(3626)

புக்க அரியுரு வாயவுணனுடல் கீண்டுகந்த,

சக்கரச் செல்வன்தன்னைக் குருகூர்ச்சட கோபஞ்சொன்ன,

மிக்கவோ ராயிரத் துளிவைபத்தும்வல் லாரவரை,

தொக்குப்பல் லாண்டிசைத் துக்கவரி செய்வ ரேழையரே.

 

பதவுரை

அ அரி உரு ஆய புக்கு

-

அப்படிப்பட்ட சிங்க வடிவையுடையனாய்த் தோன்றி

அவுணன் உடல் கீண்டு உகந்த

-

இரணியாசுரனுடைய உடலே இருபிளவாக்கித் திருவுள்ளமுகந்த

சக்கரம் செல்வன்

-

திருவாழியையுடைய திருமாலைக் குறித்து

குருகூர் சட கோபன் சொன்ன

-

ஆழ்வார் அருளிச் செய்த

மிக்க ஓர் ஆயிரத்துள்

-

மிகச் சிறந்த ஆயிரத்தினுள்ளே

இவை பத்தும் வல்லாரவரை

-

இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்களை

ஏழையா

-

திருநாட்டிலுள்ள திவ்யாப்ஸரஸ்ஸுக்கள்

தொக்கு

-

திரள் திரளாக விருந்து

பல்லாண்டு இசைத்து

-

மங்களாசாஸனம் பண்ணி

கவரி செய்வர்

-

சாமரை வீசுதல் முதலிய கிஞ்சி காரங்களைச் செய்பவர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (புக்கவரியுருவாய்.) இத்திருவாய்மொழி கற்றார் மதிமுகமடந்தையர் லிரும்பிப் பல்லாண்டு பாடி ஸத்கரிக்கும்படியான பெருமையைப் பெறுவர்களென்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரமிது.

புக்கவரியுருவாய்-அவ்வரியருவாய்ப் புக்கு என்று அந்வயிப்பது அகரச்சுட்டு விலக்ஷ்ணப் பொருளது வாசாமகோசரமாம்படி பரம விலக்ஷ்ணமான ஸிம்ஹ விக்ரஹத்தைப் பரிக்ரஹித்தவனாய்; சத்ரு விஷயத்திலே புகுந்து என்றபடி. அவுணனுடல் கீண்டு உகந்த-இரணியனுடலைப் பிளந்தொழித்து ‘சிறுக்கனுடைய விரோதிதொலையப் பெற்றோம்’ என்று திருவுள்ள முகந்தபடி. (சக்கரச் செல்வன் தன்னை) இரணியனுடலைக் கீண்டகாலத்தில் ஸ்ரீஸுதர்சநாழ்வானுடைய பணியொன்றுமில்லையே; அப்படியிருக்க இங்கே சக்கரச் செல்வனென்பானேன்? என்னில்; எந்த ஸமயத்திலும் சக்கரத்தாழ்வானுடைய பணி இருந்தே தீரும். அவனது பணியில்லாமல்

ஒரு காரியமும் நடைறொது; ஸுதர்சந சதகத்தில் சக்திர் யஸ்யேஷு தம்ஷ்ட்ராநகபரமுக வ்யாபிநீ த்த்பிபூத்யாம் என்பதனால் இவ்வர்த்தம் வ்யக்தமாகும். ராமாவதாரத்தில் அம்புகளிலும், வராஹாவதாரத்தில் தம்ஷ்ட்ரையிலும், நரஸிம் ஹாவதாரத்தில் நகங்களிலும், பரசுராமவதாரத்தில் மழுவிலும் இப்படியே ஒவ்வோரவதாரத்தில் ஒவ்வொரு வஸ்துவில் திருவாழியாழ்வானுடைய சக்தியாவேச முளதென்பர்.

ஏழையர் கவரி செய்வர்-ஏழையரென்று ஸ்த்ரீகளுக்குப் பெயர்; சூழ்விசும் பணி முகில் திருவாய்மொழியில் “மதிமுகமடந்தையரேந்தினர்வந்தே” என்னப்பட்ட திவ்யாப்ஸரஸஸீக்கள் இங்கே விவக்ஷிதர்கள். அவர்கள் திரண்டுகொண்டு இப்பதிகம் வல்லார்களைப் பொலிக வென்று மங்களாசாஸனம் பண்ணிச்சாமரை வீசுதல் முதலான கைங்கரியங்களையும் செய்வர்களென்றதாயிற்று.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain