nalaeram_logo.jpg
­(3580)

என்திரு மகள்சேர் மார்வனே! என்னும் என்னுடை யாவியே. என்னும்,

நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட நிலமகள் கேள்வ னே! என்னும்,

அன்றுரு வேழும் தழுவிநீ கொண்ட ஆய்மகள் அன்ப னே! என்னும்,

தென்திரு வரங்கம் கோயில்கொண் டானே! தெளிகிலேன் முடிவிவள் தனக்கே!

பதவுரை

என் திருமகள் சேர்மார்பனே என்னும்

-

எனக்குப் புருஷகார பூதையான பிராட்டி சோந்த திருமார்பை யுடையவனே! என்கிறாள்;

என்னுடை ஆவியே என்னும்

-

எனக்கு உயிராயிருப்ப வனே! என்கிறாள்;

நின் திருஎயிற்றால் இடந்து நீ கொண்ட

-

உனது கோரப் பற்களாலே இடந்து ஏற்றுக்கொண்ட

நிலம் மகள் கேள்வனே என்னும்

-

பூமிப்பிராட்டிக்கு நாயகனே! என்கிறாள்;

அன்று

-

முன் பொருகால்

உரு ஏழும்

-

இடிபோன்ற குரலையுடையரிஷபங்களேழையும்

தழுவி –

-

மதமொழித்து

நீ கொண்ட

-

மணந்து கொண்ட

ஆய் மகள்

-

நப்பின்னைப் பிராட்டிக்கு ப்ரியனே! என்கிறாள்;

தென் திருஅரங்கம் கோயில் கொண்டானே

-

ஸ்ரீ ரங்கநாதனே!

இவள் தனக்கு

-

இவளுக்கு

முடிவு தெளிகிலேன்

-

ஆர்த்தி முடியுமாறு அறிகின்றிலேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

(என் திருமகள் சேர்) பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டவர் களுக்குப் பலனில் வியபிசாரமில்லாமையாலே, அந்தோ! நான் பெரிய பிராட்டியாரைப் புஐஷகாரமாகக் கொண்டு பற்றியிருக்கு என்கதி இங்ஙனேயாவதே! என்கிறாள். என் என்பதைத் திருமகள் சேர்மார்வனில் அந்வயித்துப் பொருள் கொள்ளவுங் கூடுமானாலும் இங்குத் திருமகளில் அந்வயமெ விவக்ஷிதம். என்னுடைய திருமகள் என்றபடி. “அனந்தாழ்வான் தன் பெண்பிள்ளையை என் திருமகளென்று திருநாமம் சாத்தினான்” என்பது ஈடு.

“என் திருமகள் சேர்மார்பனே யென்னும்” என்று ஒரு வாக்கியமாகவும் “என்னுடையாவியே யென்னும்” என்று மற்றொரு வாக்கியமாகவும் யோஜிப்பது தவிர, முதலடி முழுவதையும் ஒரே வாக்கியமாக யோஜிப்பதுமுண்டு. இங்கெ ஈட்டில் ஆச்சரியமானதோர்  ஐதிஹ்யம் காண்மின்; -“பெருமாளுக்கு விண்ணப்பஞ்செய்நோ இத்திருவாய்மொழியியலைக் கேட்டருளா நிற்க, இப்பாட்டளவிலே வந்த வாறே என் திருமகள் சேர்மார்பனே யென்னுமென்னுடையாவியே னென்னும் என்று இயலைச் சொத்தருளச் செய்ய, அத்தைக் கேட்டுக் கையையுதறி ‘ஸ்ரீரங்கநாத!’ என்று அணையிலே சாய்ந்தரளினார் பட்டர்” என்று அருளிச் செய்வர். அப்போது திருமேனியிலே பிறந்த விக்ருதியைக் கண்டு இவர்க்கு பகவத்ப்ராப்தி அணித்தாகிறதோ வென்று அஞ்சியிருந்தெனென்று ஜீயரருளிச் செய்வர்.”

பட்டர் ஸ்ரீரங்கேச புரோஹிதராகையாலே அடிக்கடி பகவத் ஸன்னிதியிலே உபந்யாஸங்கள் செய்தருள் நேரும். அதற்காக மன்னாடி நஞ்சீயரையழைத்து அருளிச்செயல் பாசுரங்களைச் சொல்லவிட்டுச் செவிக்கினிதாகக் கேட்பது வழக்கம். அமுது செய்து கொண்டே ஒருநாள் கேட்டருளா நின்றாள். அப்போது இயல் ஸேவிக்கின்ற நஞ்சீயர் இப்பாசுரத்தை ஸேவிக்கும் போது “என் திருமகள் சேர்மார்பனே யென்னும்” என்றவிடத்தில் நிறுத்தாமல் ஏக ச்வாஸமாகவே முதவடியை முழுதுஞ்; சொல்லி நிறுத்தினாராம். என்னும் என்பதற்கு ‘என்று சொல்லுகிறாள்’ என்கிற அர்த்தம் தவிர, என்று சொல்லப்படுகிற என்கிற அர்த்தமும் உண்டாதலால் என் திருமகள் சேர்மார்பனென்று சொல்லப்படுகிற என்னுடைய ஆவியே எனிகிறாள்’ என்று விவக்ஷித்து நஞ்சீயர் நிறுத்தினபடி. பட்டர் அந்த இன் சுவையை யறித்து திருவுள்ளமுமடகுலைப்பட்டா ரென்றதாயிற்று. “இவர்க்கு ப்ராணன் ஒருவாயு விசேஷமால் ஒரு மிதுனமாயிற்று திருமகள் சேர்மார்பனாய்க்கொண்டு எனக்கு தாரகனானவனே! என்னும்.”

என் திருமகள் சேர்மார்பனென்று சொல்லப்படுமதான என்னுவியே! என்று பொருள் விவசுமரதமானபடி ஆனதுபற்றியே “இவர்க்கு ப்ராணன் ஒரு வாயு விசேஷமால் ஒரு மிதுனமாயிற்று” என்றருளிச் செய்தது.

இரண்டாமடியில் வராஹாவதாரத்தை ப்ரஸ்தாவித்தது-நீ பூமிப்பிராட்டி பக்கல் முகம் பெறவேணுமானால் அவள் பரிகரமான எங்களை நோக்கியேயாக வேணுங்காண் என்ற  கருத்தினாலாம். அன்றியே பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள். மாசுடம்பில் நீர் வாராமானமிலாப்பலறஙாந், தேசுடைய தேவா திருவரங்கச் செல்வனார், பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே (நாச்சியார் திருமொழி 11-8) என்று ஆண்டாளருளிச் செய்த கணக்கிலே, பூமிப்பிராட்டிக்கு நீ அருளிச் செய்த திருவாக்கு வெறுமனேயோ? என்று கேட்கிற கருத்தாகவுமாம்.

மூன்றாமடியில் நப்பின்னைப் பிராட்டியை மணந்து கொண்ட வரலாறு அநுஸந் திக்கப்படுகிறது. குமபர்மகளான நப்பின்னையை மணந்து கொள்வதற்காக ஒருவர்க்கு மடங்காத ஏழுரிஷபங்களை; வலியடங்கின வரலாறு காண்க. உரு என்றாலும் உரும் என்றாலும் இடிக்குப் பெயர். இடியென்றே சென்னவிது அந்த ரிஷபங்களின் பயரங்கரத் தன்மையைக் காட்டும், தழுவி யென்றது மங்கலவழக்கு; வதைசெய்து என்பது தாற்பரியம்.

அங்ஙனம் எருதேழடர்த்த சிரமம் தீருகைக்காகத் தென்திருவரங்கம் கோயில் கொண்டானே, இவளைப்பற்றி நீர் ஸித்தாந்தம் செய்திருக்குமது  இன்னதென்று அறிகின்றிலேன் என்றாளாயிற்று.

English Translation

O Ranga in the temple of the South! She says, "My soul!", "O spouse of Dame Earth, whom you lifted on your tusk!", "My Lord of lotus-dame Lakshmi, who rests on your chest!", "Beloved Lord of cowherd-dame, you won her by subduing seven bulls!", Alas, I cannot decipher her end

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain