nalaeram_logo.jpg
(3606)

நாட்டில் பிறந்தவர் நாரணற் காளன்றி யாவரோ,

நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா,

நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு,

நாட்டை யளித்துய்யச் செய்து நடந்தமை கேட்டுமே?

பதவுரை

நாட்டில் பிறந்தது

-

(தன்வாசியறியாத) இக்கொடிய வுலகத்திலே வந்து பிறந்தது

படாதனபட்டு

-

ஸம்ஸாரிகளும் அநுபவியாத கிலேசங்களையநுபவித்து

மனிசர்க்கு ஆ

-

செய்தநன்றியறியாத மனிசர்களுக்காக

நாட்டை நலியும் அரக்கரை நாடி தடிந்திட்டு

-

உலகத்தை ஹிம்ஸிக்கின்ற ராவணாதி ராக்ஷ்ஸர்களை ஆராய்ந்து சென்று கொன்று

நாட்டை அளித்து

-

(இப்படியாக) நாட்டைரக்ஷித்து

உய்ய செய்து

-

உஜ்ஜீவனப்படுத்தி

நடந்தமை கேட்டும்

-

பின்பு திருநாட்டுக்கு நடந்த படியைக் கேட்டிருந்தும்

நாட்டில் பிறந்தவர்

-

(அப்பெருமானுடைய திருக்குணங்கள் நடையாடுகிற) நாட்டிலே பிறந்தவர்கள்

நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ

-

நாராயணனான அந்த ஸ்ரீராமனுக்கல்லது மற்றொருவர்க்கு ஆட்படுவர்களோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

“அவதாரகார்யம் சமைந்தவளவிலே எழுந்தருளுகையன்றியே பதினோராயிரமாண்டு எழுந்தருளியிருந்து ரக்ஷித்த சீலாதிக்யத்தை யருளிச் செய்கிறார்” என்பது பன்னீராயிரப்படியின் அவதாரிகை. “தன்னை யொழியச்செல்லாமையைப் பிறப்பித்து இங்கேயவர்களை யிட்டுவைத்து, தானேயெழுந்தருளுகையன்றிக்கே கூடக்கொண்டுபோனானென்று, கீழ்ச்சொன்னவதிற் காட்டில் அதிக குணத்தை யருளிச்செய்கிறார்” என்பது பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸீக்தி.

நாட்டில் பிறந்தவர் நாரணற்கன்றி ஆளாவரோ? ஸ்ரீராமகுணங்கள் நடையாடுகிற தேசத்திலே பிறந்த பாக்கியசாலிகள் அந்த ஸ்ரீராமபிரானுக்கன்றி யாளாவரோ? என்றபடி. ராவணவதமானபிறகு நான்முகக்கடவுள் வந்து பவாந் நாராயணோ தேவ: என்றனனாதலால் இங்கு இராமபிரானை நாராயண சப்தத்தினாலகுளிச்செய்கிறபடி. நாட்டில் பிறப்பது நாராயணனுக்கு (இராமபிரானுக்கு) ஆளாவதற்காகவே யென்பது முதலடியின் கருத்து. மேல் மூன்றடிகளாலே அவன் செய்த மஹோபகாரத்தைக் சொல்லுகிறது. கருமங்களுக்கு வசப்பட்ட ஸம்ஸாரிகளுங்கூட அருவருக்கும்படியான நாட்டிலே வந்து பிறந்தானே! என்று இதை நினைத்து உருக அருவருக்கும்படியான நாட்டிலே வந்து பிறந்தானே! என்று இதை நினைத்து உருக வேண்டாவோ? நாமெல்லாரும் பத்துமாஸம் கர்ப்பவாஸம் பண்ணினால் அவன் ததச்ச த்வாதசே மாஸே என்னும்படி பன்னிரண்டு மாஸம் கர்ப்பவாஸம் பண்ணினானே! என்று இதையும் நினைத்து உருகவேண்டாவோ? இப்படி பிறந்தது மாத்திரமேயோ? ஸம்ஸாரிகள்படாத பாடுகளையும் பட்டானே!, ஒருவன் பிறந்தால் இருக்கும் நாள் தானும் தன் மனைவியுமாகச் சேரவிருந்து ஜீவித்துப்போவதுண்டே, அப்படியுமன்றிக்கே பிராட்டி ஓரிடத்திலும் தான் மற்றோரிடத்திலுமாக வர்த்திக்க வேண்டினது முதலாகப்பட்ட பாடுகளையும் நினைத்து உருகவேண்டாவோ? இப்படிபடாத பாடுகள் பட்டது யாருக்காக? (மனிசர்க்கா) தங்களுக்காக அநுக்ரஹத்தாலே படுகிற இந்த மஹா குணத்தை குணஹாநியாச் சொல்லி நிந்திக்கும் நன்றி கெட்ட நம்போல்வார்க்காகவன்றோ இத்தனை பாடு பட்டது என்று, இதை நினைத்தும் உருகவேண்டாவோ? இன்னமும் விரோதி நிரஸனங்கள் பண்ணின படிகளையும் நினைக்க வேண்டாவோ?

ஈற்றடிக்கு ஆறாயிரப்படி காண்மின்;- “இப்படி லோகத்தை ரக்ஷித்தருளிததிதம் ந:க்ருதம் கார்யம்-ப்ரஹருஷ்டோ திவமாக்ரம் என்று ப்ரஹ்மா விண்ணப்பஞ் செய்தபோதே யெழுந்தருளாதே ஸ்வவிச்லேஷத்தாலே விநஷ்டப்ராயமான திருநகரியில் சராசர ஜந்துஜாதத்தை யெல்லாம் மீண்டெழுந்தருளி யுய்யச்செய்து பின்னைத் திருநாட்டிலே யெழுந்தருளின இம்மஹாகுணத்தைக் கேட்டும் சேதநராபிருப்பர் பவாந் நாராயணோ தேவ: என்று சொல்லப்படுகிற தசரதாத்மஜனான நாராயணனுக்கு அடிமையாகாதிருக்கும்ப்டி யெங்ஙனே யென்கிறார்.”

ஈட்டு ஸ்ரீஸீக்தி காண்மின்;- நிரபராதமான நாட்டை நலிகிற ராவணாதி கண்டகரை அவர்களிருந்த விடங்களிலே தேடிச் சென்று கொன்று லங்காத் வாரத்திலே விஜயஸ்ரீ பரிவ்ருதராய்க் கொண்டெழுந்தருளி நிற்க, அவ்வளவிலே ப்ரஹமாதி தேவர்கள் வந்து ததிதம் ந: க்ருதம் கார்யம்-ப்ரஹருஷ்டோ திவமாக்ரம என்று, நாங்கள் அர்த்தித்தவையடைய எங்களளவு பாராதே தேவரீர் செய்தருளிற்று; இனி தன்னுடைச்சோதியேற எழுந்தருளவமையும் என்ன; அவ்வளவிலே ருத்ரன் ‘நாடடைய தேவரீருடைய விச்லேஷத்தாலே விநஷ்ட ப்ராயமாய்க்கிடக்கிறது; திருத்தாய்மாரையும் திருத்தம்பிமாரையும் திருப்படைவீட்டிலுள்ள ஜனங்களையும், மீண்டுபுக்குச் சிலநா ளெழுந்தருளியிருந்து ஈரக்கையாலே தடவிரக்ஷித்தெழுந்தருள வேணும்’ என்ன, கடல் ஞாலத்தளிமிக்கானென்னும்படியே பதினோராயிரமாண்டு எழுந்தரூளியிருந்து ரக்ஷித்தபடியைச் சொல்லுகிறது—நாட்டை யளித்தென்று.”

உய்யச் செய்து நடந்தமை யென்றது—நெடுநாள். இருந்து, தன்னாலல்லது செல்லாதபடி பண்ணி அவர்களை யெல்லாம் விட்டுப்போகாதே கூடவே கொண்டு போனபடியைச் சொன்னவாறு.

English Translation

For the sake of humanity, Narayana took birth and walked on Earth, suffering countless miseries, then destroyed the plague of Rakshasas.  He gave the kingdom to Vibhisana, and liberation to all knowing this, would mortals be devotees to anyone else?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain