nalaeram_logo.jpg
(3651)

ஆம்முதல் வனிவ னென்றுதற் றேற்றி,என்

நாமுதல் வந்து புகுந்துநல் லின்கவி,

தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன,என்

வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ?

பதவுரை

இவன் முதல்வன் ஆம் என்று

-

குருகூர்ச்சடகோபனாகிய இவன் ப்ரபந்த ஜநகூடஸ்தானகக் கடவன்’ என்று திருவுள்ளம் பற்றி

தன் தேற்றி

-

தன் விஷயமான தெளிவை எனக்குப் பிறப்பித்து

என் நா முதல் வந்து புகுந்து

-

என்னுடைய நாவிலே தானே வந்து புகுந்து

நல் இன் கவி

-

பரம போக்யமான சொல் தொடைகளை

தூ முதல் பத்தர்க்கு

-

முமுக்ஷூக்களுக்கு அநுபவிக்கலாம்படி

தான் தன்னை சொன்ன

-

தானே தன்னைப் பாடின

என் வாய் முதல் அப்பனே

-

என் வாக்குக்கு முதல்வானான மஹோபகாரகனை

என்று மறப்பனோ

-

என்றைக்காவது மறப்பேனா? (ஒரு நாளும் மறக்கமாட்டேன்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அன்பர்களுக்காக என்னைக்கொண்டு தான் தன்னைக் கவிபாடின மஹோபகாரனை ஒரு நாளாவது மறக்கப்போமோ வென்கிறார்.

ஆம் முதல்வனிவனென்று  - இதற்கு இரண்டு வகையாக நிப்வாஹம்: முதலவன் என்கிறவிது எம்பெருமானிடத்திலே அந்வயிப்தாக ஒரு நிர்வாஹம். அது ஆழ்வாரிடத்திலே அந்விப்பதாக மற்றொரு நிர்வாஹம். அந்த எம்பெருமானே ஜகத்காரணபூதனென்று தன் பக்கலிலெ யெனக்குத் தெளிவு பிறக்கும்ப்டியாகப் பண்ணி என்பது முதல் நிர்வாஹத்தின் பொருள். குருகூர்ச்சடகோபனாகிற இவன் ஸம்ஸாரிகளைத் திருத்திப் பணி கொள்ளும் விஷயத்திலே முதவ்வனானகக் கடவன்- தலைவனாகக்கடவன் என்று திருவுள்ளம்பற்றி என் பக்கலிலே தன் ஸ்வரூபாதிகளைத் தெளியப்பண்ணி என்பது இரண்டாம நிபவாஹத்தின் பொருள்.

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள்; “காரண வாக்யங்களில் உபாஸ்யனாகச் சொல்லப்படுகிறான் தானேயென்று தன்பக்கலிலே கெளியும்படி பண்ணி யென்னுதல்; அன்றிக்கே, பரமபதத்தோபதி ஸம்ஸாரத்தையும் திருத்த நினைத்தோம்; அதுக்கு இவன் முதலாம்-அடியா மிவனென்று என்பக்கலிலே தன் ஸ்வரூபாதிகளைத் தெளியப் பண்ணி யென்னுதல். இங்கே யருளிச்செய்யும் வார்த்தை- திருப்புற்றுக்குக் கிழக்காக் எழுந்தருளி நிற்பதைக் கண்டு ஆமுதல்வனிவன் என்றருளிச் செய்தாராம் என்று.”

ஸ்ரீகாஞ்சீ ஹஸ்திகிரியின் திருமடைப்பள்ளி ப்ரதக்ஷிண வீதியிலே ஆளவந்தார் யாதவ ப்ரகாசனோடே யிருந்த எம்பெரமானாரைத் திருச்கச்சிநம்பிகள் மூலமாகத் தெரிந்து கொண்டு ‘ஆம்முதல்வனிவன்’என்று  குஸரக் கடாக்ஷித்தருளின ஐதிஹ்யத்தையருளிச் செய்தபடி. இதனால் இரண்டாவது நிர்வாஹம ஆளவந்தார் திருவுள்ளத்திற்கு மிதவுமிணங்கினதென்று காட்டினபடி ஸ்ரீமத்ப்யாம் ஸ்யாதஸாவிதி என்கிற அதிகரண ஸாராவளி ச்லோதத்தில் (ஸ்யாரஸௌ) என்றதும் இப்பொருளதே.

என் நாமுதல் வந்து புகுந்து-ஸ்ரீ; ராமாயணத்திற் காட்டில் திருவாய் மொழிக்குண்டான ஏற்றஞ் சொல்லுகிறது இதனால். எம்பெருமான் நான்முகனுக்கு நியமிக்க, அவன் தன்மஹிஷியான ஸரஸ்வதியை ப்ரோஜீக்க, அவள் வால்மீகி பகவானுடைய நாவிலே ஆவேசித்து அவதரித்ததாயிற்று ஸ்ரீராமாயணம். அங்ஙனம் ஒர் இடையீடின்றிக்கே என்னுடைய நாவிலே தானே முற்பாடனாய் வந்து புகுந்து தானே பேசினானென்கிறார்.

தூமுதல் பத்தர்க்கு – நித்யஸூரிகளுக்கும் போக்யமாக. அல்லது முமுக்ஷூக்களுக்கென்றபடியுமாம். இப்படிப்பட்ட மஹாபகாரகனை என்றேனும் மறக்க விரகுண்டோ?

English Translation

He entered my speech and made me acknowledge him.  He sings his own songs of praise through the words of pure-hearted devotees.  How can I forget the first-cause Lord in my speech?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain