nalaeram_logo.jpg
(3525)

காரியம் நல்லன களவை காணிலென் கண்ணனுக்கென்று,

ஈரியா யிருப்பாளி தெல்லாம் கிடக்க இனிப்போய்,

சேரி பல்பழி தூயிரைப்பத் திருக்கோ ளூர்க்கே,

நேரிழை நடந்தா ளெம்மை யொன்றும் நினைத்திலளே.

பதவுரை

நேர் இழை

-

நேர்த்தியான ஆபரணங்களை யணிந்துள்ள என் மகள்,

காரியம் நல்லனகள் அவை காணில்

-

பதார்த்தங்களில் நல்லதானவற்றைக்கண்டால்

என் கண்ணனுக்கு என்று

-

“இவை எம்பெருமானுக்கு ஆம்“ என்று அநுஸந்தித்து

ஈரியாய் இருப்பாள்

-

ஈரநெஞ்சையுடையளாக இருப்பவள்

இது எல்லாம் கிடக்க

-

இங்கே அளவற்ற ஐச்வரியங்கள் கிடக்கவும்

இனி

-

இப்போது

போய்

-

வெளியேறிச் சென்று

சேரி பல் பழி தூய் இரைப்ப

-

சேரியிலுள்ளார் பல பழமொழிகளைத் தூற்றி கோஷிக்கும்படியாக

திருக்கோளூர்க்கே நடந்தாள்

-

திருக்கோளூரை நோக்கியே நடந்து சென்றாள்,

எம்மை ஒன்றும் நினைத்திலன்

-

எங்களை ஒரு பொருளாக மதித்திலன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (காரியம் நல்லனகள்) திருக்கோளூரெம்பெருமான் பக்கலிலே ப்ராவண்யமே வடிவெடுத்த இப்பெண்பிள்ளை ஊராருடைய பழிமொழிகளுக்கும் அஞ்சாதே எங்களையும் ஒருபொருளாக மதியாதே நடந்து சென்றாளே யென்கிறாள் திருத்தாய். உலகத்தவர்கள் ஏதேனும் நல்ல பொருள்களைக் கண்டால் “இது நம்முடைய குட்டிக்கு ஏற்றிருக்கும், இது நம்முடைய குழந்தைக்கு ஒத்திருக்கும்“ என்று சொல்லக்காண்பர்கள், பராங்குச நாயகியோவென்னில், அங்ஙனன்றிக்கே எந்த நல்லபொருளைக்கண்டாலும், “இது எம்பெருமானுக்குத் தகுந்திருக்கும், இது என் கண்ணனுக்கு ஏற்றிருக்கும்“ என்றே சொல்லுவது வழக்கமாம். அங்ஙனம் சொல்லுமிடக்து நெஞ்சு நெகிழந்திருக்குமிருப்பு வெகு ஆச்சரியமாயிருக்கும். அசோகவனத்திலே பிராட்டியைக்கண்ட திருவடி சொல்லுகிறான் - ••••  பலம் வா புஷ்பம் வா யத்வாந்யத் ஸ்த்ரீமநோஹரம் பஹுசோ ஹா ப்ரியேத்யேவம் ச்வஸந்த்வாமபிபாஷதே * என்கிறான். பழமோ பூவோ மற்றும் எதுகாணப் பெற்றாலும் நம் பிராட்டிக்கு ஆகுமென்றே பெருமாள் காண்பதுபோல, நம்பெருமாளுக்காரு மென்றே இப்பிராட்டிகாண்கிறபடி.

“இதெல்லாங் கிடக்க“ என்றதற்குப் பலபடியாகக் கருத்துக்கொள்ளலாம். * உண்ணுக்கு சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணனென்று பேசிக்கொண்டு கண்கள் நீர்மல்க இங்கே யிருக்கலாகாதோ? ஊரும் நாடுமுலகமும் தன்னைப்போலாக்கிக்கொண்டு இங்கே யிருந்தாலாகாதோ? இங்கிருக்குமிருப்பிலே என்ன குறை? இவையெல்லாம் விட்டு அங்கேபோகவேணுமோ?

போனாலென்ன? இங்கிருந்து செய்கிற பகவதநுபவத்தை அங்குச் சென்று செய்தாளாகில் என்ன கெடுதி? என்று ப்ரஸதாவமாக, சேரிபல்பழிதூயிரைப்ப என்கிறாள். இவ்வுலகில் பிறந்து வைத்துப் பழிக்கு அஞ்சவேண்டாவோ? பலர் பலவகையாகவன்றோ பழிதூற்றுவர்கள் * தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் * என்றுசொல்லி இருந்தவிடத்திலேயிருந்த பிராட்டியைப்போலே அதற்கு அவகாசம் கொடுத்துக்கொண்டு எதற்குப்போனாளென்கிறாள். * மனக்குற்றமாந்தர் பழிக்கில் புகழ் * என்று அமுதனால் அருளிச்செய்தபடியே பிறர் பழிதூற்றுவதே ஸத்துக்களுக்குப் பரமபூஷணமாதலால் தாயின் உள்ளத்திலுள்ளே உகப்பேயுள்ளது.

நேரிழை நடந்தாள் – இழை என்று ஆபரணத்திற்குப் பெயர், நேர்த்தியான ஆபரணங்களை யணிந்துள்ள என்மகள் மெல்லிய அடிகளைக்கொண்டு நடந்தாளே! பட்டர் ஸ்ரீ குணரதந கோசத்தில் •••   நேதுர்நித்யஸஹாயிந் * என்கிற ச்லோகத்தில் ஜாதோ திக் கருணாம் திகஸ்து யுவயோ ஸ்வாதந்த்ர்யமத்யங்குசம் * என்று வயிறெரிந்து பேசினாப்போலே இவளும் பேசுகிறபடி – தன்மகளின் ஸௌகுமார்யத்தை அநுஸந்தித்திருக்கும் திருத்தாயார் “ஐயோ! நடந்தாளே!“ என்கிறாள். நடந்து செல்லுகிறபோது முன்னும் பின்னும் ஆபரணஸந்நிவேச ஸௌந்தர்யாதிசயத்தைத் தான் காணப்பெறாத இழவும் தொனிக்கும். “நடந்தா“ என்கிற சொல் ஸம்பிரதாயத்தில் “எழுந்தருளினான்“ என்பதற்குப் பர்யாயமாக வழங்கும். ஆனதுபற்றியே ஈட்டிலருளிச் செய்வது பாரீர், “(நடந்தாள்) தன் பெண் பிள்ளையேயாகிலும் திருக்கோளூர் போகவென்று நாலடியிட்டவிவளை இங்ஙனல்லது சொல்லவெண்ணாதிறே. தன்மகளை எங்ஙனே கனக்க நினைத்திருக்கிறாள்தான்!. வயிற்றில் பிறக்கவுமாம், சிஷ்யர்களாகவுமாம், பகவத்விஷயத்தில் ப்ரத்யாஸந்நர் உத்தேச்யராமத்தனை.“

இவ்விடத்தில் ஓர் ஐதிஹ்யமும் ஈட்டிலுள்ளது, - “ஒரு நாள் நம்பிள்ளையை ஜீயர் கோஷ்டியிலே வைத்துப் போரக் கொண்டாடியருளி “தன் சிஷ்யனைத் தான் கொண்டாடா நின்றான்“ என்றிராதே கிழகோள், * கணபுரங் கைதொழும் பிள்ளையைப் பிள்ளையென்றெண்ணப் பெறுவரேயென்று பண்டு சொன்னாருமுண்டுகிடிகோள் என்றருளிச் செய்தார்.“

English Translation

All the good things she had, she would save for her Krishna, Now casting all aside, she has left home, and walked all the way to Tirukkolur, with people showering slander.  Alas!  She had no thought for us.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain