(3605)

கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,

புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,

நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,

நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.

 

பதவுரை

புல் பா முதல் ஆ

-

புல்லாகிற பதார்த்தம் முதலாகவும்

புல் எறும்பு ஆதி

-

மிக அற்பமான எறும்பு முதலாகவும்

நல் பால் அயோத்தியில் வாழும்

-

(ராமகுணங்கள் நடையாடுகிற) நல்ல தேசமான அயோத்யாபுரியில் வாழ்கிற

சராசரம முற்றவும்

-

ஸ்தாவர ஜங்கமங்களானவை யெல்லாவற்றையும்.

ஒன்று இன்றியே

-

ஒருவிதமான ஸாதநாநுஷ்டானமுமில்லாமலிருக்கச் செய்தேயும்

நான் முகனார் பெற்ற நாட்டுளே

-

பிரமன் படைத்த இவ்வுலகுக் குள்ளே

நல பாலுக்கு உய்த்தனன்

-

நல்ல ஸ்வபாவத்தையுடைத்தாம் படி பண்ணினான்;

(ஆதலால்)

கற்பார்

-

(உலகில்) கற்க விரும்பு மவர்கள்

இராமபிரானை அல்லாமல் மற்றும் கற்பரோ

-

(குணக்கடலாகிய) ஸ்ரீராமனைத் தவிர மற்றொரு வ்யக்தியைக் கற்க நினைப்பர்களோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இராம பிரானுடைய ஒரு விலக்ஷ்ணமான தன்மையை யருளிச் செய்கிறாரிதில். தசரத சக்ரவர்த்தியின் கட்டளையின்படி இராமபிரானைத் தேரிலேற்றிக் கொண்டு போய்க் கங்கைக்கரையில் விட்டுத் திரும்பியவத்த ஸீமந்த்ரன் சக்ரவர்த்தியிடம் சொல்லுகிறான்- விஷயே தே மஹாராஜ! ராமவ்யஸநகர்சிதா: அபிவ்ருகூஷா: பரிம்லாநாஸ் ஸபுஷ்பாங்குர கோரகா: உபதப்தோதகா நத்ய: பல்வலாநி ஸராம்ஸி ச, பரிசுஷ்கபலாகாநி வநாந்யுபவநாநி ச என்றான். மஹாராஜரே! உம்முடைய திருக்குமாரன் நாட்டைவிட்டுக் காட்டுக்குப் புறப்பட்டுச் செல்லுகிறேனேயென்கிற துயரத்தினால் மரங்களெல்லாம் வாடி யுலர்ந்துபோயின; நதிகள், குளங்கள், குட்டைகளெல்லாம் கரையருகிலும் அடிவைக்க வொண்ணாதபடி கொதிப்படைந்தன; சிறிய தோட்டங்கள் பெரிய தோட்டங்களென்கிற வாசியின்றிக்கே பொழில்களெல்லாம் இலையுலர்ந்து அழகழியப் பெற்றன என்கிறான். இப்படி அசேதநவஸ்துக்களையுங்கூட விசாரப்படுத்திக்கொண்டே காட்டுக்கெழுந்தருளினவன் பதினாலாண்டு கடந்த பிறகு மீண்டு திருபயோத்தித்கு எழுந்தருளுகையில் அகால பலிநோவ்ருகூஷா: என்னும்படியாயிற்று. ஆகவிப்படி தன்னுடைய விச்லேஷத்தில் வாடியுலர்ந்தும் ஸம்ச்லேஷத்தில் செழிப்பற்றோங்கியும் நின்றன அசேதனங்களென்றால் அவன்றன்னுடைய குணப்பெருமையை என்னென்று சொல்லுவது!

கூரத்தாழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில்-வம்சம் ரகோரநுஜிக்ருக்ஷுரிஹாவதீர்ண: திவ்யைர் வவர்ஷித ததாத்ர பவக்குணௌகை: த்வத்ஸந்நிதி ப்ரபவசைத்யஜீஷோ யதாஹி; வ்ருகூஷாச்ச தாந்திமலபந்த பவத்வியோகே என்றச்லோகத்தினால் இக்குணத்திற்கு உருகினார்.

ஆசார்ய ஹருதியத்தில் “கோஸல கோகுலசராசரம் செய்யுங் குண மொன்றின்றியே அற்புதமென்னக் கண்டோம்” என்ற சூர்ணையும் அதன் வியாக்கியானமும் ஸேவிக்கத்தக்கன.

இப்பாசுரத்தில் “புற்பாமுதலா” என்று தொடங்கி மூன்றடிகளாலும் கீழே விவரித்த மஹாகுணமே அருளிச் செய்யப்படுகிறதாகப் பிள்ளான் முதலான ஸகல ஆசாரியர்களும் ஒரு மிடறாக அருளிச்செய்தார்கள். ஸ்ரீவேதாந்த தேசிகர் ஒருவர் தாம் த்ரமிடோபநிஷத் தாத்பாய் ரத்நாவளியில் இத்திருவாய்மொழிக்கான ச்லோகத்தில் இப்பாசுரத்தின் பொருளாக—ஸாகேதே முக்திதாநாத்” என்றருளிச் செய்தார்; அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றிய கதையை இப்பாசுரத்திற்கு அர்த்தமாகக் கருதினார். ஆறாயிரப்படி ஸ்ரீஸீக்தி காண்மின்;-“ப்ராக்ருத வஸ்துக்களே தாரகபோஷக போக்யமாயிருக்கக்கடவ இப் ப்ரக்ருதிமண்டலத்திலே வைத்துக்கொண்டு திருவயோத்யையிலே வர்த்திக்கிற தூர்வாதி நிகில ஜந்துக்களையும் கர்மயோகாத்யு பாயம் பண்ணுதிருக்கச் செய்தேயும் திருநாட்டிலுள்ளாரைப்போலே தன் திருவடிகளே தாரக போஷக போக்யமாக்கியருளின் இம மஹாகுணத்தை யுடையனாயிருந்த இராமபிரானையல்லாமல் மற்றுங் கற்பரோ வென்று அவனுடைய குணங்களை யநுபவிக்கிறார்.” என்று இப்படியிருக்கவும் தேசிகன் வேறுவகையாகப் பொருள் கூறியது வாதிகேஸாஜீ அழகியமணவாளச் சீயருடைய பன்னீராயிரவுரையில் ப்ரதிபத்தியின் கனத்தாலே யென்று தெரிகிறது. அவ்வுரையில் அங்ஙனே பொருளுரைக்கப்பட்டது.

மற்றுங் கற்பரோ” என்ற விடத்து மற்றும் என்றது தேவதாந்தரங்களைக் கருதியன்று; ஸ்ரீராமாவதாரந்தவிர மற்றுள்ள விபவாவதரய்களையும் பரத்வாதி நிலைகளையும். ஸ்ரீராமாவதாரந்தவிர மற்றுள்ள விபவாதாரங்களையும் பரத்வாதி நிலைகளையும். பாவோ நாந்யத்ர கச்சதி என்று திருவடி சொன்னதும், என்னமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றிகளைக் காணாவே என்று திருப்பாணாழ்வார் அருளிச் செய்ததும் இங்கே நினைக்கத்தக்கன.

புற்பாலீமுதலா-பா என்று வஸ்துவைச் சொல்லுகிறது; புல்லாகிற வஸ்து முதற்கொண்டு என்றபடி. அன்றியே, பா—பரம்பின, புல் முதலா என்றும் யோஜிப்பதுண்டு. ஒன்றின்றியே நிர்ஹேதுகமாகவென்றபடி.

நானமுகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன்-நற்பாலென்றது நல்ல பானமை யென்றபடி. விலக்ஷ்ணமான ஸ்வபாவம; அதாவது இராமபிரானுடைய குணங்களையே தாரகபோஷக போக்யமாகக் கொண்டிருக்கையாகிற வைலக்ஷ்ண்யம். இப்படிப்பட்ட தன்மைக்கு ஆளாம்படி செய்தனன் என்கை. இங்கே ‘நான்முகனார் பெற்ற நாட்டுளே’ என்றதற்கு ப்ரயோஜனமென்? என்னில்; பிரமனை நியாமகனாக்கி அவனுக்கு வசப்பட்டதாம்படி செய்திருக்கிற இந்த நாட்டிலே புல்லெறும்பு முதலானவற்றுக்கு வேறே உணவுகள் நியதங்களாயிருக்கவும் அந்த நியதியை (நாட்டின் தன்மையை)த் தவிர்த்தருளின்படி சொல்லுகிறது.

 

English Translation

In the blessed Ayadhya, the land created by Brahma, -down to the meanest gross and insect without exception, he gives on exalted place to all the sentient and the insentient, so would any scholar study about a king other than Rama?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain