nalaeram_logo.jpg
(3522)

இன்றெனக் குதவா தகன்ற இளமான் இனிப்போய்,

தென்திசைத் திலத மனைய திருக்கோ ளூர்க்கே சென்று,

தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு,

நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.

பதவுரை

எனக்கு

-

தன்னைப்பிரிந்து நோவுபட்டுக் நடக்கிற எனக்கு

இன்று

-

இப்போது

உதவாது அகன்ற

-

உசாத்துணையாக இராதே கைகழித்துபோன

இள மான்

-

இளமான்போன்ற என்மகள்

போய்

-

வருந்தி வழிநடந்து போய்

தென்திசை திலதம் அனையை

-

தெற்குத் திசைக்கு அலங்காரமான

திருக்கோளூர்க்கே சென்று

-

திருக்கோளூரிலே பிரவேசித்து

இனி

-

அங்ஙனம் புகுந்த பின்பு தன்னை வசீகரிக்க அத்திருமாலினுடைய

திருக்கண்ணும் செம்வாயும் கண்டு

-

திருக்கண்களையும் செவ்விய அதரத்தையும் கண்டு

நெடு கண்கள் பனிமல்க

-

தனது விசாலமான கண்களில் ஆனந்த பாஷ்பம் நிரம்பப்பெற்று (ஹர்ஷப்ரகர்ஷத்தாலே)

நின்று நின்று நையும்

-

ஒன்றுஞ் செய்யமாட்டாதே சிதிலையாகி நிற்பள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (இன்றைக்கு) கீழ்ப்பாட்டில் “எங்ஙனே யுகக்குங்கொல்!“ என்றாள், அவள் உகக்கும்படியைப் பாசுரமிட்டுச் சொல்லுகிறது இப்பாட்டு. இப்படியிப்படி உகப்பள் என்கிறாள் திருத்தாய்.

என்னோடு கூடவிருந்து எனக்கு உசாத்துனையாயிருந்து என்னைத் தரிப்பிக்க வேண்டியவிவள் இந்நிலையிலே என்னைத் தனியாக விட்டுக் கைகழிந்தாளே யென்று நோகின்றாள் முதலடியில். ஈடு –“பிள்ளை பெற்று வளர்க்கிறது ஆபத்துக்கு உதவுகைக்கன்றோ, தன்னைப் பிரிந்த இத்தனிமைக்கும் இத்தசைக்கும் மேற்பட்ட எனக்கு ஒசாபத்து உண்டோ? இன்று எனக்கு உதவாதொழிவதே!“

என்னையும் உடன் கூட்டிக்கொண்டு போனால் நான் வரமாட்டேனென்பேனோ? அவளை பகவத்விஷயத்திலே அவகாஹிக்கும்படி செய்தவள் நானேயன்றோ. தனக்குக் கூட்டான வென்னை அயலாக நினைத்து என்னைவிட்டுத் தனியே அகன்று போகவேணுமோ? என்கிற கருத்து முதலடியில் தொனிக்கும்.

தென்திசைத் திலதமனைய திருக்கோளூர்க்கே சென்று முற்காலத்தில் தென்திசையானது மிலேச்சபூமி யென்று ஆர்யர்கள் இகழ்ந்த்தாயிருக்குமாம், அத்திசைதானே திருக்கோளூர் முலான திவ்யதேசங்கள் தோன்றப் பெறுகையாலே பரமபவித்திரமாயிற்றாம். இங்கே ஈடு – “தெற்குத்திக்கு என்று கொண்டு ஆரியர்கள் இகழ்ந்த ம்லேச்ச பூமியிறே, இங்ஙனேயிருக்கச் செய்தே ஓர் ஆபரணந்தானே எல்லாவாபரணங்களுக்கும் நிறங்கொடுக்க வற்றாமாப்போலே திருக்கோளூருண்டாகையாலே திக்காக ச்லாக்யமானபடி. தக்ஷிணா திக் க்ருதாயேக சரண்யா புண்யகர்மணா * என்னுமாபோலே“.

“தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு நெடுங்கண்கள் பனிமல்கவே நின்று நின்று நையும்“ – தன் மகள் அங்கே யிருக்கும்படி இதுவாயிற்று. * பெருங்கேழலார் தம்பெருங்கண்மலர்ப்புண்டரீகம் நம்மேலொருங்கே பிறழவைத்தார். * (திருவிருத்தம்) என்று தானே பேசும்படி தன்னை விசேஷித்து விஷயீகரித்த திருக்கண்களை முந்துற முன்னம் நோக்குவள், அபிமத ஜநதர்சநாநந்த வேகத்தாலே அர்ச்சாவதாரஸமாதியைக் கடந்து விம்மி வெளிவிழுகின்ற அவ்யக்த மதுர மந்த ஹாஸவிலாஸம் பொங்குமிடமான செவ்வாயைப் பிறகு காண்பாள், ஆக இரண்டு திவ்யாவயவங்களையுங்கண்டு, மஹாரவாஹத்திலே இளகின கரைபோலே உடை குலைப்பட்டு நைந்து கொண்டிருப்பள், இதுவன்றோ, அவளிருக்கும்படி, அது காணப்பெற்றிலேனே! என்றாளாயிற்று.

English Translation

My little fawn is of no use to me anymore. She has left me and gone to Tirukkolur where her Lord stands as a Tilaka to the South, Would she be standing in a swoon, -with tears in her eyes, -waiting to see her Lord's auspicious red eyes and lips?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain