(3621)

வந்தெய்து மாறறி யேன்மல்கு நீலச் சுடர்தழைப்ப,

செஞ்சுடர்ச் சோதிகள் பூத்தொரு மாணிக்கம் சேர்வதுபோல்,

அந்தர மேல்செம்பட் டோடடி உந்திகை மார்வுகண்வாய்,

செஞ்சுடர்ச் சோதி விடவுறை என்திரு மார்பனையே.

 

பதவுரை

மல்கு நீலம் சுடர் தழைப்ப

-

குறைவற்ற நீலமான புகரானது மேன் மேலும் வளர,

செம் சுடர் சோதிகள் பூத்த ஒரு மாணிக்கம் சேர்வது போல்

-

சிவந்த வொளியை யுடைத்தான சில கிரணங்களைப் பரப்பினவொரு மாணிக்கம், சாய்ந்து கிடக்குமாபோலே,

அந்தரம் மேல்

-

திருவரை மேல்சாத்தின

செம் படடோடு

-

பீதாம்பரத்தோடு

அடி உந்தி கை மார்பு கணவாய்

-

திருவடிகளும் திருவுந்தியும் திருக்கைகளும் திருமார்பும் திருக்கண்களும் திருப்பவளமுமாகிய வொளி

செம் சுடர் சோதிவிட

-

சிவந்தழகிய வொளியைப் பரப்ப

உறை என் திருமார்

-

எனது திருமாலை

வந்து எய்தும் ஆறு அறியேன்

-

வந்து கிட்டும் வகையறிகின்றிலேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (வந்தெய்துமாறு.) உன்னைப் பெறுகைக்கு என்பக்கல் ஒர் உபாயமில்லை; நீயே வந்து விஷயீகரிக்கவேணுமென்கிறார். ‘உம்மால் ஒரு உபாயநுஷ்டானம்யோ உன்படியிருப்பதென்கிறார். எம்பெருமான் திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்து கிடக்கும்போது திவ்யரூபத்தின் நீலச்சுடர் மல்லா நின்றது; பீதகவாடை திருவடிகள் திருநாபிக்கமலம் திருக்கை திருமார்பு திருக்கண் திருப்பவளம் ஆகிய இவற்றினின்று சிவந்த சுடரையுடைத்தான்  தேஜஸ்ஸூ ப்ரஸாஜீயாநின்றது இந்த நிலைமைக்கு ஒரு த்ருஷ்டாந்தமிடுகிறார் “செஞ்சுடர்ச் சோதிகள் பூத்தொருமாணிக்கறுஞ் செய்து சேர்வது போல்” என்று ‘செஞ்சுடர்ச்  சோதிகள் பூத்த ஒரு மாணிக்கப்பாறை சாய்நது கிடப்பதுபோலுள்ளது என்று வருணித்தவாறு.

அந்தரம் என்று இடுப்பைச் சொல்லுகிறது “செம்பட்டோடு’ என்றவிடத்து. ஒடு-உம்மைப்பொருளது. செவ்விய பட்டாடையும் என்றபடி.

“கோயிலிலே கண்வளர்ந்தருளாகிற வுன்னை” என்றார் ஆயிரப்படியில் பிள்ளான். “திருப்பாற்கடலிலே நீர் உறுத்தாதபடி திருவனந்தாழ்வானைப் படுக்கையாகக்கொண்டு அதிலை நாநாவர்வணமாயிருப்பதொரு மேல்விரியை விரித்தாப்போலே சாய்தருள” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.

 

English Translation

I know not how to see the Lord with Lakshmi on his chest.  He looks like a brilliant gem, spreading a flood of blue effulgence.  His feet and hands, lips and eyes, chest and navel are like sparks of dazzling red blowing everywhere

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain