(3619)

எங்குத் தலைப்பெய்வன் நான்?எழில் மூவுல கும்நீயே,

அங்குயர் முக்கட் பிரான் பிரமன்பெரு மானவன்நீ,

வெங்கதிர் வச்சிரக் கையிந் திரன்முத லாத்தெய்வம்நீ,

கொங்கலர் தண்ணந் துழாய்முடி யென்னுடைக் கோவலனே.

 

பதவுரை

கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைகோவலனே

-

மதுவோடு கூடி மலர்ந்த செவ்வித் துழாயையணிந்த மயிர்முடியையுடையனாய் எனக்குப் பரம போக்யனான கோபாலக்ருஷ்ணனே!,

எழில் மூ உலகும் நீயே

-

விலக்ஷ்ணமான மூவுலகமும் நீயிட்ட வழக்காயிருக்கும்,

அங்கு உயர் முக்கண் பிரான்

-

அந்த லோகத்திலே உயர்ந்தவனான சிவ பிரானும்

பிரமன் பெருமான் அவன்

-

அப்படிப்பட்ட நான் முகக்கடவுளும்

நீ

-

நீயிட்ட வழக்காயிருப்பர்கள்.

வெம் கதிர் வச்சிரம் கை இந்திரன முதலா தெய்வம் நீ

-

வெவ்விய பிரதாபம் பொருந்திய வஜ்ராயுதத்தைக் கையிலேயுடைய இந்திரன் முதலான தெய்வங்களும் நீயிட்ட வழக்கே;

(ஆனபின்பு)

நான் எங்கு தலைப்பெய்வன்

-

நான் என் முயற்சியினாலேயே உன்னை வந்து கிட்டுவேனோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

(எங்குத் தலைப்பெய்வன்.) ஸர்வஸ்மாத்பரனாய் ஆசரிதபவ்யனாய் போக்யதை அளவிறந்திருப்பவனானவுன்னை அகிஞ்சநனான நான் எங்கே கிட்டுவதென்கிறார். எழில் மூவுலகும் நீயே-உலகத்தில அவ்வோபதார்த்தங்களுக்குள்ள உயர்த்தியெல்லாம் நீயிட்ட வழக்கு என்றபடி. இப்படியே மேலடிகளிலும் கொள்க. முக்கண்ணனுக்குள்ள ஏற்றமும் பிரமனுக்குள்ள எற்றமும் இந்திரனுக்கும் அவனைச் சேர்ந்த மற்றுமுண்டான தேவர்களுக்குமுள்ள எற்றமுமெல்லாம் நீயிட்ட வழக்கென்றபடி. பிரமன் சிவனிந்திரன் முதலானார்க்குண்டான ஜச்வரியமெல்லாம் பிரானே! உன்ன தீனமாக வன்றா விருப்பது; அப்படிப்பட்ட நீ என்னுடைய பிரதிபந்தகங்களையும் போக்கி என்னை யுன்திருவடிகளிலே சேர்த்தருளவேணுமென்று கருத்து.

 

English Translation

O My Gopala, wearing a honey-dripping cool Tulasi wreath! You are the three fair worlds.  The three-eyed Siva is you, the Lord Brahma too is you. The thunderbolt-Indra and all the other gods are you.  Where am I to meet you?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain