(3616)

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ,

பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ,

தாமரைக் கண்ணாவோ. தனியேன் தனியா ளாவோ,

தாமரைக் கையாவோ. உன்னை யென்றுகொல் சார்வதுவே?

 

பதவுரை

பாமரு மூ உலகும் படைத்த பற்பநாபா ஓ

-

பலவகைப் பொருள்களும் நிரம்பியுள்ள மூவுலங்களையுமுண்டாக்கின ஓ பத்ம நாபனே!

பாமரு மூ உலகும் அளந்த பற்பம் பாதா ஓ

-

பரம்பின மூவுலங்களையு மளந்து கொண்ட திருவடித்தாமரைகளை யுடையவனே!

தாமரை கண்ணா ஓ

-

செந்தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவனே!

தனியேன் தனி ஆளா ஓ

-

துணையற்றவனான என்னை அஸாதாரணமாக ஆள்பவனே!

தாமரை கையா ஓ

-

செந்தாமரைக் கையனே!

உன்னை சேர்வது என்று கொல்

-

உன்னை நான் சேரப் பெறுவது எந்நாளோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஒவ்வோரவயத்தாலும் ஒவ்வோர் அதிமாநுஷ சேஷ்டிதத்தைச் செய்தருளின் பரமபோக்யனான வன்னை நான் என்றைக்குக் கிட்டுவதென்கிறார் திருநாபிக்கமலம் செய்த காரீயத்தை முதலடியில் அருளிச்செய்கிறார். உய்யவுலகு படைக்கவேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை என்கிறபடியே மூவுலகங்களையும் படை குமவனான பிரமனை நாபிக்கமலத்தில் உண்டாக்கினது பற்றிக் கொப்பூழ்ச் செந்தாமரையை மூவுலகும் படைத்ததாகச் சொல்லுகிறபடி, பிரானே! உன்னுடைய பரத்வத்தை நிர்ணயிப்பதற்கு வேறு சில ப்ரமாணங்கள் தேடவேணுமோ! உனது திருநாபிக்கமலந்தானே போதாதோ? என்கிறார். முதல்வர்! நிகரிலகு காருருவா நின்னகத்ததன்றே புகரிலகு தாமரையின் பூ என்று இவர்தாமே பெரிய திருவந்தாதியில் அருளிச்செய்தது காண்க. பட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் விபோர் நாபீபத்மோ விதிசிவநிதாநம் பகவத: ததந்யத் ப்ரூபங்கீபரதிதி ஸித்தாந்தயகி ந : என்றருளிச் செய்ததுங் காண்க.

படைத்தவுலங்களைப் பிறார் பறித்துக்கொள்ள, அவற்றை மீட்டுக் கொண்ட திருவடியின் செயலைச்சொல்லுசிறார் இரண்டாமடியில், அடிச்சியோந்தலைமிசை நீ யணியாய் ஆழியங்கண்ணா வுன்கோலப்பாதம் என்றும் நின்பாத பங்கயமே தலைக்கணியாய் என்றும் நான் ஆசைப்பட்டிருக்க, ஆசையில்லாதார் தலையிலே திருவடியை வைக்குமவனாயிருக்கின்றாயே! என்று நொந்து சொல்லுகிற படி. இரண்டடிகளிலும் பாமரு என்பதற்குப் பலவகையாகப் பொருள் கொள்வர்; பா பதார்த்தங்கள்; அவை மருவியிருந்துள்ள மூவுலகம். பா—பாபம்; அது மிக்கிருந்துள்ள மூவுலகம். பா வென்று பரம்புதலாய், அதையுடைத்தான மூவுலகம்.

தாமரைக்கண்ணாவோ! எனவிளித்தவுடனே தனியேன் தனியாளாவோ’ என்றதனால், திருவிருத்தத்தில் “பெருங்கேழலார் தம்பெருங்கண்மலர்ப் புண்டரீகம் நம்னேல் ஒருங்கே பிறழவைத்தார்  இவ்வகாலம், ஒருவர் நம்போல் வருங்கேழ்பவருளரே” என்று அருளிச்செய்தபடியே  முதலிலே தம்மை விஷயீதரித்தவை இத்திருக்கண்களேயென்று காட்டினபடி. இவ்விருள்தரு மாஞாலத்தில் நான் அதவிதயனன்றோ; உன் திருக்கண்கள் என்னையாண்டது மற்றொருவர்க்கு நிலமோ? கண்ணழகைக்காட்டி என்னை வலையுளகப்படுத்தி இப்படியோ உபேக்ஷித்து வைப்பது என்கிறார்.

தாமரைக்கையாவோ! அக்ரூரனைக் கையால் தொட்டு அணைத்தாயே. கண்டாகர்ணனைக் கையால் தொட்டு விஷயீகரித்தாயே; அவ்வளவுக்கும் நான் உரியனல்லேனோ? என்கிறார். இப்போது எனக்கு அதுவொன்றும் செய்யவேண்டர் இன்னநாள் என்னை நீ சேரப்பெறுவாய் என்று ஒரு நாளிட்டுக் கொடுக்கலாகாதோ வென்கிறார்-உன்னையென்று கொல் சேர்வதுவே யென்று.

 

English Translation

O Great! lotus-navel that created the worlds! O Great lotus-feet that strode the Earth!  O Lord of lotus eyes, protector of this forlorn self! O Lord of lotus hands, when will I join you?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain