(3624)

காண்டுங்கொ லோநெஞ்சமே! கடியவினை யேமுயலும்,

ஆண்டிறல் மீளிமொய்ம் பிலரக் கன்குலத் தைத்தடிந்து,

மீண்டுமவன் தம்பிக்கே விரிநீரி லங்கையருளி,

ஆண்டுதன் சோதிபுக் கவம ரர்அரி யேற்றினையே?

 

பதவுரை

நெஞ்சமே

-

மனமே!

கடிய வினையே முயலும்

-

மிகக் கொடிய பரஹிம்ஸா ரூபமான தீவினைகளிலேயே முயற்சி செய்பவனாய்

ஆண்

-

பௌருஷம் மிக்கவனாய்

திறல்

-

வீர சூர பராக்ரமசாலியாய்

மீளி

-

சிங்கம் போன்றவனாய்

மொய்ம்பின்

-

பெருமிடுக்கையுடையனான

அரக்கன்

-

இராவணனென்னும் ராக்ஷ்ஸனுடைய

குலத்தை

-

குடும்பத்தை

தடிந்து

-

தொலைத்திட்டு

மீண்டும்

-

பின்னையும்

அவன் தம் பிக்கே

-

அவனுடன் பிறந்தவனான விபீஷணழ்வானுக்கே

விங் நீர் இலங்கை அருளி

-

கடலிடத்துள்ள லங்காராஜ்யத்தை யருள் செய்து

ஆண்டு

-

அயோதயையி லெழுந்தருளி நெடுங்காலம் அரசு புரிந்து

தன் சோதி புக்க

-

தன்னடிச் சோதியான பரமபதத்திலே சென்று சேர்ந்த

அமரர் அரி ஏற்றினை

-

நித்யஸீரிநாதனான பெருமானை

காண்டும் கொல் ஒ

-

காணப்பெறுவோமோ

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

(காண்டுங் கொலோ.) விபீஷண பக்ஷ்பாதத்தாலே ராவண குலத்தை நிச்சேஷமாக முடித்து அவனுக்கு லங்காராஜ்யத்தையுங் கொடுத்துத் தானும் அபிஷிக்தனாய் ராஜ்யம் பண்ணித் தன்னடிச்சோதியேற் வெடுந்தருளின் ஸ்ரீராமபிரானை, அந்த மேன்மையோடே யிருக்கச் செய்தே நாம் காணவல்லோமோ நெஞ்சமே! என்று தமது திருவுள்ளத்தை நோக்கியருளிச் செய்கிறார்.

 

English Translation

Can we see him too, O Heart? He destroyed the demon clan of deathly might and wickedness, and gave the kingdom to the younger brother, then himself ruled like a lion among gods in abounding glory

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain