nalaeram_logo.jpg
(3511)

கற்பகக் காவன நற்பல தோளற்கு,

பொற்சுடர்க் குன்றன்ன பூந்தண் முடியற்கு,

நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு,என்

விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.

பதவுரை

கற்பகம் கா அனநல் பல தோளற்கு

-

கற்பகச்சோலைபோன்ற நல்ல பல திருத்தோள்களையுடையவனும்

சுடர் பொன் குன்று அன்ன பூ தண் முடியற்கு

-

சுடர்மிக்க பொற்குன்றம் போன்ற மிகவழகிய திருவபிஷேகத்தை யுடையவனும்

நல் பல தாமரை நான் மலர் கையற்கு

-

அப்போதலர்ந்த தாமரைப் பூப்போன்று விலக்ஷணமான பல திருக்கைகளையுடையவனுமான எம்பெருமான் திறத்திலீடுபட்டதனால்

என் வில் புருவம் கொடி

-

வில்போன்ற புருவத்தை யுடையளான என் பெண்கொடி

தோற்றது

-

இழந்தது

மெய்

-

தன்னுடம்பையாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கற்பக்காவன) இப்பாட்டில் “தோற்றது மெய்யே“ என்று, தன்மகள் சரீரத்தை இழந்தாளாகச் சொல்லுகிறாள். சரீரம் தன்வசமாயிருக்கையன்றியே பரவசமாகப் பெற்றாளென்றபடி. அதாவது - * காலழும் நெஞ்சழியும் கண்சுழலும் என்னும்படியான நிலைமையை எய்தினாளென்கை.

கற்பகக்காவன நற்பல தோளற்கு – கற்பகக்கா – கற்பகச்சோலை, அன என்றது ‘அன்ன‘ என்றபடி? (தொகுத்தல் விகாரம்) கற்பகச் சோலையையொத்த நல்ல பல தோள்களையுடையவன் என்றாறு. ஸர்வஸ்வதானம் பண்ணிப் புகழ்படைத்த திருக்கைகளாகையாலே கற்பகச் சோலையோடு ஒப்பிடப்பட்டன வென்க. * தோள்களாயிரத்தாய் * என்னும்படியாக, அடியார்களை வாரியெடுத்து அணைக்கைக்குப் பல்லாயிரம் திருத்தோள்கள் உண்டாயிருக்க பாவியனைத் தழுவாதே உபேக்ஷிக்கிறபடி என்னே! என்று நைகின்றாள்.

பொற்சுடர்க்குன்றன்ன பூந்தண்முடியற்கு – ஒளியையுடைய பொன்மலைபோலேயாய் ஸ்ப்ருஹணீயமான திருவபிஷேகத்தை யுடையவன். * ஆதிராஜ்யமதிகம் புவநாநாம் ஈச தேபிசுநயந் கில மௌலி * என்கிறபடியே உலகங்களுக்கெல்லாம் ஒர தனி நாயகனாயிருக்கின்ற தன்மைக்கு ஸூசகமாகத் திருவபிஷேகமணிந்திருந்து என்னொருத்தியை உபேக்ஷித்திருத்தல் தகுதியோ! என்கிறா ளென் மகள்.

நற்பலதாமரை நாண்மலர்க்கையற்கு – நல், பல என்பவை கைக்கு விசேஷணம் நிலக்ஷணமாயும் பலவாயும் தாமரை மலர்போன்றனவாயுமிருக்கிற திருக்கைகளுடையவன். * பறவையேறு பரம்புருடா! நீ யென்னைக் கைக்கொண்டபின் * என்கிறபடியே என்கையைப் பிடிப்பதற்காகவன்றோ அவன் இப்படி விலக்ஷணமான திருக்கைகள், படைத்தது! என்கிறாளென் மகள்.

என்விற்புருவக்கொடி – கொடியென்றது பெண்ணுக்கு வாசகம், கொடிபோன்றவன் என்கை வில்போன்ற புருவத்தையுடைய என் மகள் என்றதாயிற்று. ஆழ்வார் புருவம் நெறித்தவிடத்தே எம்பெருமான் காரியம் செய்யவேண்டும்படி யிருக்கை. அதாவது – ஆழ்வார்ஸம்பந்தமுடையார் பக்கலிலே எம்பெருமானுடைய விஷயீகாரம் செல்லும்படியாகை. * யத்ப்ரூபங்கா, ப்ரமாணம் * என்னுமாபோலே.

English Translation

My tender daughter with bow-like eyebrows has lost her body, -to the Lord of Kalpa-tree-like arms, who wears a beautiful crown of radiant gold; his hands are like freshly blossomed lotuses.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain