nalaeram_logo.jpg
(3582)

முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்,

துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண்பொழில்சூழ் வண்குரு கூர்ச்சட கோபன்,

முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன்மாலை ஆயிரத் திப்பத்தும் வல்லார்,

முகில்வண்ண வானத் திமையவர் சூழ இருப்பர்பே ரின்பவெள் ளத்தே.

பதவுரை

முகில் வண்ணன் அடியை அடைந்து

-

மேகவண்ணனான் எம்பெருமானுடைய திருவடிகளை யடைந்து

அருள் சூடி உயந்தவன்

-

அவனுடைய திருவருளைத் தலைக்கொண்டு உஜ்ஜீவிததவரும்,

மொய் புனல் பொருநல்

-

உத்தமதீர்த்தனான தாமிரப்ரணியினுடைய

துகில் வண்ணம் தூ நீர் சேர்ப்பன்

-

துகிலின் நிறம்போலே பரிசுத்தமான ஜலத்தின் கரையிலே சேர்ந்திருப்பவரும்

வண் பொழில் சூழ் வண் குருகூர்

-

வளம்மிக்க சோலைகள் சூழந்த திருநகரிக்குத் தலைவருமான்

முகில் வண்ணன் அடிமேல் சொன்ன

-

மேகவணணனான எம்பெருமானது திருவடிகளை நோக்தியருளிச் செய்த

சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்

-

சொல் தொடையான ஆயிரத்தினுள் இப்பதிகத்தை ஒதவல்லவர்கள்

முகில் வண்ணம் வானத்து

-

முகில் வண்ணனுடைய நிழலீட்டாலே முகில் வண்ணமாயிருக்கின்ற பரமபதத்திலே

இமையவர் சூழ

-

நித்தியசூரிகள் புடைசூழ

பேர் இன்பம் வெள்ளத்தே

-

ப்ரஹமானந்த ப்ரவாஹித்தில்

இருப்பர்

-

மூழ்கியிருக்கப்பெறுவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (முகில்வண்ணனடியை.) பெரியபெருமாள் திருவடிகளைச் சேர்ந்து ஸர்வப்ரகார ஸம்ச்லேஷமும் பண்ணப் பெறுகையாலே உஜ்ஜீவனம் பெற்றவராய் தாம்ரபர்ணீ தீரவாஸியான ஆழ்வார் முகில்வண்ணனடிமேற் சொன்ன சொல்மாலையாயிரத்துள் இப்பத்தும் வல்லர்வர்கள் திருநாட்டிலே அயர்வறு மமரர்கள் சூழ்ஆனந்தக்கடலிலே ஆழ்ந்திருக்கப் பெறுவர்களென்று பயனுரைத்துக் தலைக்கட்டிளுராயிற்று.

முகில்வண்ணனடிமேற் சொன்ன சொல்மாலையாயிர மென்றவிதனால்-திருவாய்மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமாகவே அருளிச்செய்த தென்பது விளங்குமென்பர். ஆனது பற்றியே வான்திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகளாயிரமும் என்று திருவாய்மொழித் தனியன் அவதரித்தபடி. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தியுங் காண்மின்;- “பெரியபெருமாள் திருவடிகளிலே திருவாய்மொழியாயிரமுஞ் சொல்லிற்று. திருமோகூர்க்கு ஈத்தபத்து திருவேங்கடத்துக் கிவைபத்து என்று பிரித்துக் கொடுத்துவித்தனை பெருமாள் திருப்பலகையில் அமுதுபடியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்க்கும் அளந்து கொடுக்குமாபோலே என்று பிள்ளையருளிச் செய்வர்”

முகில்வண்ணவானத்து-முகில்வண்ணனான எம்பெருமானுடைய திருநாட்டிலே யென்று பொருள் கொள்ளலாமாயினும், அங்கிக்கிறனுடைய நிழலீட்டாலே அவன்படியாயிருக்கற வானம் என்று பொருள் கொள்வது சிறக்கும். ஸ்ரீரங்க விமானத்தை அநுபவியாநின்ற பட்டர்:-அபி பணிபதிபாவாத் சுப்ரமந்தச் சயாலோர் மரதகஸூகுமாரை: ரங்கபர்த்துர் மயூகை:, ஸகலஜலதிபாநச்யாம ஜீமூதஜைத்ரம் புலகயதி விமாநம் பாவநம் லோசநே ந: என்றருளிச்செய்த ச்லோகம் இங்கே அநுஸந்திக்கவுரியது. ஆதிசேஷனுடைய அவதாரமான ஸ்ரீரங்கவிமானம் வெண்ணிறத்ததாயினும் உள்ளுக்கிடக்கிற பச்சைமாமரைபோல் மேனியனுடைய திருமேனி நிழலீட்டாலே சாமளமாகவே தமக்கு ஸேவைஸாதிப்பதாக அருளிச்செய்தவாறு.

English Translation

This decad of the thousand songs, by Satakopan of Kurugur, through grace attained at the Lord's feet in groves of Porunal Waters,  addresses the good Lord of hue like the raincloud. Those who master it will secure of life of joy, hallowed by good celestials

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain