nalaeram_logo.jpg
(3578)

பாலதுன் பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்றநின் றானே,

காலசக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா கண்ணணே! என்னும்,

சேல்கொள்தண் புனல்சூழ் திருவரங் கத்தாய். என்னும் என் தீர்த்தனே! என்னும்,

கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே!

பதவுரை

என்னுடை கோமளம் கொழுந்து

-

மிக மெல்லியலாளான என்மகள்

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் என்னும்

-

அவ்வவ்விடங்களுக்குத் தகுதியாக இன்பங்களையும் துன்பங்களையும் படைத்கவனே! என்கிறாள்:

பற்று இலார் பற்ற நின்றானே என்னும்

-

அசரண்ய சரண்யனே! என்கிறாள்;

கால சக்கரத்தாய் என்னும்

-

காலசக்ரத்திற்கு நிர்வாஹகனானவனே! என்கிறாள்;

கடல் இடம் கொண்ட கடல் வண்ணா என்னும்

-

திருப்பாற் கடலை இடமாகக் கொண்ட கடல்; வண்ணனே! என்கிறாள்;

கண்ணனே என்னும்

-

ஸ்ரீகிருஷ்ணா என்கிறாள்;

சேல் கொள்தண் புனல் சூழ் திருஅரங்கத் தாய் என்னும்

-

மீன்கள் நிரம்பிய குளிர்ந்த தீர்த்தம் சூழ்ந்தா கோயிலில் வாற்பவனே! என்கிறாள்;

என்தர்த்தானே என்னும்

-

என்னைப் பவித்திரனாக ஆக்குமவனே! என்கிறாள்;

கோலம் மாமழை கண்பனி மல்க் இருக்கும்

-

அழகு பொருந்திப் பெருத்துக குளிர்ந்த கண்கள் நீர்பெருகநிற்கின்றாள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பாலதுன்பங்கள்.) எம்பெருமானுடைய ஸ்ருஷ்டிக்ரமத்தை நோக்குமிடத்த இன்பதுன்பங்களை அந்தந்த ஆச்ரயங்களுக்குத் தகுதியாக அமைக்கின்றபடியைக் காணாநின்றோம். அனுகூலர்கள் இன்பங்கள் யநுபவிப்பதென்றும். பிரதிகூலர்கள் துன்பங்களை யநுபவிப்பதென்றும் விரம்புகட்டி வைத்திருப்பதுண்டே; அந்த வரம்புக்கு நான் பஹிர்ப்பூதையோ என்கிறா ளென்மகள். இரண்டாமடியில் முடிவிலுள்ள என்னும் என்பது விளிதோறும் அந்வயிக்கக் கடவது.

பால-பால் என்று இடத்திற்குப் பயர்; பால என்பது அந்தந்த இடத்திற்குத் தகுதியாக என்றபடி. அந்தந்த பதார்தத்தங்கள் பொறுக்குமாளவுகளிலே யன்றோ நீ ஸூகதுக்கங்களைச சுமத்துவது; ‘தன் காய்பொறாத கொம்பு என்னும்படி யான ஸ்ருஷ்டி இல்லையே, அதற்கு மாறாக இப்படி என்னைப் படுத்தலுலீமோ? என்கிறாள்.

பற்றிலார் பற்றநின்றானே!-அசரண்ய சரண்யன் என்று விருதூதித்திரி கிறாயே!; என்னைத் துடிக்க விட்டிருக்கு முனக்கு இந்த விருது தகுமோ? கள்ளிச் செடியை மஹாவிருக்ஷ்மென்னுமாபோல யாகுமென்றோ வென்கிறாள்.

காலசக்கரத்தாய்!-இதற்கு இரண்டுபடியாகப் பொருள் கூறுவர். கால சக்ரத்துக்கு நியாமகனானவனே! என்பது ஒரு பொருள். ‘உமக்கு அருள் செய்கைக்கு ஒரு கால நியமுண்டு’ என்பாயாகில், பிரானே! காலமென்று அப்படியொன்றுண்டோ? நீ ஸங்கல்பிக்கு மதுவே காலமன்றோ? காலசக்ரத்தைத் தன்னிஷ்டப்படி நடத்தவல்லவுனக்கு இதுவொரு வார்த்தையோ? என்பதாகக் கொள்க. காலன் என்று யமனுக்குப் பேராகையாலே, விரோதிக்கு மிருத்யுவான திருவாழியை யுடையவனே! என்பதும் ஒருபொருள்.

கடலிடங்கொண்ட கடல்வண்ணா கண்ணனே! - ஏஷ நாராயண: ஸ்ரீமாந்க்ஷுரார்ணவ நிகேதந: - நாகபாயங்க முத்ஸ்ருஜ்ய மதுராம் புரீம் என்கிற பிரமானத்தை விரித்து அதன் மேலே கள்ளநித்திரை கொள்கின்றபடியை விட்டு அடையனாய் வந்து பிறந்தாய்; அவ்விருப்பையும் விட்டுக் கோயிலே வந்து சாய்ந்தருளிநாய்; இதலெல்லாம் பழுதே போகா நின்றதே யென்கிறான் மூன்றாமடியால்.

சேல்கொள் தண்புனல்சூழ் என்றது ஸாபிப்ராயம். பிரானே! மீன்களில் படியை நீ ப்ரத்யக்ஷுகரிக்கவல்லையே; மீன் நீரைவிட்டுப் பிரிந்தால் துடிக்கும்படியை அறிவாயே. அப்படியே காண் என்படியும் என்று சொல்லுமாபோலே யிருந்தது. இவன் உம்மைப் பிரிந்து தரிக்கவல்லளாவது; அவ்வூரிலே வர்த்திக்கிவுமக்குப் போருமோ இவளுக்கு முகங்காட்டாதொழிகிறவிடம்.”

என் தீர்த்தனே என்னும்! என்னளவில் மிக்க பரிசுத்தியை யுண்டாக்கினவனே! என்கிறாள். அதாவது நீ முகம் காட்டாதொழிந்தாலும் உன்னையொழிய வேறிடம் நெஞ்சாலும் நினைக்கமாட்டாதபடி செய்திருப்பவனே’ என்றபடி திர்த்த மென்று இழிந்தாடுந் துறைக்குப் பேராதலால் நான் இழிந்தாடும் துறையாயிருப்பவனே! என்றதாகவுமாம். மகரனகரப் போலி.

என்னுடைக் கோமளக் கொழுந்து கோலமாமழைக்கண்பனிமல்கவிருக்கும். கொள் கொம்பிலே சோந்து தரிக்கவேண்டுங் கொடிபோலே உன்னோடே சேர்ந்தா லல்லது தரிக்கமாட்டாதவளான இப்பெண்பிள்ளை கண்ணுங்கண்ணீரமாயிருக்கிற படி கண்டாயே; இவ்விருப்புக்கு க்ருஷி பண்ணிண நீ பலித்தவளவிலே இதையநுப விக்கவாகிலும வரலாகாதோ? என்று கருத்து.

English Translation

My tender princess sits with her large eyes raining tears. She says, "Lord who made both pain and pleasure, loved even by the loveless!", "Lord bearing the wheel of Time, ocean-reclining Lord!", "O My Krishna, sacred pilgrimage spot in Srirangam's cool-fish waters!"

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain