nalaeram_logo.jpg
(3573)

எஞ்செய்கின் றாயென் தாமரைக் கண்ணா என்னும்கண் ணீர்மல்க இருக்கும்,

எஞ்செய்கே னெறிநீர்த் திருவரங் கத்தாய்? என்னும்வெவ் வுயிர்த்துயிர்த் துருகும்

முன்செய்த வினையே. முகப்படாய் என்னும் முகில்வண்ணா. தகுவதோ? என்னும்,

முஞ்செய்திவ் வுலகம் உண்டுமிழந் தளந்தாய் எங்கொலோ முடிகின்ற திவட்கே?

பதவுரை

(இப் பெண்பிள்ளையானவள்)

என் தாமரை கண்ணா

-

என்னை யீடுபடுத்திக் கொண்ட செந்தாமரைக் கண்ணனே!

என் செய்கின்றாய் என்னும்

-

என்னை என் செய்வதாக விருக்கிறாய்? என்று சொல்லுகின்றாய்;

கண் நீர் மல்க இருக்கும்

-

கண்ணீர் ததும்பநின்று ஸ்தப்தையாயிருக்கின்றாள்;

எறி நீர் திரு அரங்கத்தாய்

-

அலையெறிகின்ற திருக்காவேரி சூழந்த திருவரங்கந்தில் துயில்பவனே!

என் செய்கேன் என்னும்

-

(உன்னைப் பெறுதற்கு) என்ன செய்வேன்? என்கிறாள்;

வெவ்வு யிர்த்து உயிர்த்து

-

வெப்பமாகப் பலகாலும் பெரு மூச்சு விட்டு

உருகும்

-

கரைகின்றாள்;

முன் செய்த வினையே

-

முற்பிறவிகளிலே நான் பண்ணி வைத்த கருமமே!

முகப்படாய் என்னும்

-

என் கண்முன்னே வந்து நில் பார்ப்போம் என்கிறாள்;

முகில் வண்ணா

-

காளமேகவண்ணனான எம்பெருமானே!

இது தகவோ என்னும்

-

இதுதானோ உன்னுடைய க்ருபைக்கு லக்ஷ்ணம்! என்கிறாள்;

இவ்உலகம்

-

இந்த ப்ரபஞ்சங்களை யெல்லாம்

முன் செய்து

-

முற்காலத்தில் ஸ்ருஷ்டித்து

உண்டு உமிழ்ந்து

-

(காலவிசேஷங்களிலே) உண்பதும் உமிழ்வதும் செய்து

அளந்தாய்

-

அளப்பதும் செய்து பல முகமாக ரக்ஷித்தருளும் பெருமானே!

இவட்கு

-

இங்ஙனே துடிக்கிற எபெண் பிள்ளைக்கு

முடிகின்றது என் கொலோ

-

இந்தப் பரிதாபமெல்லாம்) என்னாய் முடியப்போகிறதோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (என் செய்கின்றாய்.) கீழ்ப்பாட்டில் “இவள் திறத்து என் செய்கின்றாயே” என்று தாய்பாசுரமாகச் சென்றது; அதுதானே இப்பொழுது தலைவி பாசுரமாகச் செல்லுகிறது. “என் தாமரைக்கண்ணா! என் செய்கின்றாய்” என்று கேட்கிறாளாயிற்று பராங்குச நாயகி. முந்துற முன்னம் என்னைத் தோற்பித்து ஈடுபடுத்திக் கொண்ட திருக்கண்கள் இப்போது எங்கே போயின? மீண்டும் அத்திருக்கண்களாலே குளிரநோக்க நினைத்திருக்கிறயோ? அன்றி நெறிகாட்டி நீக்கப் பார்த்திருக்கிறயோ வென்று கேட்கின்றாள்.

கண்ணீர் மல்கவிருக்கும் எங்கும் பக்கநோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணனே என்னும்படி பிராட்டிமார் திருமுலைத்தடத்தாலே நெருக்கியணைத்தாலும் புரிந்து பாராதே ஏகாக்ரமாக அன்று கடாக்ஷித்தருளின திருக்கண்கள் இன்று எங்கேபோயினவோவென்று உள்குழைந்துருகிக் கண்ணீர் நிரம்பப்பெற்றாள்.

எறிநீர்த் திருவரங்கத்தாய் என்செய்கேன் என்னும்-என்னுடைய தாபம் தீரும்வழி எனக்கொன்றும் தெரியவில்லையே; இன்னது செய்வதென்று தோன்றவில்லையே; பொன்னி சூழரங்கமேய பூவைவண்ணா! நான் என்ன செய்தால் என் தாபமாறும்? நீயே சொல்லப் என்கிறாள். இங்கே திருவரங்கத்திற்கு ‘எறிநீர்’ என்று விசேஷணமிட்டிருந்தலால் ‘என்னைக் கொண்டுசென்று திருக்காவேரியிலே போடவல்லார் ஆரேனுமுண்டோ!’ என்று அலைபாய்வதாகத் கருத்துத் தோன்றும். திருக்காவேரியிலே கொண்டுவந்து போடுவானேன்? தம் கண்ணெதிரே தாமிரபர்ணி இல்லையோ? அதில் விழலாகாதோவென்று சிலர் கேட்கக்கூடுமே; அதற்கு நம்பிள்ளை யருளிச் செய்கிறார்-“திருப்பொருநலில் நீர், பிரிந்தார்க்கு நிலாப்போலே உபதப்தமாயிரா நின்றதுபோலே.” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. தம்முடைய  தாபம் தாமிரபர்ணயிலும் எறிப்பாய்ந்து அதிலே அடிவைக்கவும் அணுகவும் போகாமையாலே திருக்காவேரியிலே திருவுள்ளம் சென்றதென்கை.

வெவ்வுயிர்த்துயிர்த்து உருகும் - பிரிந்தவர்கள் பூவும் பல்லமுமான செடிகொடி மரங்களை அருகே கண்டால் ஆறியிருக்க மாட்டார்களே; தஹந்தீவமிவ நிச்ச்வாஸை: வ்ருகூஷாந் பல்லவதாரிகை: என்று பிராட்டியானவள் பல்லவந்திகழ் பூஞ்செடிகளைப் பஸீருழுச்சசெறிந்து அழிக்க நினைத்தாப் போலே இப்பாராங்குச நாயகியும் நீள்பொழில்குருகூரை உஷ்ணோஷ்ணமான பெருமூச்செறிதலாலே பங்கம் செய்யப்பார்த்தாள் போலும், உருகும் என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;- “உருகுகிறபடியே நிற்குமத்தனை; இனி நெடுமுச்செறிகைக்கு தர்மியுமில்லையோ வென்னும்படி யுருகும்; வெவ்விடதாகப் பலகால் நெடுமூச்செறிந்து அவ்வுஷ்ணத்தாலே உருகாநிற்கும்.”

முன்செய்தவினையே முகப்டாயென்னும்-எம்பெருமான் என்னை இப்படி உபேக்ஷிக்கும்படி நான் என்ன பாவம் பண்ணிவிட்டேன்? அப்படி நான்செய்த பாவம் ஏதேனுமுண்டாகில் அது என்னெதிரே வந்து நிற்கட்டுமே என்கிறாள். நாம் முன்செய்த முழுவினையால் இழக்கிறோமேயல்லது அவன்மேலே பழிசொல்லிப் பயனென்? என்று திருவுள்ளம் போலும். மமைவ  துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந ஸம்சய: என்று பிராட்டி தான் செய்த பாபத்தின் பலனைத் தான் அநுபவிப்பதாகச் சொன்னாளன்றோ.

அப்படி நான் பாபம் செய்திருந்தால் தானென்ன? பாபமென்று ஒரு பெருமூட்டை ஏதேனுமுண்டோ? உன் திருவுள்ளத்தில் உதிக்கின்ற நிக்ரஹ ஸங்கல்பம் குலையாதோ? உன் இரக்கம் எங்கே போயிற்று? என்கிறாளாயிற்று முகில்வண்ணாதகவு இதோ’ என்னும. நீ முகில்வண்ணனல்லையோ? மேகத்திற்குண்டான தன்மையெல்லாம் உனக்குமுண்டே; பெய்ய நினைத்த இடமளவும் சென்று பெய்யமதன்றோ மேகம்; அது கைம்மாறு கருதுவது முண்டோ? புண்ய பாபங்களைப் பார்த்துப் பின் வாங்குவது தானுமுண்டோ? என்கிறாள். ‘தகவு இதோ’ ‘தகுவதோ’ என்பன பாடபேதங்கள்.

இவட்கு முடிகின்றது என்கொலோ? -இவள் விஷயத்தில் என்ன செய்வதாகத் திருவுள்ளத்தில் முடித்திருக்கிறீர்? இவளுடைய நிலைமை என்னாய் முடியுமோ? என்றுமாம்.

English Translation

"What are you doing to me, my lotus-Lord?", she asks with tears in her eyes, then, "What shall I do, O Ranga?", she weeps with hot and heavy sighs. "Oh, My Karmas!", she laments, "Come, O Dark Lord, is this proper?" you made the Earth, swallowed it, and brought to out, then measured it.  How is it going to end for her?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain