nalaeram_logo.jpg
(2543)

உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்

எண்ணாய் மிளிரும் இயல்பின வாம்எரி நீர்வளிவான்

மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்

கண்ணாய் அருவினை யேன்உயி ராயின காவிகளே.

 

பதவுரை

எரி

-

அக்நியும்

நீர்

-

ஜலமும்

வளி

-

வாயுவும்

வான்

-

ஆகாசமும்

மண்

-

பூமியும்

ஆகிய

-

என்னும் பஞ்சபூதங்களின் வடிவமான

எம்பெமான் தனது எம்பெருமானுடைய

காலிகள்

-

செங்கழுநீர்ப்பூக்காளனவை

உண்ணாது

-

உண்ணாமலும்

உறங்காது

-

தூங்காமலும்

உணர்வு உறும்

-

(எப்பொழுதும் த்யாகரூபமான) ஞானத்திற் பொருந்தின

வைகுந்தம் அன்னான்

-

ஸ்ரீவைகுண்டத்தை யொத்து எப்பொழுதும் அநபவிக்கத் தக்கவளான தலைமகளினுடைய

கண் ஆய்

-

கண்களென்று பேராய்

அரு வினையேன் உயிர் ஆயின

-

தீர முடியாத தீவினைகளையுடைய எனக்கு உயிர்நிலையான

எத்தனை யோகியர்க்கும்

-

மிக்க யோகநிலையையுடைய முனிவர்க ளெல்லோர்க்கும்

எண் ஆய்

-

(அந்த யோகத்தை விட்டு எப்பொழுதும்) நினைக்கத்தக்கவையாய்

மிளிரும்

-

பிறழ்ந்து தோன்றுகிற

இயல்வின் ஆம்

-

தன்மையையுடையவையாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ் “புலக்குண்டலப் புண்டரீகத்த” என்ற பாட்டுப் போலவே இப்பாட்டும் - தலைவன் பாங்கனுக்குக் கழற்றெதிர்மறுதல். இத்துறையின் விரிவு. அப்பாட்டினுரையில் காணத்தக்கது. கண்ணால் காணப்பட்ட நாயகியினுடைய கண்களினழகு இவ்வுலகப் பற்றை நீத்து ஊணுமுறக்கமுமற்று போக நிலையிற் பயின்று அதில் தேர்ச்சிபெற்ற மஹா யோகிகளையும் வசப்படுத்திக்கொள்ள வல்லது என்றதனால், தான் அக்கண்ணழகில் ஈடுபட்டதைக் குறித்து நீ என்னைப் பழிக்க இடமில்லையென்று பாங்கனை நோக்கி நாயகன் கூறினானாயிற்று. வாதிகேணரி அழகிய மணவாளச் சீயர் வேறு வகையாகக் கொள்வர்;- தலைமகளை இயற்கையிற் கலந்து பிரிந்த தலைவன் தன் உறாவுதல் கண்டு வினாவின் பாங்களைக் குறித்து உற்றதுரைத்த பாசுரம்’ என்றார். கழற்றெதிர்மறுத்தலாகவே நம்பிள்ளை திருவுள்ளம்.

“எரி நீர் வளி வான் மண்” என்றவிதில் பஞ்ச பூதங்களின் அடைவு (வரிசைக் கிரமம்) இல்லாமை செய்யுளானமைபற்றி. எம்பெருமான் தனது வைகுந்த மன்னாள் ஊகண்ணாய் = பரமபதம்போல் பேரின்பமே வடிவெடுத்தவள் போன்றுள்ள அத் தலைவியின் கண் என்று, பேர் மாத்திரமாய் என்னுடைய உயிர் நிலையான செங்கழு நீர் மலர்களாகிய அவை- யோகம் கைவந்திருக்கப் பெற்ற பரமயோகிகட்கும் இடைவிடாது சிந்தனைக்குரியன; அதாவது- அவர்கள் இக்கண்ணழகைக் காணப்பெறில், தாங்கள் சிந்தனை செய்து கொண்டிருக்கும் பரம்பொருளை அப்பால்தள்ளி அந்த ஸ்தானத்தில் இக்கண்களையே வைத்து சிந்தனை செய்வர்களென்றவாறு.

அருவினையேன் = அவளை எப்பொழுதுங் கூடியிருக்கப் பெறாமல் பிரியும்படி நேர்ந்த மஹாபாபத்தைப் பண்ணினேன் யானென்று வெறுத்துக் கொள்ளுகிறபடி. ‘உயிராயின’ என்றதனால், அக்கண்கள் மிக்க அன்புக்கிடமானவை என்பதும் விட்டுப்பிரிந்து தரிக்க வொண்ணாதவை என்பதும் தோன்றும்.

ஆழ்வாருடைய ஞானததின் சிறப்பைப் பாகவதர் அன்பர்க்குக் கூறுதல் இதற்கு உள்ளுறைபொருள். பஞ்சமஹா பூதங்களுக்கும் அந்தராத்மாவான எம்பெருமானுடைய பரமபதம்போல அழிவற்றவரும் எப்பொழுதும் அநுபவிக்கத்தக்கவருமான ஆழ்வாருடைய ஞானமென்று பேராய்ப் பெறுதற்கரிய நல்வினைவுடைய எமக்கு உயிர்போல அன்புக்கிடமான மெல்லிய மலர்கள் எமக்கே யன்றி உண்ணுதல் உறங்குதல் இல்லாமல் எப்பொழுதும் நிரந்தராநுபவஞ் செய்கிற நித்யயோகத்தையுடைய நிதபஸூகளுக்கும் எப்பொழுதும் அநுபவிக்கத்தக்கவையாய் விளங்கித் தோன்றும் இயல்புடையனவாம் எனப்பொருள் காண்க. யாவரும் மகிழ்ந்து சிரமேற்கொண்டு கொண்டாடத் தகுந்த தன்மைபற்றி ஞானவகைகளைக் காவிமலர்களாகச் சொல்லிற்று. ***- இப்பாட்டுக்குத் துறை கால மயக்கு. கீழே “ஞாலம் பனிப்ப” என்ற ஏழாம்பாட்டுக்கும் “கடல் கொண்டெழுந்தது வானம்” என்ற பதினெட்டாம் பாட்டுக்கும் போலே, மேல் “மலர்ந்தே யொழிந்தில” என்ற அறுபத்தெட்டாம் பாட்டுக்கும் துறை இதுவே. இப்பிரபந்தத்தில் காலமயக்கு அடுத்தடுத்து வருவதற்குக் காரணம்- நாயகி பின்வரஹகாலம் நீட்டித்தலென்றும், “இந்நின்ற நீர்மையினிமாமுறாமை” என்று தம் வேண்டுகோளை விண்ணப்பஞ்செய்த பொழுதே எம்பெருமானைச் சேரவேண்டியிருக்க அப்பேறு கிடையாமையாலுண்டாய ஆழ்வாரது ஆற்றாமையின் மிகுதியென்றுங் கூறுவர். கார்காலத்திலே மீண்டு வருகிறேனென்று சொல்லிப்போன நாயகன் வாராமல் விளம்பிக்க; அக்காலம் வந்தவாறே நாயகி கலக்கமடைய ‘இது அவன் சொன்ன காலமன்று’ என்று தோழி காலத்தை மயக்கியுரைத்து அவளது கலக்கத்தைத் தீர்க்கிறாள். “காரெனக் கலஞ்கு மேரெழிற்கண்ணிக்கு, இன்துணைத்தோழி அன்றென்று மறுத்தது” என்று திருக்கோவையாருரையுங் காண்க. இது ‘பருவமன்றென்று கூறல்’ என்றும் வழங்கும்.

ஸ்ரீதேவி பூதேவி என்னும் தேவிமாரிருவருள் ஸ்ரீதேவியின் ஜன்மபூமியான திருப்பாற்கடலினிடையில் திருமால்பள்ளிகொண்டருளுதலால் அக்கடல் தன் மகளான ஸ்ரீதேவியைத் தன் ஓசையாகிய இனிய குரலால் அன்போடு அழைத்து அலைகளாகிய கைகளை முன் நீட்டி அவற்றால் அவளையெடுத்துக் கொண்டுபோய் எம்பெருமானிடம் சேர்க்க, அத்திருமகள் அந்த அலைகளாகிய படிகளின் மூலமாக எம்பெருமானது உயர்ந்த திருவனந்தாழ்வானாகிய படுக்கையின் மீது ஏறி அப்பெருமானோடு கூடிக் குலாவி ஆநந்தப்பட்டுக் கொண்டிருக்க, இப்படிப்பட்ட பாக்கியம் பெறாத பூதேவியானவள் வானமாகிய பரந்த தனியிடத்திலே மேக கர்ஜனை யென்னும் வியாஜத்தால் வாய்விட்டுக் கூவியழுது மிக்க கண்ணீரை இடைவிடாது பெருக்க, அந்நீர் அவளது கொங்கைகளாகிய மலைகளின் மேல் ஆற்று வெள்ளமாகப் பெருகுகின்றமை பாராய என்று வருணித்து, “தோழி! இது நீ நினைக்கிற கார்காலமன்று’ என்று தலைவியைத் தேற்றினான். முறைப்படி (பக்ஷபாதமின்ற) ஒரு மைமாகக் கொண்டாடத்தக்க பத்னிகள் இருவருள் ஒருத்தியைப் பெருமான் காதலித்துக் கைக்கொண்டு மற்றொருத்தியை உபேக்ஷித்த கொடுந்தன்மை அவளது இக்கண்ணீரால் உலகில் வெளியாகுமென்பது தோன்ற ‘திருமால் கொடியானென்று வளர்கின்றது’ எனப்பட்டது. மால்- என்ற சொல் வேட்கைமயக்கமென்று பொருள்படுதலால் இங்கே ‘திருமால்’ என்றது -திருமகளிடங் காதற்பித்துக் கொண்டவனென்றவாறு; ( திருநெடுந்தாண்டகம் 18)

“பித்தர் பனிமலர்மேற் பாவைக்கு” என்றதுங் காண்க. நாயகன் தன்னை உபேக்ஷித்தர்னென்று வருந்துகிற நாயகிக்குத் தோழி இது கூறியதனால் ‘பல பெண்டுகளுக்குக் காண வாய்ப்பிருப்பார்க்கு இது இயல்புகாண்; ஸ்ரீதேவியைப் பாராட்டிய நிலையில் பூதேவி படும்பாட்டைப் பாராய்’ என்று ஓரியற்கையைத் தெரிவித்து ஆற்றுவித்தவாறுமாம். இங்ஙனம் ஒன்று உலகத்திலுண்டோ?’ என்று ஆராய்ச்சி பிறந்து அதிற்கருத்தைச் செலுத்தி ஆலோசித்து முடிவு செய்யுமளவில் நாயகன் வந்திடுவானென்று கருதித் தோழி இது கூறினாள் போலும்.

திருப்பாற்கடலைக் கருங்கடல் என்றது என்னோ! எனின்; உயர்ந்தசாதி நீல ரத்னத்தைப் பாலினுள்ளே யிட்டால் அதனொளியால் அப்பால் முழுவதும் தன் இயற்கையான வெண்ணிறம் மாறி அம் மணியின் நிறமாகத் தோன்றுதல் போக, இயற்கையின் வெளுத்த நிறத்தை தான திருப்பாற்கடல் தன்னிடையிற் சயனித்துள்ள திருமாலின் திருமேனியொளியாற் கரியதாதல் பற்றிக் கருங்கடலெனப்பட்டது. இனி, கருங்கடலென்பதற்கு- பெரிய கடல் என்றும் பொருள் கொள்ளலாம்; கருமை - பெருமை.

முதலடியினிறுதியில், போய்- போக என்றபடி: எச்சத்திரிபு. ‘கடலின் அலைகளாகிய கைகளைப் பற்றிக்கொண்டு சென்று’ என்று பொருள் கூறும் பக்ஷத்தின் எச்சத்திரிபு அன்று. மழைக் கண் மடந்தை = தன் கண்ணழகாலே திருமக்களானவள் திருமாலையீடு படுத்தனமை தோன்றும். ‘விண்வாய்’ என்ற  விடத்து, வாய் எழலுனுருபி. அன்றியே, அலாவாய் என்பதற்கு - (செவ்வாம்பல் மலர்போன்ற வாயையுடைய (ஸ்ரீமஹாலக்ஷ்மி) என்றும் ‘விணவாய்’ என்பதற்கு- வானமாகிய வாயினால் என்றும் உரைக்கலாம்.

இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப் பொருளாவது- ஜீவகோடிகளில் ஸ்ரீதேவி பூதேவி தொடக்கமான அருகிலுள்ளார் எம்பெருமானை நித்யாநுபவம் பண்ணப்பெற்று வாழ,  யான் இங்ஙனம் அவனைச் சேராது வருந்துவதே! என்று ஆற்றாமை விஞ்சிய ஆழ்வார்க்கு அன்பர் ஒரு த்ருஷ்டாந்த மூலமாக எம்பெருமானுடைய ஸ்வாதந்திரியத்தைத் தெரிவித்து ஆற்றுதலாம். எம்பெருமானை ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாத தேவிமாரென்று மையமாகக் கொல்லப்படுகிற ஸ்ரீதேவி பூதேவிகளுள் ஒருத்தியைப் பிரித்து ஒருத்தியைத் தழுவும்படியுமுள்ளது ஒரு காலத்தி லெம்பெருமானுடைய ஸ்வாதந்திரியம்; இப்படியிருக்க, நீர் அவனது கால விளம்பரத்துக்கு ஆறியிருந்தலே தகுதியென்று தேற்றினரென்க. இப்பாட்டின் பூமிப்பிராட்டி விஷயமாகக் குறித்த வர்ணனை- எம்பெருமானது ஸ்வாதந்திரியத்தை எடுத்துக் காட்டுதற்காயது.

***- இப்பாட்டுக்குத் துறை- வெறிவிலக்கு; கீழ் “சின்மொழி கோயோ” என்ற இருபதாம் பாட்டிற்போல பராங்குச நாயகியின் மோஹத்துக்கு நிதான மறியாதே க்ஷுத்ர தேவதையின் ஆவேசத்தாலே வந்ததாகக் கருதி உற்றாருறவினர் கலங்கி வழியல்லாவழியே பிழிந்து பரிஹாரங்கள் செய்யப்பார்க்க, இவளது பிரகிருதியை அறிந்திருப்பானொரு மூதறிவாட்டி ‘நீங்கள் செய்கிற விது தகுதியன்று; இவளுடைய இந்நோய் தேவதாந்தரத்தின் ஆவேசத்தால் வந்ததன்று; தேவாதி தேவனான எம்பெருமானிடத்து ஈடுபட்டதனாலுண்டான சிறந்த நல்ல நோய் இது; இவள் பிழைக்கவேணுமாகில் நான் சொல்லுகிறபடியே பரிஹாரஞ் செய்யப்பாருங்கோள்; திவ்யமானதிருத்துழாய் மாலையையினும் அத்துழாயின் ஓரிலையையானினும் அதன் கிளையையாயினு அதன் வேரையாயினும் அதற்கு இருப்பிடமாய் நின்ற மண்ணையாயினும் கொண்டு வீசுங்கோள்; அதன் காற்று இவள்மேல் பட்ட மாத்திரத்திலே இவள் பிழைத்திடுவள்’ என்கிறாள் என்க.

இனி, இதனைக் கட்டுவிச்சி(குறிசொல்லும் குறத்தி) கூறல் என்பதுமுண்டு; “தலைவியாற்றாமையால் வந்த நோவுக்குப் பரிஹாரம் ஏதோவென்று வினவின செவிலி முதலானார்க்குக் கட்டுவிச்சி நோய் நாடி பரிஹாரஞ் சொன்ன பாசுரம்” என்பர் அழகிய மணவாள சீயர். களவொழுக்கத்தால் நாயகனோடே கலந்து பிரிந்து ஆற்றாது மெலிந்து வருந்திய நாயகியைக் கண்ட செவிலித் தாய் இவள் நோய்க்குக் காரணம் இன்னதென்று அறியாமல், நிமித்தங்கண்டு கூறவல்ல கட்டுவச்சியையழைத்து வினவுவதாக இருக்கையில்.

“கொங்குங் குடந்தையும் கோட்டியூரும் பேரும்

எங்குந் திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்ததூஉ!!!

கண்டியூ ரரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லையென்று

மண்டியே திரிவேனை யாரிங்கழைத்ததூஉ!!!

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர்வேங்கடமும்

மண்ணகரம் மாமாடவேளுக்கை தென்குடந்தை

எங்குத் திரிந்து இன்றே மீன்வேளை யாரிங்கழைத்ததூஉ.!!!

நாகத்தனைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள்

நாகத்தணை யரங்கம் பேரன்பில் நாவாயும்

எங்குத் திரிந்து இன்றே மீள்வேலை யாரிங்கழைத்ததூஊ!!!

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவு மஃகாத

பூக்கிடங்கின் நின் கோவல் பொன்னகரும் பூதூரும்

எங்குந் திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்ததூஉ.!!!

என்று தெருவேறக் கூறிக்கொண்டு கட்டுவிச்சி வந்து சேர்ந்த குறியிலக்கணப்படி சிறு முறத்திலே சில நெற்குறிகண்டு அதனால் உண்மையையுணர்ந்து கூறுகிறாளென்க. இப்பாட்டின் முன்னடிகளால் நோய்க் காரணமும் நோயும், பின்னடிகளால் அது தணிக்கும் உபாயமும் கூறியவாறு. எம்பெருமானோடு ஸாக்ஷாத்தாகவோ பரம்பரையாகவோ ஸம்பந்தம் பெற்று பொருள் யாதாயினும் இந்நோய்க்குப் பரிஹாரமாகுமென்றுணர்த்தப்பட்டது.

க்ஷுத்ரமான தேவதாந்தரங்களின் ஆவேசத்தாற் சீர்குலைந்து அல்லல்படும் தீய நோய் அன்று என்பதைத் தெரிவிக்க ‘வானோர் தலைமகனாஞ் சீராயின் தெய்வ நன்னோயினது’ என்றது. ‘தெய்வநன்னோய்’ என்றதில் விக்ஷேண ஸ்வாரஸ்யத்தால் ஈப்படிப்பட்ட நோய் இவ்வுலகில் பெறுதற்கு அரியது என்றும், நோன்பு நோற்றுப் பெறவேண்டிய நோய் இது என்றும் இந்நோய் பேரின்ப முடிவுடையது என்றும் தெரிவித்தவாறு.

தாம் நினைத்தபடி எம்பெருமானோடு கலந்து பரிமாறப் பெறாத வருந்துகிற ஆழ்வாரது துயரைக்கண்ட ஞானிகள் இதற்குப் பரிஹாரம் ஏதோ வென்று கலங்கினவளவிலே, காரணகாரிய வுண்மை யுணர்ந்த நிருபகர்  ‘பரிஹாரஞ் செய்தலே தகுதி’ என்று கூறுதல் இப்பாட்டுக்கு உள்ளுறை பொருள். எம்பெருமானுக்கே உரியதும் அவனை யநுபவித்ததற்குக் கருவியானதுமான பக்தியே முலையாகக் கொள்ளப்படுதலால் ‘வாராயின முலையாள்- பக்குவமாய் முதிர்ந்த பக்தியையுடைய ஆழ்வாரென்றபடி.

இப்பாசுரம் வண்டு விடு தூது பிரிந்து போன நாயகன் வந்திடுவனென்று அறியிருதாக வொண்ணாதே அவன் வரவுக்கு விரைந்து ஆள்விடும்படியாயிற்று ஆற்றாமைமிகுதி; ஆகவே ஏழைகளைத் தூதாக நாயகனான ஸர்வேச்வரன் பக்கலிலே போகவிடுகிற நாயகியின் பாரையாய்ச் செல்லுகிறது. எம்பெருமானது திருவடித்தாமரைகளின் கீழ் எம்மை அடைவிக்கவல்ல வண்டுகளே! நீங்களோ விரைந்து செல்லத்தக்க கருவியையுடையவர்களாயிருகின்றீர். நானோ அப்படிப்பட்ட வலிமையில்லாத மெல்லியலாய் இட்டகாலிட்ட நையனாயிருக்கும் தன்மையையுடையேன்; எம் காதலர் வீற்றிருக்கிற பரமபதமும் உங்களுக்கு எட்டிப் பிடிக்கலாம்படி யிராநின்றது; எனக்கோ அது சென்று சேர்தற்கு அரிதாயிருக்கின்றது. நீங்கள் தூது செல்லுதற்குப் புறப்படும்பொழுது, எனக்காக நீங்கள் அவரிடம் சொல்ல நினைத்திருக்கும் வார்த்தைகளை என் பக்கலிற் சொல்லிக் காட்டியும்  போகவேணும் என்றால். அங்குச் சொல்ல வேண்டிய வார்த்தைகளை இங்குத் தன்பக்கல் சொல்லி காட்டுமாறு வேண்டியதனால், நீங்கள் அதற்குப் பேசும் பேச்சுக்களை இங்கு என்முன் சொன்னால் அப்பேச்சுக்களில்  ஏதேனுங் குறைவு உண்டாகில் அதனை யான் திருத்தித் தருதலுமின்றி உங்கள் பேச்சின் சாதுர்யத்தினால் அவர் விரைவில் வந்திடுவரென்னுந் துணிகவ யடைந்து அதுவரை ஆறியிருப்பேனென்பதை வெளியிட்டாளாயிற்று.

‘பறந்தீர்’ என்னும் வினைமுற்ற எதிர்கால முணைர்ந்தவல்லதாயினும் இங்கு எதிர்கால முணர்த்தாது தன்மையுணர்த்திற்கு. போவது = ஒருவகை வியங்கோள்.

‘தேவாதி தேவனான எம்பெருமான் பக்கலிலே வெகு அற்பங்களான நாங்கள் சென்று கிட்டுதல் அருமையன்றோ’ என்று வண்டுகள் பின்வாங்காமைக்காக ‘நெய்தொடுவுண்டேசும்படி யன்ன செய்யும்’ என்று அவனது ஸெளலப்பத்தை முற்பட எடுத்துக்காட்டுகின்றாள். நெய்யைச்சொன்னது- மற்றுமுள்ள பால் தயிர் வெண்ணெய்  விழுங்கி வெறுக்கலததை வெற்பிடையிட்டதனோசை கேட்கும்’ இல்லம் புகுந்தென் மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு கொல்லையில் நின்றுங் கொணர்ந்து விற்ற அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து, நல்லன நாவற்பழங்கள் கொண்டு நானல்லேனென்று சிரிக்கின்றானே’ இத்யாதிகளிற் சொல்லப்பட்ட ஏச்சுக்குரிய காரியங்களை உட்கொண்டு.

‘எம்மைச் சேர்விக்கும் வடுகளே’ என்றது- எம்மைச் சேர்விக்கவல்ல; சக்தியுள்ளது உங்களுக்கேயென்று புகழ்ந்துரைத்தவாறு.

ஆழ்வார் தம்முடைய ஆற்றாமையை ஆசார்யர் மூலமாக எம்பெருமானுக்குத் தெரிவித்துத் தமது துயரம் தணியக் கருதி அவர்களை புருஷகாரமாக வேண்டுதல் இப்பாட்டின் ஸவாபதேசார்த்தமாகும். (விசுஞ்சிறகால் பறக்கதிர்) “உபாப்பா மேவ பக்ஷாப்பாம் யதா கேபக்ஷிணாம் கதி:- ததைவஜ்ஞாந கர்மப்பாம்” என்று ஞானனுட்டான மிரண்டும் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன; பறவைகளின் உயர்கதிக்குச் சிறகுகள் இன்றியமையாதவை போல வகை மலர்களிலுஞ் சென்று அவற்றின் ஸாரமான தேனை அம்மலர்கள் கெடாதபடி கவர்ந்து உண்ணுந்த தன்மையனவான வண்டுகளை, பலவகை நூல்களிலும் அவகாஹித்து அவற்றின் ஸாரமான தத்துவப்பொருளை அந்நூல்கள் கலிவுபடாதபடி க்ரஹித்து அநுபவிக்குந் தன்மையரான ஆசார்யரானகச் சொல்லத் தட்டில்லை.

புருஷகார பூதராயிருந்து எம்பெருமான் பக்கலிலே என்னைச் சேர்ப்பிக்கும் சக்தி வாய்ந்த ஆசார்யார்களே! நீங்கள் ஞானலுட்டானங்களால் குறைபற்றிருக்கின்றீர்கள். (விண்ணாடும் நுங்கட்க்கு எளிது) (உபதேசரத்தினமாலை) “ஞானமனுட்டான மிவை நன்றாகவேயுடையனான குருவையடைந்ததால்- மாநிலத்தீர்,தேனார்கமலத் திருமாமகள் கொழுநன், தானே வைகுந்தந்தரும்” என்று ஆராயப்பட்ட ஆசார்யனை யடிபணிந்த சிஷ்யனுக்கும் பரமபதம் எளிதாகும்போது ஆசராயனுக்குச் சொல்லவேணுமோ? அப்பரமபதமும் உங்களுக்குக் கைவசமாகவுள்ளதென்கை. பேசும்படி அன்ன பேசியும் போவது) அப்படிப்பட்ட நீங்கள் எனக்காக அப்பெருமானிடஞ் சென்று விண்ணப்பஞ் செய்யும வார்த்தைகளை இப்பொழுது எனக்கு சொல்லிப் போகவேணும்; என்றது. அவற்றைக் கேட்டாகிலும் அடியேன் ஆறி யிருப்பேன் என்றவாறு. இவ்வாழ்வார் “மத்துறுகடை வெண்ணெய்களவினி லூலிமையாப்புண்டு. எத்திறமுரலினோடிணைந்திருந்து ஏங்கிய எளிவே!” என்று கண்ணனது களவில் ஈடுபட்டு ஆறுமாஸகாலம் மோஹித்துக் கிடக்குந்தன்மையாகதலால் இங்கும் நெய்கொடுவுண்டேசும்படி அன்ன செய்யுமெம்மீசர்” என்று அந்த ஸொலப்ப குணத்தையே பாராட்டிக் கூறினார். அடியாருடைய குற்றங்களைக் கணிசியாமையே எம்பெருமானது மலரடிக்கு மாசில்லாமையாம்

இப்பாட்டுக்குத் துறை நலம்பாராட்டு என்பதாம். நாயகனானவன் நாயகியினித்தில் தான் வைத்துள்ள காதலை ஒருவாறு வெளியிட வேண்டி அவளது சிறப்பை அந்நாயபதேசமாகப் புகழ்ந்துரைத்தல் இது. ஒரு பூந்தோட்டத்தில் ஒருபுறமாய் நாயகி நிற்கையில் அவளை அணுகிச் செல்லுதற்குக் கூசாநின்ற நாயகன் ‘இவள் திறத்தில் நமக்குள்ள காதலை ஒருவாறு இவளுக்கு நாம் உணர்த்துவோம்; பிறகு என்னாகிறதோ பார்ப்போம்!’ என்றெண்ணி அங்குப் பலவகைப் பூக்ககளிலும் வாய் வைத்துக் களித்துத் திரிகின்ற வண்டுகளை விளித்து ‘நீங்கள் எவவிடத்துஞ்சென்று நீர்ப்பூ நிலப்பூ கோட்டுப்பூ என்றிப்படி, வெவ்வேறு வகைப்பட்ட பூக்களைக் கண்டறிவீர்களன்றோ? அவற்றில் எவையேனும் இளது கூந்தலின் இயற்கை நறுமணத்தை யொத்த மணமுடையவை உண்டோ? சொல்லுங்கள்’ என்று தனது “மருங்குழலுங் களி வண்டினங்கா ளுரையீர் மடந்தை, கருங்குழல் நாறுமென்போதுடைத்தோ நுங் கடிபொழிலே” என்றும், “மருங்குழல்வாய் நீயறி திவண்டே சொல்லெனக்கு மங்கை, கருங்குழல் போலுளவோ விரைநாறு கடிமலே” னஎறுமுள்ள பிறருடைய செய்யுட்களும் இப்பாசுரத்தை அடியொற்றியுள்ளன.

பூவின் வாசியும் மணத்தின் வாசியும், தேனின் வாசியும் அறியும் நீங்கள் புறம்புண்டான உங்களுடைய ரஸத்தில் பராக்கை விட்டு, நான் சொல்லுகிற வார்த்தை கேட்கும்படி வாருங்கள் என்று அழைக்கின்ற வண்டுகளோ வம்மின் என்று. கோட்டுப்பூ கொடிப்பூ நாப்பூ நிலப்பூ என்று நாவல்வகையில் கொடிப்பூ நிலப்பூவில் அடக்கப்பட்டது. புதற்பூ என்பதும் இதில் அடங்கும். மஹாவராஹ மூர்த்தியாகிப் பூமியைக் கோட்டாற்குத்தியெடுத்து வந்தது என்னமொன்றாய் மண் துகளாடி’ என்றதனால் சொல்லப்பட்டது. இதில் அதந் பொய்ப் பற்றி வடிவத்துக்குப் பெரிய பூமி முழுவதும் ஒரு துகளாயின்மை தோன்றும்; “பன்றியாய்ப் படியெடுத்த பாழியர் யென்பரது, வென்றியா ருனதெயிற்றின் மென்துகள் போன்றிருந்தால்”பூங்கார் பாசுரங்காண்க, வைகுந்த மன்னாள் என்றது. இங்கே அழியாது நலமுடையவடி குழல்வாய் விரை¬ = புஷ்பம் முதலிவற்றாலே வந்தேறியான பரிமளமன்றியே புகழான குழலின் பரிமளம். உத்தமசாதி மகளிரின் கூந்தலுக்கு இயற்கை நறுமணமுண்டென்ப.

வண்டுகளோ = ஓகாரம்மிக்கது விளியுருபு; ஓ வண்டுகள் எனமாறினுமாம். வம்மின் என்பதன் ஏவற்பன்மை. துகளாடி = வினைசெய்யமன்று; பெயர்ச் சொல். ‘குழல்வாய் என்பதற்கு குழலிடத்துள்ள பரிமளம் என்றுபொருள் கொண்டால், வாய்- எழ ’ அன்றி. குழலில் வாய்ந்த விரை’ என்றுரைத்தால், வாய்- வினைத்தொகை. விண்டு = பிறவினை யிரண்டுக்கும்பொது; ‘பிளந்து’ என்பதுபோல. வியல் - பரப்பு. உணர்த்த சொல். ‘வியலென்’ கிளவி அகலப்பொருட்டே” என்பது தொல்காப்பியம்.

எம்பெருமான் திறத்தில் ஆழ்வார்க்கு அளவு கடந்து உண்டான பக்தியின் தலைமையைக் கண்ட பாகவதர் கொண்டாடிக் கூறும் வார்த்தை இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப் பொருளாம். பரம்பொருளை நாடித்திரிபவரான ஸாரக்ராஹிகளை ‘வண்டுகளோ வம்மின்’ என முன்னிலைப்படுத்தினது. (நீர்ப்பூ நிலப்பூ மாத்திலொண்பூவுண்டு களித்துழல் ஒன்றுரைக்கியம்) ‘நீர்ப்பூ’ என்றதனால் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள  வ்யூஹ மூர்த்தியை நினைத்தபடி;  ‘நிலப்பூ’ என்றதனால் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள வ்யூஹமூர்த்தியை நினைத்தபடி; ‘மரத்திலொண்பூ’ என்றதனால் வேதசாகைகளின் முடியிலே என்கிற தேஜோரூபியான பரமபதநாதனை நினைத்தபடி. ஆக இப்படிப்பட்ட பகவந்தன் விளக்கத்தை இடையறாது அநுபவித்து ஆநந்தித்து எவ்வுலகிலும் தடையின்றித் தங்களுக்கு ஒன்ற சொல்லுகிறோம். பிரளயகாலத்தில் பூமியின் ஆபத்தைத்  தீர்த்தவனது அழிவற்ற வைகுந்து நாடுபோலப் பேராநந்தம் தருபவரான இவ்வாழ்வாரது சிரோபூஷணமாகவுள்ள பக்திமிகுதியின் புகழ்போல  நீங்கள் எங்கேனும் கண்டதுண்டோ கொண்டாடி யுரைத்தனரென்க...

நாயகன் இரவிலே வந்து கலந்தமையை நாயகி தன் தோழிக்குக் கூறுதல் ஆற்றாமைக்குக் கலங்கியுரைத்த தோழியைக் குறித்து தலைவி இரவிடத்துத் தலைமையைத் தென்றல் மேல் வைத்து உரைத்த பாசுரம்’ என்ற அழகிய மணவாளசீயருரை வாக்கியங்காண்க. தென்றல் மேல் வைத்துக் கூறுதலாவது- நாயகன் அன்போடு வந்து கலந்த்தை வெளிப்படையாகக் கூறுதற்கு வெட்கப்பட்டுத் தென்றல் மேல்வைத்துக் கூறுதலாம்.

இரண்டு பக்கங்கள் மிஸ்ஸாகியுள்ளன. (பக்கம் 99-91)

எனது விரஹவ்யஸநத்தை

இப்பாட்டில் த்ரிவிக்ரமாவதார வரலாற்றைப் பற்றின விஷயம் ப்ரஸ்தாபிக்கப்பட்டுள்ளதானது எம்பெருமானுடைய ஸர்வ சக்தித்வத்தைக் கூறியவாறு. ‘நாயகன் என்னோடு ஸம்ச்லேஷிக்க வரக்காணவில்லையே; என்ன பிரதிபந்தக முள்ளதோ அறியேன்; பிரதிபந்தங்களைக் பரிஹரித்துக் கொண்டுவந்து சேர்தற்குரிய ஆற்றல் அவர்க்கு இல்லைபோலும்! என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த தலைவியை நோக்கித் தோழியானவன் ‘நங்காய்! இப்படியோ நீ நினைக்கிறாய்? உன்னுடைய நாயகனான ஈச்வரனுக்குச் செய்யவரிய தொழிலுமொன்றுண்டோ? எல்லா வல்லவனன்றோ அவன்’ என்று அவனுடைய வல்லமைகளுள் சிறந்ததான ஒன்றை யெடுத்துரைக்கும் முகத்தால் ‘இபபடி ஸர்வசக்தியுக்தனான நாயகன் நம்மோடு கலப்பதற்கு இடையூறாகவுள்ளவற்றைப் பரிஹரித்து விரைவில் வந்திடுவதென்று நீ ஆறியிருகுக வேணுமே யொழிய வல்லவனல்லனென்று கருதிக் கலங்குவது தகுதியன்றென்று ஆற்றுகிறாளாயிற்று. ஆகவே, தோழி தலைவன் பெருமையை யுரைத்துத் தலைவியை ஆற்றல் இது.

‘தாமரைக் கண்ணன் என்னோவிங் களக்கின்றதே!” என்றதற்கு இரண்டு வகையான கருத்து உண்டு;- ஓரடியைப் பூமி முழுவதும் பரப்பி வைத்து மற்றோரடியை மேலுலக முழுவதும் பரப்பிவைத்து இங்ஙனம் உலகங்களெல்லாவற்றையும் அளந்திட்டானே! இஃது என்ன ஆச்சரியம்! என்று வியந்து கூறுவதாக ஒரு கருத்து. எம்பெருமான் உலகளந்தானென்று சொல்லுகிறார்களே, இது எப்படி பொருந்தும்?  ஒருவன் தான் நின்ற இடந்தவிர மற்றோரிடத்தில் மாறிக் காலிட்டாலன்றோ அளந்ததாகச் சொல்லலாம்; நிலமும் விசும்பும் இரண்டு திருதிட்டாதென்று எங்ஙனே சொல்லலாம்? என்பதாக மற்றொரு கருத்து. இங்குப் பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானக்காண்மின்:- ‘அளக்கைக்கு ஒரு அவகாசம் காண்கிறிலோம்; நின்ற நிலையிலே நின்றாரை அளந்தாரென்ன வொண்ணாதிறே; அடிமாறியிடிலிறே அளந்ததாவது, இவன் இங்கு அளந்தானாக ஒன்றுங்காண்கிறிலோமீ!” என்று.

நீண்ட வண்டத்து என்று தொடங்கி மூன்று வாக்கியங்கள் எம்பெருமானைக் குறிப்பன; நீண்ட வண்டத்திலுள்ளவன், உழறலர் ஞானச் சுடர்விளக்காயுயர்ந் தோரையில்லாதவன் அழறலர் தாமரைக்கண்ணனாயிருப்பவன் என்க.

அழறலர் தாமரைக்கண்ணன்= தாமரைக்குப் பங்கஜம் என்று வடநூலார் பெயர் கூறுவர், சேற்றில் முளைப்பது என்று பொருள்; இங்கும் அங்ஙனமே ‘அழறலா தாமரை’ எனப்பட்டது. அழறு- சேறு. அளறு என்பதுபோல அழறு என்பதும் ஒரு தனிமொழியே யென்றும். ளகரத்துக்கு ழகரம் போலியாக வந்ததன்று என்றும் அறிக. தாமரைப்பூ நீர் நிலையை விட்டு நீங்கினால் வாடிப்போய் விடுமாதலால் நீர்நிலையிலேயே அலர்ந்து சொல்வி குன்றாதிருக்கிற தாமரைபோன்ற திருக்கண்களையுடையவன் என்றவாறு.

கழல் - தலம், சுழறவம், உழறுதல் எனினும் - உழலுதல் எனினும் ஒக்கும்.

எம்பெருமான் தம்மைச் சேர்த்துக் கொள்ளாமையால் தளர்ந்த ஆழ்வாரை அன்பர்கள் அவனுடைய அபார சக்தியை யெடுத்துக் காட்டி ஆற்றுதல் இப்பாட்டுக்கு உள்ளுறை பொருள். த்ரிவிக்ரமாவதார வியாஜத்தால் எல்லா வுலகங்களையும் தனக்கேயாக்கிக்கொண்ட ஸர்வேச்வரன் அதுபோலவே உம்மையும் தன் திருவடிகளிற் சேர்த்துக்கொண்டருளத் தட்டில்லையென்று அவனடைய ஸம்பந்த்தையும் சக்தி விசேஷத்தையும் விளக்கி ஆற்றாமையைத் தணித்தனரென்க.

இராப்பொழுது நெடுகிச் செல்லுமாறு கண்டு ஆற்றாமை மீதூர்ந்த தலைவியைப் பற்றித் தாய் இரங்கிக் கூறும் பாசுரம் இது. என் மகளானவள் ஓரிரவு ஏழூழியாய நெடுகும்படியையும் தனது நாயகனான திருமாலின் ரக்ஷகத்வத்தையும் விரோதி நிரஸாரைமாதந்யத்தையும் வாய்மாறாது கூறி அலற்றுகிறாளென்கிறாள் தாய். என்னுடைய காதலுக்கு எப்படி முடிவு இல்லையோ அப்படியே இவ்விரவுகளும் முடிவில்லை யென்கினாள்  மகள்- என்பது முன்னடிகளால் தெரிவிக்கப்பட்டது. “நீளியவாயுள என்னும்” என்று அநயவித்துக் கொள்கை. ‘என்னும்’ என்பது இப்பாட்டிற்கு வினைமுற்று என்று சொல்லுகிறாள் என்கை.

‘அளப்பருந் தன்மைய வூழியங்கங்குல்’ என்பதற்கு - “அளக்க வரியதையம் அளந்தவன் திருவடிகளாலும் அளக்கப்போகிறதில்லை; அளக்கலாகில் வந்து தோற்றனோ?’ நாடன்’ என்றது- உலகத்தை கடல் விழுங்காமல் நோக்குமவன் என்ற கருத்தைத் தந்து அவனது  ரக்ஷகத்வத்தைப் புலப்படுத்தும். ‘மதுசூதனன்’ என்றது- உலகத்துக் கொடியவரால் நேரும் கலிவைத் தீர்த்துக் கொடுப்பவதென்று துஷ்டநிக்ரஹ ஸாமர்த்தியத்தைப் புலப்படுத்தும். ஊழியங்கங்குல்- “கங்குலுக்கு அழகாவது- கற்பத்திலும் நெடிதாயிருக்கை ‘அம்’ சசியையுமாம். நெடுகிச் செல்லுகின்ற கங்குலைக் குறுக்குதலோ, அல்லது எம்பெருமானைக் கூட்டுதலோ இண்டத்தொன்று செய்யமாட்டாமையால் தாய் ‘வல்வினையேன்’ என்று தன்னைத்தானே வெறுத்துக் கூறுகின்றாளென்க.

இரண்டாமடியில் ‘காதலின்’ என்ற ஐந்துனுருபு- ஒப்புப் பொருளது. என் காதல்போல நீண்டிருக்கின்ற தென்கை. முல்லை யரும்பு என்னும் பொருள்கொண்ட ‘தளவு’ என்னுஞ் சொல் ‘தள’ என விகாரப்பட்டது. தடமுலையையுடையவள் எனப்பொருள் படுதலால் அன்மொழித்தொகை. ‘வாய’ என்னுந் குறிப்புப் பெயரெச்சம் தடமுலையவளுக்கு அடைமொழி. நீளிய = இறந்தகாலப் பலவின்பால் வினையாலணையும் பெயர். நீள் என்பது பண்படியல்லாமல் விளைப்பகுதியாதலால் குறிப்பு வினையாலணையும் பெயரன்று.

எம்பெருமானைச் சேர்தற்குக் கால தாமதத்தைப் பொறுக்கமாட்டாத ஆழ்வாருடைய நிலையைக் கண்டு ஞானிகள் நொந்துரைத்த வார்த்தை இதற்கு உள்ளுறைபொருள். உலக முழுவதையும் தன்னுடைமையாக வுடைய எம்பெருமான் இவரது உட்பகைகளை யொழித்து இவரைச் சேர்த்துக்கொள்ள வல்லவனா யிருக்கச் செய்தேயும் அங்ஙனஞ் செய்யாது விளம்பித்தலால் இவர்க்கு இந்த இருள் தருமா ஞாலத்திலிருப்பு நெடுகித் தோற்றுகையாலே, ஆற்றாமை பிறந்து, அது விஞ்சுதலால் இவர் அத்தன்மையை வாய்விட்டுக் கூறியமை இப்பாட்டில் விளங்கும். இவருடைய திருமுகமண்டல விளக்கமும் சொல்திறமும் பக்திவளர்ச்சியும் ஈற்றடியிற் சொல்லிற்றாம்.

தலைமகளின் இளமையை நோக்கிச் செவிலித்தாய் இரங்கிக் கூறும் பாசுரம் இது. நாயகனோடு களவொழுக்கத்திற் புணர்ந்த நாயகி அவன் பிரிந்த நிலையில் ஆற்றாது வருந்தி வாய் பிதற்றிக் கண்ணீர் சொரிந்து உடலிளைத்து வடிவம் வேறுபட, அவ்வேறுபாடு மாத்திரத்தைக் கண்ட தாய் இதற்கு காணமென்னோ வென்று கவலைப்பட்டு அவளது உயிர்த்தோழியைக் கேட்க, அவள் ஒளிக்காமல் உண்மையான காரணத்தைக் கூறியிட, அது கேட்ட தாய், இவளது இளமையைக் கருதி இரங்கிக் கூறிய துறை இது. உண்மையில் நாயகி யௌவன பருத்தை அடைந்திருந்தும் இவள் தாய்மார்க்கு அன்பு மிகுதியால் இவளது மிக்க இளமையே தோற்றுவதென்க. “செய்யநூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லளல்லள்” “வாயிற்பல்லு மெழுந்திட மயிரும் முடி கூடிற்றில... மாயன் மாமணி வண்ணன் மேலிவள் மாலுறுகின்றானே” “கொங்கையின்னங் குவிந்தெழுந்தில” என்று பெரியாழ்வார் பாசுரங்களும் “முள்ளெயிறேய்ந்தில கூழை முடி கொடா,தெள்ளியளென்பதோர் தேசிலன்” என்ற திருமங்கையாழ்வார் பாசுரமும் காண்க.

முலையோ முழுமுற்றும் போந்தில் - முலைகளான ஆண்முலைக்கும் பெண்முலைக்கும் வாசிதோற்ற முகத்திரண்டு கிளர்ந்தனவில்லையென்க. யௌவந ஸூசகமாதலால் முலை முந்துறக் கூறப்பட்டது. குழல் அறிய = மயிரும் சேர்ந்து முடிக்கலாம்படி கூடின வில்லை. கலையோ அரை இல்லை= சிற்றாடையை உடுக்கும் அடைவு அறிந்து நன்றாக உடுக்கவும் மாட்டாள் என்றபடி, நாவோ குழறும் = கட்டுத் தடங்கலின்னிறப் பேசப் பழகின பருவமல்லாமையாலே பேச்சுக்குளறும், ‘கடல் மண்ணெல்லாம் விலையோ’ என்பதற்கு ரத்நாகரமான கடல்களும் பூலோகமும்மற்ற வுலகங்களும் விலைபோதா என்றும் உரைப்பர். மிளுரும் கண் = ஒரு பொருளை விசேஷித்துக் குறிப்பாக நோக்குதலனின்றிப் பொதுநோக்கு நோக்குதலே யொழியக் காதற்குறிப்பை வெளிப்படுத்துகிற சிறப்பு நோக்கு இல்லை என்றபடி. நாயகனை வசப்படுத்துவது முலையழகாலேயாதல் சொற் சாதுரியத்தாலேயாதல் கருத்தோடு கடைக் கணித்துப்பார்க்கும் குறிப்புநோக்கினாவாதல் கூடுவதாயிருக்க முலையும் அரும்பாதே குழலும்  முடிகூடாதே ஆடையும் செவ்வனுடுக்க அறியாதே சொல்லும் குதலையாய்க் கண்ணும் ஒதுக்கிப் பாராமற்செவ்வே நோக்கும்படியான இந்தப் பேதைக்கு இப்படி தலைவனிடம் வினாவுதலுண்டானவாறு என்கொள்க? என்று அதிசயப்பட்டாளாயிற்று.

நாயகனை வசப்படுத்துகிற ஸாதனங்களின் நிறைவில்லாமையை சொல்லுகிற அடைவில் ‘கடல் மண்ணெல்லாம் விலையோ வெனமிருங்கண்’ என்று சிறப்புறச் சொல்லுவானென்னென்னில்: பொதுகாவுள்ளது இச்சிறப்பு என்க. நாயகனை வசப்படுத்துதற்குரிய சிறப்பன்று. பருவத்தின் மிக்க இளமையைக் காட்டும் இது.

ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்ட ஞானிகள் ‘எம்பெருமானைச்சேரப் பெறுதற்கு உபாயமான பக்தி முதலியன நிறையாமலிருக்க, இவருக்கு உண்டாகிய விரைவு என்னோ!’ என்று சொல்லும் வார்த்தை இதற்கு உள்ளுறை பொருள். ஸ்வாபதேசத்தில் முலையென்று பக்தியைச் சொல்லுகிறது. (முலையோ முழுமுற்றும் போந்தில்) எம்பெருமானைச் சேர்ந்து அநுபவித்ததற்கு உபகரணமான பக்தி முதிர்ந்து பேற்றுக்குச் சாதனமான பரமபக்தியாகப் பரிணமித்ததில்லை. (மொய் பூங்குழல் குறிய) முடியழகில்லை; அதாவது- தலையாலே வசப்படுத்துகிற பிரணாமம் பூரணமாகத் தோன்றவில்லை. (கலையோ அரையில்லை)  (திருக்குறள்-குடி செயல் வகை 3) “மடிதற்றுத் தான் முகதுறும்” என்றபடி அரையில் ஆடையை இறுக உடுத்துக்கொண்டு முந்துற்றுக கிளம்புமா முயற்சியில்லை; ‘முயற்சியை அதன் காரணத்தாற் கூறினபடி. (நாவோ குழறும் இடைவிடாத பககவந்த நாம ஸங்கீரத்தனமில்லை. (கண்மிளரும்) பொதுப்பட பொருள்களின் உண்மையறியும் தத்வஞானமொழிய அவ்வறிவை ஓரிடத்திலே ஒடுக்கி நிறுத்தும் தயாநருபமான ஞானமில்லை. “கடல் மண்ணெல்லாம்  விலையோவென என்றதனால் ஆழ்வாரது ஞானத்தின் சிறப்புத் தோன்றும். (இவள்பரமே) கேவலம் பரதந்திரமாயிருக்க வேண்டுவார்க்கு ஸாதநமொன்றுமின்றியே யிருக்க விரைவை ஏறிட்டுக்கொள்றுளுதல் தகுமோ? (பெருமான் மலையோ வேங்கடமென்று கற்கினற் வாசகம்) “பெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே யென்கின்றாளால்” என்னுமாபோல அவனெழுந்தருளி நிற்கிற திருமாலாகிய போக ஸ்தானத்தையே வாய்புலத்தல்.

இப்பாட்டில், ஆழ்வார் திருவவதரித்த பொழுதே தொடங்கி எம்பெருமானாலல்லது தரியாமை வெளியாம்..

தலைவனுடைய நீர்மையைத் தலைவிக்குத் தோழி கூறல் இது. நாயகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து வருந்துகிற நாயகி ‘பராத்பானா யிருக்கின்ற அத்தலைவன் என்னை ஒருபொருளாகக் கருதி விரைவில் வந்து விவாஹஞ் செய்துகொள்ளுதல் கூடுமோ! என்று கவலைப்பட, அதுகண்ட தோழி; அங்ஙனம் யாவரினும் உயர்ந்த அவனுக்கு அன்புடையார் பக்கல் எளியனாகுந் தன்மையும் இயல்பில் உண்டு’ என்று அவனது ஸௌலப்யத்தையெடுத்துக்காட்டி நாயகிக்கு ஆறுதல் கூறுகின்றாள். இதனால், நமக்கு எளியனாய் வந்து விவாஹஞ் செய்துகொள்வான் என்றதாயிற்று.

எம்பெருமானைப் புகழ்வதற்கென்று ஏற்பட்ட வேதங்களும் அவன் தன்மையை முடியச் சொல்லமாட்டாமல் மீண்டனவென்றால் அதனைக் கூறுதல் நம்மாலாகுமோ? என்பது ‘வாசகஞ் செய்வது நம்பரமே’ என்றதன் கருத்து. வேய் அகமாயினும் = வேய் என்று மூங்கிலுக்குப் பெயர்; ஒரு மூங்கில் நாட்டப்படும் இடமாயினும் என்றபடி. சிறிதிடமேனும் தவறாமல் எல்லாவிடத்தையும் என்கை. இரண்டேயடியால் தாயவன் = “ஒரு குறளாயிருநிலம் மூவடி மண்வேண்டி உலகனைத்து மீரடியாலொடுக்கி ஒன்றுந், தருகவெனா மாவலையைச் சிறையில் வைத்த தாடாளன்” என்கிறபடியே தான்கேட்ட மூவடிநிலத்துக்கும் இடம் பறந்தபடி இரண்டடிகளாலேயே அளவிட்டு முடித்தவன். ஆய்குலமாய்வந்து தோன்றிற்று = அரசர் குலத்திலே ஒருத்திமகனாய்ப் பிறந்து இடையர் குலத்திலே ஒருத்தி மகனாள் ஒளிந்து வளர்ந்த எளிமை, வாசகஞ் செய்வது நம்பாமே? என்று அந்வயிப்பது. முதல் மூன்றடிகள் பரத்வத்தையும் ஈற்றடி ஸௌலப்யத்தையும் விளங்கும்.

மேன்மையோடு நீர்மையும் உடையவனாதலால் எம்பெருமான் உம்மைச் சேர்த்துக் கொள்வன; விரைந்து வருந்த வேண்டா என்று அன்பர்கள் ஆழ்வாரைத் தேற்றியபடி லீலாவிபூதி நித்யவிபூதி யென்னும் இரண்டுக்குந் தலைவனான மேன்மையையுடைய ஸர்வேச்வரன் ஆசாதஸுபனாய்க் கண்ணனாக வந்து அவதரித்த நீர்மையிற்கருத்து ஊன்றும்பொழுது, ‘கருமவசமில்லாதவனை பிறப்பு எடுத்தலும் அதிலும் அறிவில்லாமைக்கு எல்லைநிலமான எளிய குலத்தின்னாதலும் என்ன ஆச்சரியம்!’ என்று கொண்டு “பிறந்தவாறும்” என்றும் “எத்திறம்” என்றும் மோஹித்துக் கிடக்குமதொழிய அதற்குமேல் சொல்லிப் புகழ்தற்கு ஸாத்யப்படுமோ? என்றதாயிற்று.

‘பரமே’ என்ற ஏகாரம் எதிர்மறை; நம்பரமன்று என்கை. தாயவன் - தாவிவவன். தோன்றிற்று- இறந்தகாலத் தொழிற்பெயர்; இரண்டாம் வேற்றுமைத் தொகை...

நாயகனை நோக்கி நாயகியினாற்றாமையைத் தோழி கூறுதல் இது. தலைமகனாற்றாமை கண்டு வருந்தாநின்ற தோழி தன் ஆற்றாமையாலே தலைமகன உட்கொண்டு விளித்து முன்னிலைப்படுத்தி, தலைமகள் கடலோசைக்கு ஆற்றாது வருந்தும் நிலையையும், இதுவரையிலும் தான் அவளை ஒருவாறு ஆறிவைத்திருந்தமையையும், இனித் தன்னாலும் ஆற்றவொண்ணாதபடி வருத்தம் விஞ்சுகின்றபடியையும் கூறுகின்றான்.

நோவுபடுவோரைக் கண்டு தானே இரங்க வேண்டுவது ப்ராப்தம்; அப்படி செய்யாததோடு , இவளது பெண்மையையும் ஸௌகுமார்யத்தையும் இளமையையும் காட்டி இரங்குமாறு யாம் வேண்டிக் கொண்டாலும் இப்பாழுங்கடல் இரங்குகின்றதில்லை; ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்றபடி எவ்வளவு கொடுமையுடையாரும் இங்கும்படியான பெண்தன்மைக்கும் இது இரங்குகிறதில்லை என்றால். மேலில் காணும் கருமைநிறத்தோடு உள்ளுள்ள கருமையையும் (கொடுமையையும்) காட்டுவதற்குக் ‘கருங்கடல்’ என்றது. கறுப்பு  வெகுளிப் பொருளாதாதலால் ‘கோபமுடைய கடல்’ என்றுமாம்.

‘இறையோ உரைக்கிலும்’ என்றும் பாடமுண்டாம்.

இவள் தன் = தன்னைத் தான் காத்துக்கொள்ள வல்லமையில்லாதவளான இவளுடைய என்றபடி. நிறை - அடக்கம். இனி = கடலாகிய பெரும்பகைவு முண்டாய்த் தனக்கு நிறைகாக்கும் சக்தியுமில்லையான பின்பு என்றபடி, இனி இவள் தன் நிறை உன் திருவருளாளன்றிக் காப்பரிது = நீ வந்து ஸம்ச்லேஷித்தாலன்றி இவள் அடங்கியிருக்கமாட்டாள் என்றவாறு. நீ படுங்கைவாய்ப்பு அறிந்து கிடக்க, படுக்கைகொள்ளாத இவளுக்கு இடம்கொடாதவிது முறைமையன்று என்கிறாள். ‘முறையோ அரவணைமேற் பள்ளிக்கொண்ட முகில்வண்ணனே!’ என்பதனால், அரவணைமேற்பள்ளி கொண்ட = இவள் கருத்தரையிலே கிடக்க, நீர் மெல்லிய படுக்கை தேடிக்கிடக்கிறீரே! இ நல்ல முறைமைதான்! முகில் வண்ணனே! = மேகம்போல் உதாரணகுணமுடைய நீ இவளது துயரந்தீர உதவாதிருப்பதும் ஒரு முறைமைதான்!

ஏற்கனவே எம்பெருமானைச் சேரப் பெறாது வருந்துகிற ஆழ்வார் ஸம்ஸார ஸாகரத்தின் கோலாஹலத்தையுங்கண்டு அதிகமாகத் தளர்கிறபடியைக் கண்ட அன்பர், தங்களால் இக்கிளர்ச்சி பரிஹரிக்கவொண்ணாதென்று கருதித் தங்களாற்றாமை தோன்ற எம்பெருமானைக் குறித்து விண்ணப்பஞ் செய்த பாசுரமாயிது. நாஙகள் எவ்வளவு முயன்றாலும் இவரது அடிமைத் தன்மையைக் கருதியும் சிறிதும் பின்வாங்காமல் கொடிய ஸம்ஸாரஸாகரம் பயங்கரமாய் இவரை வருத்துகின்ற; இனி இவரது ஸ்வரூபத்தை உனது திருவருளாலன்றிப் பாதுகாக்க வொண்ணாது; ஆதிசேஷனாகயி ஒரு கேதநனை எப்பொழுதும் விட்டு நீங்காது அவனிடத்தில் ஸகலவிதமான கைங்கரியங்களையும் கொண்டு அருள் காட்டுவதுபோல இவ்வாழ்வாரிடத்தும் அருள் காட்டவேணும்; உனது இனிமையான வடிவை இவர் அநுபவிக்கப் பெறும்படி செய்வதே உனக்குத் தகுதி என்றதாயிற்று.

நாயகனை இயற்பழித்த தோழிக்கு நாயகி இயற்பட மொழிதல் இது. அதாவது- நாயகனைப் பிரிந்து நாயகி வருந்தும் நிலையில் அவளைத் தோழி பலவிதங்களாலும் ஆற்றுவதுண்டு; நாயகனுடைய கொடுமையைச் சொல்லிப் பழித்து அம்முகத்தாலே ஆற்றுதலும் ஒருவிரதமாதலால், அவ்விதமாகச் சிறிது ஆற்றுதற்பொருட்டுத் தோழி அவன் கொடுமையைச் சொல்லிப்பழிக்க, அது பொறுக்கமாட்டாது நாயகி ‘இப்பொழுதும் அவனது கண்கள் என்னெஞ்சிலும் கண்ணிலும் தோன்றி நீங்காதிருக்கின்றன; இங்ஙனம் அன்போடு அணியனாயுள்ளவனை, அநாதரஞ் செய்து பிரிந்து சென்றாளென்று நீ கொடுமை கூறுகின்றது என்னோ? என்று கூறுகின்றானென்க.

சிவந்த நிறமுள்ளவையாய்க் குளிர்ந்த பார்வையுமுடையவையாய்த் தாமரைத்தடாகம்போல விளங்குகின்றவையான இத்திருக்கண்கள் அப்பெருமானது திருமுகமண்டலத்திலே வேட்கை வைத்த எனது மனத்திலே புகுந்து இப்பொழுதும் விட்டு நீங்காமல் என்னோடிருக்கின்றனவே, ஏன் ப்ரமித்துப் பழிக்கின்றாய்! என்றவாறு.

வண்ணஞ் சிவந்துள = என்பக்கல் இவர்க்குண்டான அநுராகத்தால் கண்கள் சிவந்துள்ளன என்பது உட்கருத்து. சீற்றத்தாலும் கண்கள் சிவக்கக் கூடுமாதலால் அங்ஙனமாகாது அநுராகத்தாலே சிவந்தனவென்று கொள்வதற்குக் காரரணமுண்டோ வென்ன, ‘வானாடமருங் குளிர்விழிய’ என்கிறாள்; சீற்றத்திற்கு விரோதியான குளிர்ச்சியுள்ளதனால் வேட்கையால் சிவந்துள்ளனவென்பது திண்ணமென்க. தாம் இவையோ= இடைவிடாத நினைப்பினால் இவள் மனத்தில் மாத்திரம் தோன்றுதலன்றி அந்நினைவின் முதிர்ச்சியால் இவளெதிரிலும் எப்பொழுதும் உருவெளிப்பாடாகத் தோன்றுமாறு இதனால் அறியத்தக்கது; ‘இவை என்பது ப்ரதயக்ஷயர்தேசமாதலால் பிரியாமையும் அதற்குக் காரணமான அன்புடையனாய் இடையீடின்றித் தன்னுள்ளும் நெஞ்சுள்ளும் நீங்காது நின்று தோன்றுகிறவனை அன்பின்றிப் பிறந்தானாக நினைப்பதும் சொல்லுவதும் தகுதியில்லை என்பது தோன்ற ‘அடியேனோடு இக் கலாமிருக்கின்றவே’ என்றது; ஆகவே ஈற்று ஏகாரம் - தேற்றத்தோடு இரக்கம். தன்னை நெடுநாள் பிரிந்து வருத்துங்காலத்திலும் நாயகனைப் பிறர்பழிக்கக் கேட்டுத்

*** நாயகியானவள் நாயகனுடைய பேர்கூறித் தரித்திருப்பதைத் தோழிக்குக் கூறுதல் இது. ஸம்ச்லேஷித்துப் பிரிந்த நாயகியானவள் மீண்டும் ஸம்ச்லேஷம் கிடைக்கப் பெறாமையினாலே தான் ஒருவாறு தரித்திருப்பதற்காக நாயகனுடைய நாமங்களைச் சொல்லிக்கொண்டு போது போக்குத லென்பதொன்றுமுண்டு; அது நிகழ்கின்ற தென்க.

புண்யசாலிகளான ப்ராம்ஹ்மணோத்தமர்கள் வேதமந்திரங்களால் எப்பொழுதும் எம்பெருமானைத் தவறாமல் அடைந்து அநுபவிப்பர்; யானோ அப்படிப்பட்ட நல்வினையில்லாமையால் எனது ஆசையை அடக்கமாட்டாமல் எனது தௌர்ப்பாக்யத்தை நொந்து கொண்டு இனிய பழங்களை உண்டு வாழப்பெறாத ஏழையர் காய்களைக் கடித்து உயிர் வாழுமாபோலே அவனது பூர்ணாநுபவம் பெருமையால் நமோச்சாரணஞ் செய்து உயிர் தரிக்கின்றேனென்கிறாள். ‘தருக்காய் கடிப்பர்போல்’ என்று உபமானத்தினால் இத்திருநாமச்சொல் கற்பதிலுள்ள அத்ருப்தி விளங்கும். கண்ணாலே கண்டு கையாலே அணைக்க ஆசைப்பட்டவர்க்குத் திருநாமச்சொல் கற்ற மாத்திரத்தால் என்னாகும்?

‘இருக்கார்மொழி’ எனற்து புருஷூத்தம் முதலியவற்றை. அன்றியே, இருக்கு- வேதங்களெல்லாம், - ஆர். தனக்குள்ளே பொருந்தும்படியான, மொழி- மூலமந்தரிமாகிய அஷ்டாக்ஷரமஹா மந்த்ரம் என்றுங் கூறுவர். நெறி இழுக்காமை = எம்பெருமானை வழிபடும் முறைமையில் ஒன்றும் வழுவாமல், ‘உலகளந்த திருத்தாளிணை’ என்றது- ஸர்வ ஸுலபமான திருவடி என்றபடி. நிலத்தேவர் = பூஸுரர் என்பர் வடநூலார்; இந்திரன் முதலிய தேவர்கள் ஸவர்க்க லோகத்தில் விளங்குவதுபோல இந்நிலவுலகத்தில் விளங்குபவர் ப்ராஹ்மணர்கள். வினையொடும் எம்மொடும் நொந்து = எம்பெருமானோடு கூடிக்குலாவி அநுபவிக்கப்பெறாத பிரதிபந்தகம் நமக்கு உண்டாயிற்றே! என்று வெறுப்புற்று என்றவாறு. (கனியின்மையில் கருக்காய் கடிப்பவர்போல்) கருக்காய்= பசுங்காய், இளங்காய். நன்றாக முகிர்ந்து நுகர்வோர்க்கு மிகவும் இனியதாயிருகின்ற கனி - பகவதநுபவத்தாலாகும் இனிய ஆநந்தத்துக்கு உவமை கட்டிளமைத்தாய் நுகருஞ் செவ்வியதல்லாத காய்- அவ்வளவு இனியதல்லராத நாமோச்சாரண மாத்திரத்துக்கு உவமை. காயின் முதிர்ச்சி கனியாதல்போல நாமோச்சாரணத்தின் பயன் அது பவாநந்தமாகும் என்பது இவ்வுவமையால் உய்த்துணரத்தக்கது.

உயர்வறவுயர்நல முடையவனான அயர்வறுமமார்க ளதிபதியால் மயர்வறாம் மதிநல மருளப்பெற்ற ஆழ்வார் ப்ராஹ்மணோத்தமர்களினுஞ் சிறந்து ஸகல வேத வேதாந்த ரஹஸ்யஸாரப் பொருள்களையும் கையிலங்கு நெல்லிக்கனியாகக்கண்டு பேசி யநுபவிக்கச் செய்தேயும் நைச்யாநுஸந்தாக ரூபமாக இப்பாசரம் அருளிச் செய்தாரென்க.

இருக்கு- ரிக் என்னும் வடசொல்லின் விகாரம்; வேதத்துக்கு பொதுப்பெயரும் ஒரு வேதத்துக்கு சிறப்புப் பெயருமாக வழங்கும் அது. ஒருக்கா =ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம் (ஒருக்காமல்); இதில் ஒருங்கு என்பதன் பிறவினையான் ஒருக்கு’ - பகுதி. வினையொடும் எம்மொடும்- உருவுமயக்கம்; வினையையும் எம்மையும் எனப்பொருள்படுதலால்.

‘யாமுமவா’ என்பதற்கு வேறொரு வகையாகவும் பொருள் கூறுவதுண்டு; ‘அவ்வா’என்பது ‘அவா’ எனத் தொக்கியிருப்பதாகக் கொண்டு, யாமும் அவ்வா?- தாமும் அப்படியோ? நிலத்தேவர்போல இருகுகார் மொழியால் திருத்தாளினை வணங்கும் பாக்கியமுடையோமோ? அல்லோம் என்றபடி ஒருக்காலினையோடும்- அடக்க முடியாத (பரிஹரக்கம்போகாத) வினையென்றபடி, ‘ஒருக்காவிளையொடும் எம்மொடும் நொந்து’ - அபரிஹார்யமாயிருப்பதொருபாபம் உண்டாவதே! இதை அநுஷ்டிக்கைக்கு நானுண்டாவதே! என்று நொந்து.

தலைவிநோக்கின் வாசிகண்டு தலவைன் குறிப்பறிந்து உரைத்தல் இது. இப்பாட்டு நெஞ்சை நோக்கித் தன்னுள்ளே சொல்லியது. ‘தலைமகள் நோக்கிலே விடுபட்ட தலைமகன் அக்கண்கள் தனக்குப் பாதகமாகிறபடியைப் பாங்கனுக்குச் சொல்லுகிறான்’ என்றுங் கொள்வர்.

இளைய மான்பேடை மருண்டு நோக்கும் நோக்கத்திலும் இவளுடைய நோக்கம் அழகியதென்பதைக் காட்டக் ‘கற்றுப் பிணைமலர் கண்ணின்குலம் வென்று’ எனப்பட்டது. நன்று + முணை, கற்றுப்பிணை, மென்றொடர்  வன்றோடாயிற்று. கன்று இளமைப்பெயர், பிணை- பெண்மைப் பெயர். (தொல்காப்பியம் – பொருளதிகாரம்- மரபியல் 5.)  “யானையுங் குதிரையுங் கழுதையும் கடமையும், மானோடைத்துங் கன்றெனற்குரிய,” “புல்லாய் நவ்வி யுழையே கவர், சொல்வாய் நாடிற்பிணை யெனப்படுமே” என்பவற்றால் இச்சொற்கள் மானுக்கு உரியனவாதல் அறிக.

ஒரோ கருமற்றுப் பயின்று செவியோடு உசாவி = தான் நாயகியை நோக்காத பொழுது அவள் தன்னை மனத்திற் பொருந்திய காமக் குறிப்பு வெளியாம்படி அன்போடு நோக்குதலும்,தான் அவளை நோக்கும்பொழுது அவள் நாணத்தால் தன்னை யெதிர் நோக்காது பார்வையைப் பொது நோக்காக வேறொரு வஸ்துவைப் பார்ப்பவள்போல வேற்றிடத்திற் செலுத்தலும், இங்ஙனம் அடிக்கடி பலகால் விரைவில் நிகழும் பொழுது அவள் கண்பார்வை காலளவுஞ் செல்லுதல் தான் கருத்தூன்னியதொரு காரியத்தைப்பற்றிக் காதையடுத்து வினாவி அதனோடு ஆராய்தல்போலுதலும் என்னுமிவை வெளியிடப்பட்டனவாயின. ஒரு பொருளிலும் பற்றில்லாம லிருத்தவனொருவன் அத்தன்மை யொழிந்து ஒரு பொருளில் பற்றிவைக்க நேர்ந்தால் அதில் கருத்தூன்றி அவ்விஷயத்தைக் குறித்து அறிவுடையாரோடு ஆலோசித்து முடிவு செய்யத் தொடங்குவது வழக்கமானதலால், அப்படியே இதுவரையிலும் பொதுநோக்கமுடைய கண்கள் தன்னிடத்தில் அன்பு நோக்கம் வைத்து ஈடுபட்டு இதுவரையிலும் பொதுநோக்கமுடைய கண்கள் தன்னிடத்தில் அன்பு நோக்கம் வைத்து ஈடுபட்டு அத்தன்மையைக் குறித்துக் காதுகளோடு வினாவலுற்றன என்று கண்களின் மேலேற்றிக் கூறினானென்க. நாயகியின் கண்கள் காதளவும் நீண்டு விலக்ஷணமாயிருக்குந் தன்மை இதனால் வெளியிடப்பட்டதாம்.

குறிப்பு நோக்கத்தைத் தனக்கு அநுகூலாமகவும் பொது நோக்கத்தைத் தனக்குப் பிரதிகூலமாகவுங் கொண்டு ‘உற்றும் உறாதும் மிளிர்ந்து’ என்றான். உலகமெல்லாம் முற்றும் விழுங்கியுமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ் எம்மை யுண்கின்றவே’ என்று அந்வயிப்பது, த்ரிவிக்ரமாவதார காலத்தில் பூமி முழுதும் அப்பெருமான் திருவடிக் கீழிடமானதால், தனக்கு இவ்வுலகில் நிகழ்ந்த நிகழ்ச்சியைப் பிரானார் திருவடிக்கீழ் நிகழ்ந்ததென்றான். ஸர்வாக்ஷகனான ஸர்வேச்வரனுடைய விபூதியின் கண் எனக்கு இந்த நலிவு உண்டாயிற்றென்றவாறு.

உண்கின்ற- வினைமுற்று; உண்கின்றன என்றபடி. என்னை வசப்படுத்திக் கொள்ளுகின்றன; என்னை நலிகின்றன என்றுமாம்.

ஆழ்வாருடைய ஞானத்திலே பாகவதர் ஈடுபட்டு உரைக்கும் வார்த்தை இதற்கு உள்ளுறைபொருள். (சுற்றுப் பிணைமலர் கண்ணின் குலம் வென்று) ஸம்ஸாரமாகிற காட்டிலே திரிகிற பேதைமையுள்ள மிருகம் போல்வாருடைய ஐம்புல வழியிற் பரவுகிற ஞானசாதியை அதிசயித்து உத்க்ருஷ்டமாயிருக்கும் இவ்வாழ்வாருடைய ஞானம் என்கை. (ஒரோ கருமமுற்றுப் பயின்று) அந்த ஞானம் அறியத்தக்க பகவத் ஸ்வரூபம் முதலியவற்றிற் பொருந்தி ஊன்றி ஆராய்ச்சி செய்து நிற்குந் தன்மை சொன்னபடி (செவியோடு உசாவி) செவியென்றும் ச்ருதியென்றும் பர்யாயம்; அந்த ஞானம் சிறந்த பிராமாணமான ச்ருதியோடு ஒத்திருத்தல் தோன்றும். (பிரானார் திருவடிகீழ் உற்று முறாதும்) கீழ் (63ஆம் பாட்டு) “கண்ணம் புகுந்து’ என்றபடி மாநஸாநுபவம் நடந்தலால் வந்த உறவும் (64ஆம் பாட்டு) “கருக்காய் கடிப்பவர்போல்” என்றபடி பூர்ணநுபவம் பெறாமையாலுண்டான உறாமையும் என்னுமிரண்டும் குறிப்பிக்கப்பட்டன. (மிளிர்ந்த கண்ணாய்) எல்லா நிலையிலும் ஆழ்வாரது ஞானம் குவியாது விசாலித்துள்ளமையைக் காட்டும். (எம்மை உண்கின்றனவே) இப்படிப்பட்ட ஆழ்வாருடைய ஞானம் தம்மை வசப்படுத்தினமையைச் சொன்னபடி.

கீழ் “புலக்குண்டலப் புண்டரீகத்த” என்ற பாட்டுப் போலவே இப்பாட்டும் - தலைவன் பாங்கனுக்குக் கழற்றெதிர்மறுதல். இத்துறையின் விரிவு. அப்பாட்டினுரையில் காணத்தக்கது. கண்ணால் காணப்பட்ட நாயகியினுடைய கண்களினழகு இவ்வுலகப் பற்றை நீத்து ஊணுமுறக்கமுமற்று போக நிலையிற் பயின்று அதில் தேர்ச்சிபெற்ற மஹா யோகிகளையும் வசப்படுத்திக்கொள்ள வல்லது என்றதனால், தான் அக்கண்ணழகில் ஈடுபட்டதைக் குறித்து நீ என்னைப் பழிக்க இடமில்லையென்று பாங்கனை நோக்கி நாயகன் கூறினானாயிற்று. வாதிகேணரி அழகிய மணவாளச் சீயர் வேறு வகையாகக் கொள்வர்;- தலைமகளை இயற்கையிற் கலந்து பிரிந்த தலைவன் தன் உறாவுதல் கண்டு வினாவின் பாங்களைக் குறித்து உற்றதுரைத்த பாசுரம்’ என்றார். கழற்றெதிர்மறுத்தலாகவே நம்பிள்ளை திருவுள்ளம்.

“எரி நீர் வளி வான் மண்” என்றவிதில் பஞ்ச பூதங்களின் அடைவு (வரிசைக் கிரமம்) இல்லாமை செய்யுளானமைபற்றி. எம்பெருமான் தனது வைகுந்த மன்னாள் ஊகண்ணாய் = பரமபதம்போல் பேரின்பமே வடிவெடுத்தவள் போன்றுள்ள அத் தலைவியின் கண் என்று, பேர் மாத்திரமாய் என்னுடைய உயிர் நிலையான செங்கழு நீர் மலர்களாகிய அவை- யோகம் கைவந்திருக்கப் பெற்ற பரமயோகிகட்கும் இடைவிடாது சிந்தனைக்குரியன; அதாவது- அவர்கள் இக்கண்ணழகைக் காணப்பெறில், தாங்கள் சிந்தனை செய்து கொண்டிருக்கும் பரம்பொருளை அப்பால்தள்ளி அந்த ஸ்தானத்தில் இக்கண்களையே வைத்து சிந்தனை செய்வர்களென்றவாறு.

அருவினையேன் = அவளை எப்பொழுதுங் கூடியிருக்கப் பெறாமல் பிரியும்படி நேர்ந்த மஹாபாபத்தைப் பண்ணினேன் யானென்று வெறுத்துக் கொள்ளுகிறபடி. ‘உயிராயின’ என்றதனால், அக்கண்கள் மிக்க அன்புக்கிடமானவை என்பதும் விட்டுப்பிரிந்து தரிக்க வொண்ணாதவை என்பதும் தோன்றும்.

ஆழ்வாருடைய ஞானததின் சிறப்பைப் பாகவதர் அன்பர்க்குக் கூறுதல் இதற்கு உள்ளுறைபொருள். பஞ்சமஹா பூதங்களுக்கும் அந்தராத்மாவான எம்பெருமானுடைய பரமபதம்போல அழிவற்றவரும் எப்பொழுதும் அநுபவிக்கத்தக்கவருமான ஆழ்வாருடைய ஞானமென்று பேராய்ப் பெறுதற்கரிய நல்வினைவுடைய எமக்கு உயிர்போல அன்புக்கிடமான மெல்லிய மலர்கள் எமக்கே யன்றி உண்ணுதல் உறங்குதல் இல்லாமல் எப்பொழுதும் நிரந்தராநுபவஞ் செய்கிற நித்யயோகத்தையுடைய நிதபஸூகளுக்கும் எப்பொழுதும் அநுபவிக்கத்தக்கவையாய் விளங்கித் தோன்றும் இயல்புடையனவாம் எனப்பொருள் காண்க. யாவரும் மகிழ்ந்து சிரமேற்கொண்டு கொண்டாடத் தகுந்த தன்மைபற்றி ஞானவகைகளைக்

 

English Translation

This girl is of excellence like the Vaikunta of the lord who is Earth, water.  Water, fire, air, and space Her eyes are like these lotus flowers that his sinner-self always loves to see, with such a radiance as can attract even Yogis who pursue consciousness without food or sleep.

 
உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10


மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10


நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10


ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

 

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

 

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain