nalaeram_logo.jpg
(3518)

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் அவனுடைய

பேரும் தார்களுமே பிதற்ற, கற்பு வான் இடறி,

சேரும் நல் வளம் சேர் பழனத் திருக்கோளூர்க்கே

போரும்கொல், உரையீர், கொடியேன் கொடி-பூவைகளே?

பதவுரை

பூவைகளே

-

பூவைப்பறவைகளே!

ஊரும் நாடும் உலகமும்

-

தானிருந்த ஊரும் நாடும் உலகமுமெல்லாம்

தன்னைபோல்

-

தன்னைப்போலவே

அவனுடைய

-

எம்பெருமானுடைய

பேரும் தார்களுமே பிதற்ற

-

திருநாமங்களையும் சின்னங்களையுமே பிதற்றும்படி (செய்யுமவளான)

கொடியேன் கொடி

-

பாவியேனுடைய மகள்

வான் கற்பு இடறி

-

சிறந்த ஸ்த்ரீத்வமர்யாதையைக்கடந்து

நல் வளம் சேர் பழனம்

-

விலக்ஷணமான வனம் பொருந்திய நீர்நிலைகளையுடைத்தான்

திருக்கோளூர்க்கே சேரும்

-

திருக்கோளூரிலேயே சென்று சேர்ந்திருப்பன்,

போரும் கொல்

-

(உங்களைநினைத்தாகிலும்) திரும்பிவருவாளோ

உரையீர்

-

சொல்லுங்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஊரும் நாடும்) பாராங்குச நாயகியின் லீலோபகரணங்களுள் ஒன்றான பூவையென்னும் பறவைகளை நோக்கித் திருத்தாயார் கேட்கிறார் என் பக்கலில் நசையற்று ஒழிந்தாளாகிலும் உங்களை நினைத்தாவது என்மகள் இங்கு மீண்டு வரக்கூடுமோ? சொல்லுங்கள் என்கிறாள். பூவைப்பறவை விடையளிக்க மாட்டாத அஃறிணையென்ற்றிந்தும் மதிகலங்கிக்கேட்கிறபடி.

ஆழ்வாருடைய நித்யக்ரமத்தைச் சொல்லுவன முன்னடிகள். தான்பிறந்த வூரிலுள்ளாரும் அவ்வூருக்குத் தலையான நாட்டிலுள்ளாரும், கீம்பஹுநா? இவ்வுலகத்திலுள் ரெல்லாருமே தன்னைப்போல் எம்பெருமானுடைய திருநாமங்களையும் லக்ஷணங்களையும் இடையறாது சொல்லிக்கொண்டிருக்கும்படி செய்து போருமவள் என்மகள் என்கிறாள். இப்போது இது சொல்லுகைக்கு ப்ரஸக்தி யென்? திருக்கோளூரிலே போனவள் திரும்பி வருவளோ? என்று கேட்கிற திருத்தாயார், இங்கிருக்கிற நாளில் இவள் செய்து கொண்டிருக்கும்படியைச் சொல்லுவானேன்? என்னில், தானிருந்த தேசத்தை விட்டு வேறோரிடம் போவது போலேயாக்குகையாலே அது இங்கே குறையற்றிருக்க எதுக்குப் போனாள்? என்னைக்காக இங்கே ஈடு, “இவ்விருப்பில் என்ன குறையுண்டு? இங்கே ஒரு குறையுண்டாய் அங்கே அது தீரப்போனாளோ? இங்கே * போதயந்த? பரஸ்பரம்பண்ணுகைக்கு ஆளல்லாமே ஒரு தேசவிசேஷம் தேடிப்போனாளோ?

ஆறாயிரப்படியில் – “திருநாமங்களையும் திவ்ய சிஹ்நங்களையுமே சொல்லிக் கூப்பிடும்படியாகக் கூப்பிடுகிறவிவள்“ என்று அருளிச்செய்திருக்கக் காண்கையாலும், இருபத்தினாலாயிரப்படியிலும் ஈட்டிலும் “சொல்லும்படி பண்ணி“ என்று அருளிச்செய்திருக்கங் காண்கையாலும் “பிதற்ற“ என்னும் செயவெனெச்சத்திற்கு “பிதற்றும்படி பண்ணிவைத்து“ என்கிற வரையில் அர்த்தம் கொள்ளவேணும்.

கற்புவானிடறி – வான் கற்பு இடறி என்று மொழிமாற்றுப் பொருள் கொள்வது. திவ்யமான தன்னுடைய ஸ்த்ரீத்வ மர்யாதையை அதிக்ரமித்துச் சென்று என்றபடி.

நல்வளஞ் சேர்பழனத் திருக்கோளூர்க்கே சேரும் கொடியேன்கொடி போருங்கொல் உரையீர் – சென்று சேர்ந்த விடமான திருக்கோளூரானது நீர்வளமும் நிலவளமும் மற்றுமுள்ள வளங்களும் பொருந்திய தாகையாலே என்மகள் அங்கேயே ஈடுபட்டுக்கொண்டு கிடப்பாளோ? அன்றி உங்களை நினைத்தாகிலும் இங்கே வந்து சேருவளோ? என்று கேட்டாளாயிற்று.

ஊரும் நாடுமுலகமும் என்றதற்கு ஸ்வரப தேசார்த்தமாவது, ஊரார் என்பது ஆத்ம ப்ராப்திகாமரான கேவலரை, நாட்டாரென்பது புத்ரபச்வந்நாதி ரூப இஹலோக ஐச்வர்ய காமரை, உலகர் என்பது ஸ்வர்க்காதி பரலோக ஐச்வர்ய காமரான ஸ்வதந்த்ர்ரை. ஆசார்ய ஹ்ருதயத்தில் “ஊரார் நாட்டாருலகர் கேவலைச்வர்யகாம் ஸ்வதந்த்ரர்“ என்ற சூர்ணை இங்கே அநுஸந்தேயம்.

English Translation

Throwing her grace to the winds, -like herself, making the town and country prate his names and symbols, -my tender fawn must have reached Tirukkolur of fertile fields, Alas, hapless me Tell me. O Mynahs! Will she return?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain