nalaeram_logo.jpg
(3610)

கேட்டும் உணர்ந்தவர் கேசவற் காளன்றி யாவரோ,

வாட்டமி லாவண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு ,

ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய,

கோட்டங்கை வாமன னாயச்செய்த கூத்துகள் கண்டுமே?

பதவுரை

வாட்டம் இலா வண்கை மாவலிவாதிக்க

-

ஒருகாலும் குறையாத ஔதார்யத்தையுடைய மஹாபலியானவன் (தன் செருக்காலே) நலிய

வாதிப்புஉண்டு

-

ஹிம்ஸைபட்டு

ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு

-

திரண்டு சென்று ப்ரார்த்தித்த தேவர்களுடைய

இடர் நீக்கிய

-

இடரை நீக்குவதற்காக

கோடு அம் கை வாமனன் ஆய் செய்த கூத்துக்கள் கண்டும்

-

ஏற்றகையையுடைய ஸ்ரீவாமன மூர்த்தியாய்ச் செய்தருளின மநோஹர சேஷ்டிதங்களை யநுஸந்தித்து வைத்தும்

கேட்டும் உணர்ந்தவர்

-

புராண முகத்தாலே கேட்டும் அறிவுடையராயிருந்தவர்கள்

கேசவற்கு அன்றி ஆள் ஆவரோ

-

அந்தப்பெருமானுக்கல்லது மற்றொருவதற்கு அடிமையாவரோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தன் மேன்மை பாராமல் தான் இரப்பாளனாய் வாமநப்ரஹ்மசாரியாய் மஹாபலியின் செருக்கையடக்கித் தேவர்களைக் காத்தருளின மஹாகுணத்தையறிந்து வைத்து மற்றொருவர்க்கு ஆளாகவொண்ணுமோ வென்கிறார்.

“வாட்டமிலாவண்கை” என்று மாவலிக்கு விசேஷணமிட்டு அவனுடைய ஔதார்யத்தைச் சிறப்பித்துக் கூறினது—எம்பெருமானுடைய யாசகத்வத்திற்கு நிரூபகமாக. இந்திரனோ மாவலியால் தகர்ப்புண்டு தன் பதவியை யிழந்து கண்ணுங்கண்ணீருமாய் நின்று யாசகனாயிரா நின்றான்; மஹாபலியோ யஜ்ஞத்திலே தீக்ஷிதனாயிருந்து யார் ஏது கேட்டாலும் கொடுக்கக் கடவேனென்று ஒப்புயர்வற்ற ஔதார்யம் கொண்டாடியிராநின்றான்; இவ்விரண்டையும் பார்த்தானெம்பெருமான்; இந்த உதாரன்பக்கலிலே நாம் யாசகனாய்ச் சென்று இந்திரனுடைய அபேக்ஷுதத்தைப் பூர்த்திசெய்ய இயலுமென்று துணிந்து குறட்பிரமசாரியாய் பிக்ஷுகனாய் வந்தான்; ஆகவே இங்கு “வாட்டமிலா வண்கைமாவலி” என்றது நன்று. இந்த அழகை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே தைத்யௌதார்யேந்த்ரயாச்ஞாவிஹதிமபநயந் வாம நோ ர்த்தீ த்வமாஸீ: என்றருளிச் செய்தார்.

வாதிக்க—பாதிக்க; வாதிப்புண்டு—பாதைப்பட்டு. பாதா என்கிற வடமொழிப் பகுதி யுணர்க. ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந்தார்க்கு—சென்றிரந்த ஈட்டங்கொள் தேவர்கட்கு என்று யோஜித்துக்கொள்வது. இவ்விடத்தில் பெரியவாச்சான் பிள்ளை யருளிச்செயல் காண்மின்;-ஈச்வராபிமாநிகளாய் ‘ஒருவர்பக்கல் செல்லக்கடவோ மல்லோம்’ என்றும் ‘எல்லார்க்கும் இடுமதொழிய ஒருவர்பக்கல் ஒன்றுங் கொள்ளக்கடவோ மல்லோம்’ என்று மிருக்குமவர்களாய்த்தம்மில் தாம் சேர்த்தியின்றிக்கேயிருக்கிற தேவர்கள் ஆபத்தின் மிகுதியாலே தம்மிலே யொருமிடறாய் பக்நாபிமாநிகளாய்ச் சென்று இரந்தவர்களுக்கு.” என்று.

நம்பிள்ளையீடு;-க்ராமணிகளைப் போலவே ஒருவர் உச்ச்ராயம் ஒருவர் பொறாதே தலையறுப்பாரும் தலையறுப்புண்பாருமாய்த் திரியக்கடவ ஜாதியிறே. இப்படி சேராச்சேர்த்தியாயிருக்கிறவர்கள் ஆபத்துமிக்கவாறே தந்தான் அபிமானங்களைப் போகட்டு எல்லாருமொருமிடறாய் வந்து விழுந்தார்கள்.”

இடர்நீக்கிய ‘உங்கள் கோரிக்கையின்படியே உங்கள் அபேக்ஷிதத்தைத் தலைக் கட்டித்தருகிறேன்’ என்கிற ப்ரதிஜ்ஞாவசனத்தாலே து:க்க நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுத்த என்றபடி. (கோட்டங்கை) கோடு+அம் கை=கோட்டங்கை: கோடு என்று கொள்ளுகையைச் சொன்னபடி; அதாவது கையேற்கை. செய்த கூத்துக்கள்ஸ்ரீகூத்துப்போலே மநோஹரமான சேஷ்டிதங்களை யென்றபடி. கண்டும்ஸ்ரீகண்ணுலே காண்பது போலவே சாஸ்த்ரங்களால் அறிகையும் ஆஸ்திகர்கட்கு ப்ரத்யக்ஷ்மேயாதலால் இங்ஙனே சொல்லக் குறையில்லை.

English Translation

Afflicted by the generous king Bali, the gods in hordes petitioned to the Lord, who then came as an alms-begging manikin, knowing these wondrous deeds, how will anyone not be a devotee of Kesava?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain