடத்து நம்பிள்ளையீடு காண்மின் – “இதுக்குமின்பு இவ்வஸ்துவைக் காண ஆசைப்பட்டாரில் கலங்கிக் கண்ணநீர் பாய்ந்தறிவாரில்லைகிடீர், காணவேணுமென்கிற ஆசாலேமுடையார்க்குத் தன்னைக்காட்டி அவர்கள் கண்ணநீரையும் துடைக்குமவனை ஆசைப்பட்டுக்கிடையாதே கண்ணுங் கண்ணிருமாம்படியான பாபத்தைப் பண்ணினேன்.“ என்று.

பேணுமாறெல்லாம் பேணி என்ற தன் கருத்தாவது – ஆர்த்தியின் கனத்தாலே நான் எது எது செய்ய ஆசைப்பட்டேனோ அதையெல்லாஞ் செய்து முடித்தும், அதாவது தூது விட்டும் அயோக்யதாநுஸந்தானம் பண்ணி அகன்றும், அவன் விரும்பாத நானும் என்னுடைமையும் வேண்டாவென்று வெறுத்தும், மடலெடுக்க முயன்றும், பலகால் ப்ரபத்திபண்ணியும் ஆக இவையெல்லாஞ் செய்தும் என்றபடி. இவ்வளவாக நான் செய்தும் பெற்ற பயன் உன்னுடைய திருநாமங்களையே பிதற்றுவது தவிர வேறொன்றில்லையே! அந்தோ! என்கிறார்.

என் பெயரையே பிதற்றுமாறு அருளினது அருளன்றோ? ஸம்ஸாரிகளிற்காட்டில் இதுவன்றோ வைலக்ஷண்யம், இது செய்து கொடுத்தோமாகில் இன்னமும் என் செய்யச் சொல்லுகிறீர் ஆழ்வீர்! என்று எம்பெருமான் திருவுள்ளமாக, காணுமாறருளாய் என்கிறார். ஸம்ஸாரிகளிற்காட்டில் விலக்ஷணன் என்னும்படியான இவ்வளவு பெறுவித்தால் போதுமோ?

(காகுத்தா கண்ணா!) இராமபிரானாயும் கண்ணபிரானாயும் வந்து தோன்றிக் காட்சி தந்தாப்போலே தரவேணுமென்றன்றோ நான் வேண்டுவது. உன்னுடைய பரமபோக்யதையையும் பரமோபகாரசீலத்தையும் காட்டித்தந்த நீ தானே உன்னையுங் காட்டித்தரவேணுமென்றாராயிற்று.

English Translation

My only wish is to see you, tears flood my eyes, alas! Make me love you in every way, and prate your names, Show yourself to me.  O Lord, Rama, Krishna, kalpa-fruit! O Lord who lifted the Earth from the waters, you are the ambrosia for devotees

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain