nalaeram_logo.jpg
(3575)

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்துலாய் மயங்கும்கை கூப்பும்,

கட்டமே காதல் என்றுமூர்ச் சிக்கும் கடல்வண்ணா. கடியைகாண் என்னும்,

வட்டவாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்றென்றே மயங்கும்,

சிட்டனே செழுநீர்த் திருவரங் கத்தாய் இவள்திறத் தெஞ்சிந்தித் தாயே

பதவுரை

(இப்பெண்பிள்ளையானவள்)

இடக்கால் இட்டகையள் ஆய் இருக்கும்

-

(சில சமயங்களிலே) கையும் காலும் இட்டது இட்டபடியேயிராநின்றாள்;

(மற்றும் சில சமயங்களிலே)

எழுந்து உலாம்

-

எழுந்து உலாவுகின்றாள்;

மயங்கும்

-

மயங்கா நின்றாள்;

கை கூப்பும்

-

(அப்படி மயங்கின தசையிலும்) கைகூப்புதல் தவிர் கின்றிலள்;

காதல் கட்டமே என்றுடமே என்று மூர்ச்சிக்கும்

-

(பகவத் விஷயத்திலே) காதலைத் தாங்குவது வெகு கஷ்டமென்று சொல்லி மூர்ச்சை யடைகின்றாள்;

கடல்வண்ணா கடியை காண் என்னும்

-

கடல் வண்ணனே! என் விஷயத்தில் நீ கடுமை கொண்டிருக்கின்றாயே! என்கிறாள்;

வட்டம் வாய் நேமி வலம் கையா என்னும்

-

வட்டமான விளிம்பையுடைய திருவாழியை வலத்திரக்கையிலுடையவனெ! என்கிறாள்;

வந்திடாய் என்று என்றே மயங்கும்

-

வாராய் வாராய் என்று பலகாலுமழைத்தும் வரக்காணாது மயங்கு கின்றாள்;

சி;ட்டனே! – பரமபவித்திரனே!

செழு நீர் திரு அரங்கத்தாய்

-

நீர்வளம் பொருந்திய கோயிலிலே கண்வளர்ந்திரளுமவனே!

இவள் திறத்து

-

இப்பெண்பிள்ளை விஷயமாக

என்சிந்தித் தாய்

-

நீ சிந்தித்திருப்பது என்ன?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அம்புகள் செய்யும் காரியமும் குணங்கள் செய்யும் காரியமும் ஒருபடியும் பட்டிருக்கு மென்பர்கள். ஸ்ரீ ராமசரங்களானவை சிலரை மூர்ச்சிக்கப்பண்ணும்; சிலரைத் துடிக்கப்பண்ணும்; சிலரை ஓரிடத்தில் தரித்திருக்கமாட்டாதே அங்குமிங்கும் பதறியோடப் பண்ணும். அங்ஙனேயாயிற்று பகவத்குணங்களும்  படுத்துகிறபடி இட்ட கால் இட்ட கையாளாயிருக்குமென்றது ஸ்தபிபத்திருக்கும்படியைச் சொன்னவாறு. “கைகளாயிருக்கும்” என்கிற பாடத்திற்காட்டிலும் ‘கையளாயிருக்கும் என்கிற பாடம் பொருந்தும்.

எழுந்து உலாம் - ஸ்தம்பித்திருக்கிற நிலைமை நீங்கினவாறே எழுந்து உலாவுகின்றாள். உலாம் என்றது ‘உலாவும் என்றபடி. “உலாய் மயங்கும்” என்று  சில பிரதினில் பதிப்பித்திருப்பது அச்சுப்பிழையென்பர்.

மயங்கும்- உலாவி அங்குமிங்கும் பார்த்து வந்து தோன்றக்காணாமையாலே மயங்கும் படியாயிற்று. மயங்குமனவிலும் கைகூப்புகை தவிராமையாலே ‘கைகூப்பும்) உணர்த்தியின் றிக்யேயிருக்க, பூர்வவாஸநையாலே கைகூப்பும். மோஹித்தசையிலும் தவிருகிறிலள். மயங்கா நிற்கச் செய்தே உணர்த்தியுடைவரைப் போலேயாயிற்று அஞ்ஜலி பண்ணுகிறது” என்று. ஈட்டு ஸ்ரீஸூக்தியோவென்னில்; “(கைகூப்பும்) உணர்த்தியில் தொழுமவளல்லள்; மயங்கினால் தொழாதிருக்கவல்லளல்லள்.” என்றுள்து. தொழுதால் அதனை ஸாதநகோடியில் கணக்கிட்டுக் கொள்வானோ! என்கிற அச்சத்தாலே தொழுகையி;ல் கூச்சமேயாயிருக்கும் ஸம்ஸம்பிரதாய நிஷ்டர்களுக்கு.

காதல் கட்டமேயென்று மூர்ச்சிக்கும்-பகவத் விஷயத்தில் காதலைத் தாங்குவது மிகவும் கஷ்டமென்கிறாள். பசியனுக்குச் சோறு கிடையாதொழிந்தால் பசிக்கு ஆற்றமாட்டாமே பரிதபிக்குமமாபோலே ஆழ்வார் தமது காதலுக்குப் பரிதபிக்கிறார் காணும். அடியிலே மயர்ஹமதிநல மருளினன் என்று பக்தியைக் கொடுத்தருளினமைக்கு உகந்து பேசினார்; இப்போது அந்த பக்திக்குத் தக்க இரை கடைக்காமையினாலே ‘அந்தோ! கஷ்டத்தையன்றோ அவன் கொடுத்தது’ என்று வெறுத்துப் பேசுகிறார். ‘பகவத் விஷயத்தில் காதலே புருஷார்த்தம்’ என்று பலகாலும் அறுதியிடுகின்ற  ஆழ்வார், இப்போது ‘காதலுக்கு மேற்பட்ட ஆபத்து இல்லை’ என்று பேசுகிறபடி என்னே!.

இந்த கஷ்டத்துக்குப் பரிஹாரமில்லாமையாலே (மூர்ச்சிக்கும்) ஆத்மா உள்ளவரையில் இப்படி கஷ்டமே அநுபவிக்க வேண்டியன்றோ நம் கதியாயிற்று! என்று சொல்லி மோஹியா நின்றாள்.

கடல்வண்ணா! கடியை காண் என்னும்-கடலானது ஸகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே யடக்கி ஒன்றையொன்று நலியாதபடி நோக்குமாபோலே நீயும் நோக்குமவன் என்பது பற்றிப் பிரானே! உன்னைக் கடல்வண்ண னென்கிறார்கள்: அப்படி நோக்குவாயல்லையே நீ; கண்ணற்றவனாயிருக்கின்றாயே! என்கிறாள். கடியை -கடியன் என்பதன் முன்னில்: நிர்க்ருணனாயிருக்கின்றாய் என்றபடி.

வட்டவாய் நேமி வலங்கையாவென்னும்-கையுந் திருவாழியுமான அழகைக் காணவேணுமென்று ஆசைப்பட்டு அதைப் பூர்த்தியாகச் சொல்லமாட்டாதே நடுவேயிளைத்து அரைகுறையான சொல்லோடே முடித்து, வந்திடாயென்றென்றே மயங்குகின்றாள். ஒருகால் ‘வந்திடாய்’ என்று சொல்லி ஆறியிருக்கமாட்டாமையாலே, விடாய்த்தவன் தாஹம் தீருமளவும் ‘தண்ணீர் தண்ணீர்’ என்றே வாய் வெருவுமாபோலே ‘வந்திடாய் வந்திடாய் என்றே ஊடுருவச் சொல்லுகின்றாள்; அங்ஙனம் சொல்லிக்கொண்டே மயங்குகின்றாள்; மயங்கினாலும் வாஸநையாலே வாய்ச்சொல் அநுவர்த்தியாநிற்கும்.

சிட்டனே-சிஷ்டனென்று ஆசாரசீலனுக்குப் பெயர். இங்கு, சிஷ்ட பாவதை பண்ணியிருப்பவனே! என்று விபாறித லக்ஷ்ணையாகப் பொருள் கொள்ளவேணும். உம்மைப்போலே நாலு சிஷ்டர்கள் இருந்தால் பெண்கள் நன்றாகக் குடிவாழலாம்! என்று பரிஹஸித்துச் சொல்லுகிறபடி ‘ப்ரஹ்மஹத்யைகளைப் பண்ணிப் பூணுலீலை வெளுக்கவிட்டுக் கையிலே பவித்ரத்தையுமிட்டு ஒத்துச் சொல்லித் திரிவாரைப் போலே யிருந்ததீ! உம்முடையபடி.” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.

செழுநீர்த்திரவரங்கத்தாய்!-நீர்வாய்ப்பும் நிழல்வாய்ப்புங்கண்டு அழகிதாகக் கண்ணுறங்கவோ நீர் இங்கே வந்து சாய்ந்தது? இவள் திறத்திலே நீர் செய்தருளப் பார்த்தது என்கொல்?

English Translation

She remains as she is left, she rises, falls and folds her hands: "Woe, this love!", she says, then swoons; "Ocean Lord, invisible!", then "Orbed discus Lord!", she says, "Please come!", on and on, then faints, O Perfect Ranga, Lord reclining on bright waters, what do you intend for her?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain